"ஹனிமூன்".. தயவுசெஞ்சு அப்படி மட்டும் போடாதீங்கடா? ரவீந்தர் - மகாலட்சுமி போட்ட போட்டோ.. என்னாச்சு?
சென்னை: நானும் மகாலட்சுமியும் ஹனிமூனுக்கு ஒரு தனித்தீவுக்கு தனி விமானத்தில் போவதாக மட்டும் போட்டுவிடாதீங்க என ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலங்கியுள்ளார்.
தயாரிப்பாளர் விமர்சகர் ரவீந்தர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை காமெடியாக விமர்சித்த போதுதான் இவர் சமூகவலைதளங்களில் பிரபலமடைந்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணத்தை ரவீந்தர் விமர்சித்திருந்தார்.
பதிலுக்கு வனிதாவோ ரவீந்தரை உடல் ரீதியாக கேலியும் கிண்டலும் செய்திருந்தார். இப்படியே இருவரும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து கொண்டனர். இந்த நிலையில்தான் கடந்த 1 ஆம் தேதி ரவீந்தர் திடீரென மகாலட்சுமியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

புகைப்படங்கள்
இதற்கான புகைப்படங்களை ரவீந்தரும் மகாலட்சுமியும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். இது திரையுலகினருக்கே அதிர்ச்சியாக இருந்தது. காரணம் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் விஷயம் யாருக்குமே கசியவில்லை. அன்பே வா சீரியலில் நடித்து வரும் மகாலட்சுமி திருமணத்திற்கு முதல் நாள் மெஹந்தி வைக்கும் நிகழ்வுக்கு செல்வதற்காக இயக்குநரிடம் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தாராம்.

சீக்ரெட்டான கல்யாணம்
இவர்களது கல்யாணம் சக நடிகர், நடிகைகளுக்குக் கூட இவர்களாக அறிவிக்கும் வரை தெரியாதாம். அந்த அளவுக்கு படு சீக்ரெட். ரவீந்தரை மனசாட்சியே இல்லாமல் பாடி ஷேமிங் செய்யும் நெட்டிசன்கள் அவருக்கு இவ்வளவு அழகான பொண்டாட்டி கிடைத்ததை எண்ணி வயிறு எரிகிறார்களாம். 10 நாட்களாக இவர்களது திருமணம் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

என்னாது 52 வயதா
இந்த நிலையில் ரவீந்தருக்கு 52 வயது என்றும் மகாலட்சுமிக்கு 30 வயது என்றும் ஒரு வதந்தி கிளம்பி வருவதாக ரவீந்தரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அது தவறு என கூறிய அவர் இருவருக்குமான உண்மையான வயதையும் தெரிவித்திருந்தார். அது போல் மகாலட்சுமிக்கு 300 பட்டுப்புடவைகளையும் லட்சக்கணக்கான பங்களாவையும் பரிசாக தந்ததாக வரும் தகவல்களையும் ரவீந்தர் மறுத்துள்ளார்.

விமான நிலையத்தில்
தான் எது செய்தாலும் அதை கன்டென்ட்டாகவும் டெம்பிளேட்டாகவும் மாற்றும் நெட்டிசன்களுக்கு அவர் ஒரு காமெடியாக வேண்டுகோளையும் வைத்துள்ளார். இன்றைய தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமியுடன் விமான நிலையத்தில் இருப்பது போன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

தேனிலவு இல்லை
அதற்கு கேப்ஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ஒரு தீவுக்கு தேனிலவுக்கு செல்கிறார்.

தயவு செஞ்சு அப்படி போட்ராதீங்கடா
திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் அருகே குலதெய்வம் கோயிலுக்குத்தான் போறேன். இந்த புகைப்படத்தை ஸ்கிரிப்ட்டாக செய்துவிடாதீர்கள் என காமெடியாக கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறியதுடன் தலைவா நாங்க பேசாமல் இருந்திருப்போம், ஆனால் நீங்களே கன்டென்ட்டை கொடுத்துவிட்டீர்களே என கலாய்க்கிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications