பாவம் மகாலட்சுமி! ஏதோ தப்பு செஞ்சுட்டாங்க.. அதுக்காக ரவீந்தர் ஊருக்கே சொல்வாரா? நெட்டிசன்கள் கேள்வி
சென்னை: மகாலட்சுமி செய்யும் சமையலை பார்த்தாலே போதும் சந்தேகமே இல்லாமல் ரவீந்தர் இளைத்துவிடுவார் போலயே!
சினிமா நடிகர், நடிகைகளின் திருமணத்தை போன்று இன்றளவும் பேசப்படும் திருமணம் என்றால் அது தயாரிப்பாளர் ரவீந்தர்- சீரியல் நடிகை மகாலட்சுமி ஆகியோரின் திருமணம்தான்.
இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். எளிய முறையில் காதும் காதும் வைத்தபடி திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில மணிநேரங்களில் இவர்கள் திருமணத்தை சமூகவலைதளங்கள் மூலம் அறிவித்தனர்.

இரண்டாவது திருமணம்
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதாலும் ரவீந்தர், வனிதா- பீட்டர் பாலின் திருமணத்தை விமர்சித்ததால் இவர்களுடைய திருமணமும் பெரிதும் பேசப்பட்டு வந்தது. எந்த சேனல்களை பார்த்தாலும் இவர்களுடைய இன்டர்வியூக்களாகவே இருந்தது. இது போன்று டிரென்ட்டை ரவீந்தர் - மகாலட்சுமியே எதிர்பார்க்கவில்லை.

உடல்மொழி
ரவீந்தரின் உடல்மொழியை ஏராளமானோர் கிண்டல் செய்து கொச்சையான விமர்சனங்களை முன் வைத்தனர். அவற்றிற்கும் அவர்களுடைய ரூட்டிலேயே போய் பதிலடி கொடுத்தார் ரவீந்தர். அன்று முதல் இருவரும் வாழ்ந்து காட்டுவோம் என சவால் விடுத்துள்ளார்கள். அவ்வப்போது இருவரும் தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஆடம்பர கார்
அந்த வகையில் அண்மையில் இருவரும் ஆடம்பர கார் ஒன்றை வாங்கியது குறித்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். இதற்காக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அது போல் தலை தீபாவளி கொண்டாட்ட படங்களையும் வெளியிட்டிருந்தனர். அது போல் சன் டிவி அன்பே வா சீரியல் ஷூட்டிங் சென்ற மகாலட்சுமிக்கு அவருடைய மாமியார் சாப்பாடு செய்து ரவீந்தரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். சாப்பாடு நன்றாக இருந்ததாக மகாலட்சுமி தெரிவித்திருந்தார்.

ரவீந்தர்
இந்த நிலையில் தற்போது ரவீந்தர் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை போட்டுள்ளார். கணவருக்காக ஆசையாக இரு முட்டைகளை வேக வைத்து கொடுக்க மகாலட்சுமி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து முட்டைகளை வேக வைத்தார். அப்போது அந்த முட்டை வைத்ததை மறந்திருப்பார் போல!, ஸ்டவ்வை அணைக்காததால் முட்டை வேக வைப்பதற்காக வைத்த தண்ணீர் சுண்டி முட்டையும் கருகிவிட்டது. பாத்திரமும் கருகிவிட்டது. இதைத்தான் ரவீந்தர் புகைப்படம் எடுத்து கிண்டல் செய்துள்ளார்.

வேகவைத்த முட்டை
அவருடைய பதிவில் வேகவைத்த முட்டை இத்தகைய அளவுக்கு சேதாரத்தை (கருகி) சந்திக்கும் என்பதை என் வாழ்வில் பார்த்ததே இல்லை. மகாலட்சுமி நீ என்னை எப்படியும் இளைக்க வைத்துவிடுவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புது வாழ்க்கை, என் மனைவி நல்ல சமையல் என போஸ்ட்டில் போட்டுள்ளார். இப்படி கருகும் அளவுக்கு சமைத்தால் அதை ரவீந்தர் எப்படி சாப்பிடுவார், சாப்பிடாததால் அவரது உடல் எடை குறையும். இதைத்தான் மகாலட்சுமி என் எடையை குறைத்துவிடுவார் என கிண்டலாக தெரிவித்துள்ளார். ஆனாலும் புதுமனைவி ஏதோ தவறு செய்துவிட்டார், அதை இப்படித்தான் ஊருக்கும் பட்ட பரிவர்த்தனமாக காட்டுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications