'ரிசார்ட்' வெப் சீரிஸ்: எதார்த்தமான எரும சாணி விஜய் குமார்.. தாறுமாறு தலைவாசல் விஜய்! விமர்சனம்
சென்னை: திரில்லர் மற்றும் பேண்டஸி கதைகளுக்கு மத்தியில், நட்சத்திர ஹோட்டல் சமையலறை மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ரிசார்ட்' (Resort) தமிழ் வெப் சீரிஸ் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் (JioHotstar) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

கதைக்களம்:
Resort Web Series Review: கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் சர்வீஸ் பிரிவில் பணியாற்றும் வெற்றி (விஜய் குமார் ராஜேந்திரன்), குடும்பக் கடன் சுமையால் தவிக்கிறான். அவனது உண்மையான கனவு ஒரு தலைசிறந்த செஃப் (Chef) ஆவதுதான். ஆனால், முறையான கல்வி இல்லாத காரணத்தால் அங்குள்ள தலைமை செஃப் நெடுமாறனிடம் (தலைவாசல் விஜய்) கடுமையான அடக்குமுறைகளைச் சந்திக்கிறான்.
ஒரு கட்டத்தில் வெற்றி எடுக்கும் சில ஆபத்தான முடிவுகளும், ஹோட்டல் சமையலறைக்குள் நடக்கும் அதிகார அரசியலும் தான் இந்தத் தொடரின் முக்கியக் கருப்பொருள். ஆடம்பரமான ரிசார்ட்டுக்கு வரும் விருந்தினர்களின் மகிழ்ச்சிக்கு பின்னால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் சந்திக்கும் மன அழுத்தம் மற்றும் போராட்டங்களை இயக்குனர் பிரவீன் பென்னட் மிக எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள் மற்றும் வரவேற்பு
விஜய் குமார் ராஜேந்திரன் மற்றும் தலைவாசல் விஜய் ஆகியோருடன் தர்ஷனா ஸ்ரீபால், லல்லு பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த மார்ச் 13-ம் தேதி வெளியான இந்தத் தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
ஐஎம்டிபி (IMDb) தளத்தில் 8.8/10 மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்தத் தொடர், ஒரு எதார்த்தமான வாழ்வியலைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்குச் சிறந்த தீனியாகும்.
பாசிட்டிவ்:
தனது அனுபவமிக்க நடிப்பால் சீரிஸை தாங்கிப் பிடிக்கிறார் தலைவாசல் விஜய். சில டீம்களில் உள்ள மேனேஜர்கள் பிற டீமை எப்படி போட்டியாக பார்ப்பார்களோ, தங்கள் டீமின் மீது அளவு கடந்த அதிகாரம் செலுத்துவார்களோ அதை தனது பாடி லேங்குவேஜ் மற்றும் வார்த்தை உச்சரிப்பில் அநாயாசமாக கடத்தியுள்ளார் தலைவாசல் விஜய். அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் வில்லனாக நடித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உறுமுகிறது தலைவாசல் விஜய் "பேஸ்" குரல்.
கண் பார்வையிலும், ஒற்றை சொல்லிலும் மொத்த ரெசார்ட்டையும் கட்டிப்போடுகிறார். விஜய் குமார் ராஜேந்திரனும் தன் பங்குக்கு நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது அப்பாவித்தனமான நடிப்பை பார்த்தால், ஐயோ இவர் பாவம்ல, என்றும், அவர் வெற்றி பெறும்போது, சூப்பர்ல என்றும் பார்வையாளர்களுக்கே தோணச் செய்யும் நடிப்பு. பிரமாதம்.
Taskaree: The Smuggler's Web என்ற வெப் சீரிஸ் எப்படி விமான நிலையத்திற்குள்ளேயே கதையை நகர்த்தி கஸ்டம்ஸ் அதிகாரிகளின் வாழ்வியலை சுவாரசியமாக சொன்னதோ அதுபோல, ரிசார்ட் உள்ளேயே சுற்றிக் காட்டி, அங்குள்ள வாழ்வியலை சுவாரசியப்படுத்தி பார்வையாளர்களுக்கு ரிப்ரஷை கடத்த முயன்றுள்ளது ரிசார்ட் டீம்.
நெகட்டிவ்:
பல எபிசோட்களை கட் செய்திருந்தால் ரிசார்ட் 5 ஸ்டார் ரிசார்ட்டாக உயர்ந்திருக்கும். ஆனால் 3 ஸ்டார் ரிசார்ட்டாக நினைக்க வைப்பதற்கு, முக்கிய காரணமே அதன் நீளம்தான். பல காட்சிகள் திரும்ப திரும்ப ஒரே மாதிரி தோற்றமளிக்கின்றன.
குறிப்பாக விஜய் குமார் மற்றும் அவரது நண்பர் பேசும் காட்சிகள் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தோன்றுகிறது. உலகமே அந்த ரிசார்ட்டுக்குள்தான் இயங்குகிறது என்பதை போல எல்லா கதாப்பாத்திரங்களும் ஊரில் வீடு வாசலை விட்டுவிட்டு இந்த ரிசார்ட்டில் வந்துதான் தங்குகிறார்கள் என்பது பக்கா செயற்கைத்தனமாக தெரிகிறது. சில காட்சிகள் வலிந்து திணித்து வைக்கப்பட்டவையாக இருப்பது அப்பட்டமாக இருக்கிறது.
இதையெல்லாம் ரிமோட் வைத்து ஓட்டிவிட்டு பார்த்தால் ரிசார்ட் உண்மையிலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை, சீரியஸ் டோனில், சென்டிமென்ட், காமெடி, காதல் கலந்து பார்ப்பது போன்ற உணர்வை தரும். மிஸ் செய்ய வேண்டாம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications