காரு மேல யாரு.. ரேஷ்மா தாறுமாறு.. சுட்ரப் போகுது.. ஓடி வந்த ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நாங்க எல்லாம் சும்மா அப்படி வந்து உட்கார்ந்தாலே தாறுமாறு தான் என பார்க் பண்ணியிருக்கும் கார் மீது ஒய்யாரமாக அமர்ந்து கலக்கல் போஸ் கொடுத்துள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

அடிக்கிற வெயிலுக்கு இப்படி வந்து கார் மீது உட்கார்ந்து இருக்கீங்களே சுடலையா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

உங்களுக்கு சுடுகிறதோ இல்லையோ, நீங்க உட்கார்ந்து காருக்கு சூடு ஏறிட போகுது என்றும் பாடாய் படுத்தி வருகின்றனர்.

ஒரே சீன்தான்

ஒரே சீன்தான்

திரைப்படங்களில் பொதுவாக ஒரு சீன்களில் வந்தாலும் ஒரு சிலர் மட்டும்தான் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விடுகின்றனர். அந்தவகையில் ரேஷ்மா பசுபுலேட்டி கொஞ்சம் ஸ்பெஷல் தான். அவர் ஒரு சில திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தாலும் இவருடைய பெயரை சொன்னதுமே டக்கென்று ஞாபகத்திற்கு வரும் வகையில் கேரக்டரில் தான் நடித்து இருக்கிறார் .அதுவும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் பட்டைய கிளப்பி இருப்பார் .

புஷ்பா புருஷன் யாருப்பா

புஷ்பா புருஷன் யாருப்பா

இந்த கேரக்டருக்கு இவர் பொருத்தமா அல்லது இவருடைய கேரக்டருக்கு அந்தப் பெயர் பொருத்தமா என்று தெரியாவிட்டாலும் ரசிகர்களின் மனதில் பதிந்து விட்டார். அதுதான் உண்மை .அதனால்தான் தற்போது இவர் பல படங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளிலும் தற்போது சீரியல்களிலும் நடித்து இருந்தாலும் இவருக்கு புஷ்பா கேரக்டர் பொருத்தமாக இருக்கிறது.

சும்மா அதிருதுல்ல

சும்மா அதிருதுல்ல

அதுவும் பெயரைச் சொன்னதுமே அனைவருக்கும் தெரிந்துவிடுகிறது. நான் நடித்தால் திரைப்படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று இருக்காமல் இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது சீரியல்களிலும் நடித்து கொண்டிருக்கிறார் .அதனாலே இவர் பொழைக்க தெரிந்த ஆளுதான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இவர் சீரியல்களில் வாணி ராணி சீரியலில் தேவி கேரக்டரில் சன் டிவியில் அடியெடுத்து வைத்திருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியல்

அதற்கு பிறகு தொடர்ந்து தற்போது வரைக்கும் சீரியல்களில் செம பிசி தான் .மரகத வீணை, பத்துமணி கதைகள் ,உயிர்மெய் ,என் இனிய தோழியே ,சுந்தரகாண்டம், ஆண்டாள் அழகர் ,வம்சம், பகல்நிலவு ,உயிரே, அன்பே வா ,கண்ணான கண்ணே ,வேலம்மாள் இப்போ பாக்யலட்சுமி சீரியலிலும் ராதிகா வாக களமிறங்கியிருக்கிறார் . நாளுக்கு நாள் இவருக்கு சீரியல்களிலும் ரசிகர்கள் வட்டாரம் பெருகிவருகிறது.

தைரியம்

தைரியம்

இவர் தன்னுடைய வாழ்க்கையின் முதல் பகுதியில் ரொம்பவே கஷ்டப்பட்டு இருந்தாலும் தற்போது தன்னுடைய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். ஒரு பெண் தனியாக இருந்தாலும் தைரியமாக இருந்தால் போதும் என தன் பையனுக்கு ரோல் மாடலாக இருந்து வரும் இவர் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்துவருகிறார் .சீரியல்களில் இவர் எடுக்கும் போட்டோக்களையும் ,வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் , டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

பிக் பாஸ் மூலம் நல்ல மரியாதை

பிக் பாஸ் மூலம் நல்ல மரியாதை

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ரசிகர்களிடம் ஒரு நல்ல மரியாதையும் ஆதரவும் இருக்கிறது .இதனால் இவரை சில நெட்டிசன்கள் கலாய்த்தாலும் ஆதரவாக பல ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர். இவர் ஒரு போஸ்ட் போட்டதும் அதற்கு பலர் கொஞ்சி கமெண்டுகளை போட்டு வருகின்றனர் .அதில் ஒரு சில நெட்டிசன்கள் கலாய்த்தாலும் அதற்கு ரேஷ்மா பதில் அளிக்கவில்லை என்றாலும் ரசிகர்களே நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காரு மேல சூப்பர் போஸ்

காரு மேல சூப்பர் போஸ்

தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் ப்ரீயாக இருக்கும் நேரத்தில் அங்கு பார்க் பண்ணி இருந்த ஒரு காரின் அருகில் சென்று இவர் போட்டோக்களை எடுத்து இருக்கிறார், தான் எடுத்த போட்டோவை அப்படியே இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடவும் ,ரசிகர்கள் அழகாக இருக்கிறது என வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்கும் போது ஒருசில நெட்டிசன்கள் டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகின்றனர் .ஆனால் அதற்கு ரேஷ்மாவின் ரசிகர்கள் கமெண்டில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+