அடடா... உண்மையான காதல் சும்மா கும்முன்னு எழுந்து நிக்குதே....!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் காவ்யாவின் உண்மையான காதல் இப்போது பேச ஆரம்பிச்சு இருக்கிறது.

காவ்யா மதன் காதலை மதனின் அம்மா சதி செய்து பிரிச்சுடறாங்க. மதனும் அம்மாவின் சதியை அறியாமல் சங்கவியை கல்யாணம் செய்துக்க சம்மதிக்கறான்.

சங்கவி மதன் மனசு மாறிடுவானோன்னு சைக்கோ மாதிரி நடந்துக்கறா. இந்த சமயத்தில்தான் மதனுக்கு பைக்கில் சின்ன ஆக்சிடென்ட் ஆகிறது.

மதன்

மதன்

மதனுக்கு இடுப்புக்கு கீழே எந்தவித உணர்ச்சியும் இல்லைன்னு சொன்னவுடனே, மதனுக்கு நிச்சயம் செய்திருந்த சங்கவி மதன் எனக்கு வேணாம்னு சொல்லிடறா.இதே சங்கவிதான் காவ்யாவுடன் மதன் எனக்குத்தான் என்று சண்டை போட்டவ.

சங்கவியின் அப்பா

சங்கவியின் அப்பா

சங்கவியின் அப்பா மதனுக்கு இனிமே குணமாகாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால இனிமே என்னை சம்மந்தின்னு கூப்பிடாதீங்க.. .நீங்களா உங்க மகனோட நிலை தெரிஞ்சு உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லி இருக்கணும்.அதை விட்டுட்டு கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு கேட்கறீங்கன்னு கத்தறார்.

மதன் மனசை

மதன் மனசை

என்ன சம்மந்தி இப்படி பேசறீங்க...உங்க பொண்ணு சங்கவிக்காக மதன் காவ்யா மேல வச்சிருந்த காதலை மறக்க நான் என்னவெல்லாம் செய்தேன்...அதை எல்லாம் மறந்துட்டீங்களான்னு கேட்கறாங்க சகுந்தலா தேவி. வரிசையா தான் மதனுக்கு தெரியாம செய்த அத்தனை தில்லு முல்லு வேலைகளையும் சொல்லிடறாங்க.

கேட்டுடறான் மதன்

கேட்டுடறான் மதன்

மதன் அம்மா பேசிக்கொண்டு இருப்பதை கேட்டுடறான்...நானே சங்கவியோட காதல் உண்மையானதான்னு தெரிஞ்சுக்கதான் இடுப்புக்கு கீழே உணர்ச்சி இல்லைன்னு டாக்டரை சொல்ல சொன்னேன்.. இப்போ நீங்களே இப்படிப்பட்ட காரியத்தை செய்து...என் காவ்யாவை கல்யாணம் செய்துக்க விடாம பண்ணிட்டீங்களே அம்மான்னு மனசுக்குள்ள அழறான்

தன்வந்திரி பூஜை

தன்வந்திரி பூஜை

மகள் காதலிச்ச பையன் குணமாகணும்னு அழகம்மை கோயிலில் தன்வந்திரி பூஜை செய்துகிட்டு இருக்காங்க.அப்போ காவ்யாவுக்கு மதனின் நண்பன் கிட்டே இருந்து போன் வருது. மதன் உன்னை பார்க்கணும்னு சொல்றான்னு.

மதனின் நிலைமை

மதனின் நிலைமை

மதனின் நிலைமையை பார்த்து காவ்யா கதறி அழறா..உனக்கு காலுக்கு காலா நான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே மதன் எழுந்து நிக்கறான். என்னை ஏமாத்தினியான்னு அவனை சுத்தி சுத்தி துரத்தறா... கடைசியில் இருவரும் கட்டிக்கொண்டு நிக்கறாங்க.

உண்மை காதல் இங்கே எழுந்து நிக்குதே... சும்மா இல்லை கட்டிக்கிட்டு நிக்குதே...!

நீட் தியாகம்

நீட் தியாகம்

காவ்யா மதனுக்கு விபத்துன்னு கேள்விப்பட்ட உடனே நீட் தேர்வை கூட எழுதாம வந்துட்டா. ஆனா...காதலுக்காக எல்லா பொண்ணுங்களும் இப்படி செய்யணும்னு உதாரணமா எடுத்துக்க கூடாது.

விட காதல்

விட காதல்

நீட் தேர்வை விட காதல் முக்கியம் இல்லை என்று நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.அவரவர் சூழ்நிலைகள்..பெற்றவர்களுக்கு உண்மையாக இருப்பது எப்படி என்று மட்டும் பாருங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+