குக் வித் கோமாளியாமே...பாவம் ரேகாவும், வனிதா விஜயகுமாரும்!
சென்னை: விஜய் டிவி புதுசு புதுசா ஷோக்களை ஆரம்பிக்கும். சீக்கிரமே அதை முடிச்சும் வச்சுடும். அடுத்தடுத்து சீசன்கள் தொடர்ந்து இடைவெளி விட்டு இடைவெளி விட்டு ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கும்.
அப்படி ஒரு பது வித சமையல் நிகழ்ச்சியை ஆரம்பிக்க உள்ளது விஜய் டிவி. குக் வித் கோமாளி என்று அதற்கு ஒரு பெயரையும் சூட்டி இருக்கிறது.
எந்த ஷோ நடத்தினாலும் அதில் நகைச்சுவையும் கலந்து இருக்க வேண்டும் என்பது விஜய் டிவியின் ஃபார்முலா போலும்.

கோமாளி செலிபிரிட்டி
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு நகைச்சுவையாளர்கள் என்று பெயர் பெற்று விஜய் டிவியில் வலம் வரும் கலைஞர்கள் பலர். இவர்களை சும்மா விட்டு வைக்க கூடாது என்று முயற்சி எடுத்து குக் வித் கோமாளி ஷோவை ஆரம்பிக்க உள்ளது விஜய் டிவி.

நகைச்சுவை கலைஞர்
முதல் ப்ரோமோ நடிகை ரேகா..அதாவது கடலோர கவிதைகள் புகழ் நடிகை ரேகாவுடன் ஒரு நகைச்சுவை கலைஞர் பங்கு பெறுவது போல வெளியாகி உள்ளது.இதில் ரேகா அழகாக கொஞ்சம் இளமையாகவும் இருக்கிறார்.உன்னை வச்சுக்கிட்டு எப்படி எல்லாம் சமையல் கத்து தர்றதுன்னு ரேகா சொல்லிட்டு இதை கிள்ளிப் போடுன்னு சொல்றாங்க.

உடன் இருக்கும்
ரேகாவுடன் இருக்கும் விஜய் டிவியின் நகைச்சுவை கலைஞர் ரேகாவை கிள்ளி விட ஆ..ஐயோ என்று அலறுகிறார்.அவர் சொன்னது காய்ந்த மிளகாயை கிள்ளி போடு என்று. எதையாவது இப்படி நகைச்சுவையுடன் சொல்லி,நிகழ்ச்சியை நடத்திவிடும் விஜய் டிவி இந்த ஷோவை ஹிட்டாக்குமா என்று பார்க்கலாம்.

பத்த வை
வனிதா விஜயகுமாருடன் விஜய் டிவியின் இன்னொரு நகைச்சுவை கலைஞர் குக் வித் கோமாளியில் பங்கு பெறுகிறார். அதாவது இவர்கள் எல்லாம் கோமாளிகள் போல எதையாவது செய்வார்களாம்.. அப்படி மும்முரமாக சமையலில் இருக்கும் வனிதாவிடம், எதாவது எனக்கு வேலை சொல்லுங்கள் என்று கேட்க, பத்த வை என்கிறார் வனிதா.
இவர் உங்களைப் பத்தி அதை சொல்றாங்க.. இதை சொல்றாங்கன்னு பத்த வைக்கிறார்.பெயர் போல நிகழ்ச்சியும் கோமாளித் தனமாக இல்லாமல் இருந்தால் சரி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications