ஏங்க வைத்த செல்வராகவன்... காணாமல் போன சோனியா அகர்வால்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடலான காதல் கொண்டேன் படத்தின் பாடலை எடுத்து ஒரு ஜோடி நடனம் ஆடினார்கள்.
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் மட்டும் அல்ல, அந்த படத்தில் வரும் கண்ணோடு கலந்திடு, தேவதையை கண்டேன் ஆகிய பாடல்களுக்கும் அந்த ஜோடி டான்ஸ் ஆடினார்கள்.
இதை ஜீ தமிழ் டிவியின் ட்வீட்டர் பதிவில் பார்க்கையில் செல்வராகவன் இப்படி இன்னும் படம் எடுக்க மாட்டாரா என்று ஏங்க வைத்துவிட்டார்.எத்தனை அருமையான நடிகை சோனியா அகர்வால்.. அவரின் நடிப்புலக வாழ்க்கை எப்படியோ போய்விட்டதே என்கிற கவலையும் வருகிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ்
ஜீ தமிழ் டிவியின் டான்ஸ் ஜோடி டான்ஸ் வித்தியாசமான இளம் திறமை சாலிகள் கலந்துக்கொள்ளும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கிறது. நடுவர்களாக நடிகை பிரியா ராமன், பூஜா இவர்களுடன் கடந்த இரு வாரங்களாக ஓவியாவும் இணைந்துள்ளார். முன்பு பிரியாமணி இருந்த இடத்தில் இப்போது ஓவியா. நிகழ்ச்சியை தீபக், பெர்லி இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

காதல் கொண்டேன்
நிகழ்ச்சியில் ஒரு பட பாடலாக கதையும் சொல்லி பாடலுக்கும் நடனம் ஆடி டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் களம் இறங்குகிறார்கள் போட்டியாளர்கள். காதல் கொண்டேன் பாடல் மற்றும் படத்தின் கதையை ஒரு ஜோடி டான்ஸ் ஆடி, புரிய வைக்கிறார்கள். உண்மையில் பாடலுக்கான டான்ஸ் மற்றும் கதையின் சூழலை பார்க்கும்போது செல்வராகவன் இது போன்ற காதல் கதையை திரும்பவும் எப்போது தருவார் என்கிற ஏக்கம் வருகிறது.

நடிகை சோனியா அகர்வால்
நடிகை சோனியா அகர்வால் செல்வராகவனின் படங்களில் மட்டும் சிறப்பு அழகாக தெரிந்தது ஏனோ என்று எண்ணினாலும், மற்ற படங்களிலும் அவர் நன்றாகவே நடித்து வந்த நேரத்தில் எதற்காக திரையுலகில் இவர் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்கிற கேள்வி வருகிறது. தொலைக்காட்சி சீரியல் பக்கம் போனார். அதிலும் அவர் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

மிஸ்டர் பெர்ஃபெக்ட்
இயக்குநர் செல்வராகவன் எந்த கதையை சொல்ல வந்தாலும் அதை தனது திரைப்படங்களில் தெளிவாக சொல்லி விடுவதில் கெட்டிக்காரர். இதனால் இவருக்கு மிஸ்டர் பெர்ஃபெக்ட் என்று கூட ஒரு பெயர் உண்டு. இப்படி பழைய நல்ல நினைவுகளில் இதுபோன்ற டான்ஸ் நிகழ்ச்சிகள் நம்மை ஆழ்விக்கிறது என்பதற்காக கூட இது மாதிரி நிகழ்ச்சிகளை மனம் ஒன்றி பார்க்கலாம். நமக்குப் பிடித்த நினைவுகளில் ஆழ்ந்து போகலாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications