Run serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...!
சென்னை: சீரியல் நடிகர் கிருஷ்ணாவுக்கு யாருடன் ஜோடி சேர்ந்து நடித்தாலும் குடும்பத்தில் பிரச்சனை வருவதால் கடைசியில் ரியல் ஜோடியுடன் சேர்ந்து நடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ஆனந்த புரத்து வீடு படத்தில் நடிக்கும்போது காதல் வயபட்டு திருடா திருடி நடிகை சாயா சிங் நடிகர் கிருஷ்ணா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிருஷ்ணா பெரிதாக பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தவர், விகடன் டெலிவிஸ்டாஸ் தெய்வமகள் சீரியல் மூலம் பெரும் புகழ் அடைந்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் சத்யா பிரகாஷ் ஜோடி சீரியல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் புகழ் அடைந்தது. நகைக் கடைத் திறப்பு விழாக்கள் மேடைகள் என்று இந்த ஜோடிகளை அழைத்து கடைகள் கல்லா கட்டின.

ஜோடி பொருத்தம்
சீரியலில் இந்த ஜோடி பொருத்தம் பிரமிக்க வைத்த நிலையில், வீட்டில், பிளவு, மன வருத்தம் என்றும் கிருஷ்ணா பல இன்னல்களுக்கு உள்ளானார். என்றாலும் சாயா சிங்கை சமாளித்து தெய்வ மகள் சீரியலை சமாளித்து தராசின் சம நிலை முள்ளாக நின்று நடித்தார்.

கிருஷ்ணா நல்லவர்
கிருஷ்ணா பெண்களுக்கு பிடித்த மாதிரியான நல்ல குணமானவர். இதனால் வாணி போஜனுக்கு கிருஷ்ணா மனதுக்கு பிடித்தமானவராக மாறிப் போயிருந்த நேரத்தில் சாயாசிங், இதை தவறாக நினைக்கும் மன போக்குக்கு மாறி இருந்தார்.

மன கசப்பு
இதனால் வீண் மன உளைச்சல், மன கசப்பு என்று இருந்த நேரத்தில்தான் எதற்கு வீண் வன்பு என்று விகடன் டெலிவிஸ்டாஸ் அவசரஅவசரமாக சீரியலை முடித்துக் கொண்டது.இதன் பிரதி பலிப்பு சீரியலில் கூட தெரிந்தது. தாடி வளர்வதற்கு கூட கால அவகாசம் கொடுக்காமல் காமெடியில் கிளைமேக்ஸ் காட்சிகள் முடிந்தன.

ரன் சீரியல்
அடுத்து ரன் சீரியலில் கிருஷ்ணா நடிக்க இவருடன் சரண்யா ஜோடி சேர்ந்திருந்தார். சரண்யாவுக்கு சாயாசிங் அதே டார்ச்சரை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தொல்லை தாங்க முடியாமல்தான் இனி வேறு நடிகரையும் தேர்ந்தெடுக்க முடியாமல் ரியல் ஜோடியையே நடிக்க வைத்து உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications