Retro box office Collection Day 2: ரெட்ரோ 2வது நாளில் எவ்வளவு வசூல்? சூர்யா சோபித்தாரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ரெட்ரோ 2ஆம் நாள் வசூல் எவ்வளவு என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அது முதல் நாளை முறியடித்ததா என்பதை பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ எனும் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நடிகர் சூர்யாவின் படங்கள் அண்மைக்காலமாக ஹிட்டடிக்காமல் இருந்தன.

television surya retro

கடைசியாக வெளிவந்த கங்குவாவும் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் ரெட்ரோ எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் நேற்று முதல் நாளே இந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்கிக் கொண்டிருந்தது.

அனைத்து மொழிகள்

நேற்றைய தினம் அனைத்து மொழிகளிலும் ரெட்ரோ சக்கை போடு போட்டது. நேற்று முதல் நாளே அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ 19.25 கோடி வசூலானது. அதில் தமிழில் மட்டும் ரூ 17.25 கோடி வசூலானது. தெலுங்கில் ரூ 1.95 கோடியும், இந்தியில் ரூ0.05 கோடியும் வசூலானது.

0.47 கோடி வசூல்

அந்த வகையில் 2ஆம் நாளான இன்று ரூ 0.47 கோடி வசூலானதாக சொல்லப்படுகிறது. அதாவது தற்போதைய நேரத்திற்கு இவ்வளவு வசூலானது. இன்று எவ்வளவு வசூலானது என்பது இரவு 10 மணிக்குத்தான் இறுதியாக தெரியும் என்கிறார்கள். இந்த இரு நாட்களில் ரூ 19.72 கோடி வசூலானது.

படத்தின் பட்ஜெட்

இதே நிலை நீடித்தால் இனி வரும் காலங்களில் படம் எடுக்க போடப்பட்ட பட்ஜெட்டை காட்டிலும் 100 சதவீதம் அதிகமாக லாபம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த படத்தில் கனிமா பாடல் முன்கூட்டியே வெளியிடப்பட்டு படத்திற்கு ஒரு ஹைப்பை கூட்டியது.

சூர்யாவுடன் பூஜா

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் பலரும் நடித்திருந்தனர். முதல் முறையாக கார்த்திக் சுப்புராஜும் சூர்யாவும் இணைந்ததால் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படம் நேற்று வெளியான நிலையில் இதற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் வசனங்கள் வெளியாகின.

தத்து பிள்ளை

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குள்ளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்த்து வருகிறார் திலகன் (ஜோஜு ஜார்ஜ்)- சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. கண்ணன் மீது எப்போதும் திலகன் வெறுப்புடன் இருக்கிறார்.

எதிரிகள்

ஒரு முறை எதிரிகளிடம் இருந்து பாரி, திலகனை காப்பாற்றிய தருணத்திலிருந்து அவரை தன் மகனாகவே ஏற்றுக் கொள்கிறார். திலகனின் அடிதடி, கடத்தல் செயல்களை பாரியும் செய்கிறார். அவர் ருக்மணியை (பூஜா ஹெக்டே) காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

தந்தையின் வேலை

இதற்காக தனது தந்தையின் வேலைகளான அடிதடி கடத்தல் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டு புது திருமண வாழ்க்கைக்கு தயாராகிறார் கண்ணன். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் மட்டும் திலகனுக்கு தெரியாமல் கண்ணன் செய்ததால் தந்தையுடன் மோதல் ஏற்படுகிறது.

காதலி கோபம்

காதலி ருக்மணி முன்பே வளர்ப்புத் தந்தையின் கையை பாரி வெட்டி விடுகிறார். இதனால் திருமணம் நின்று போகிறது. ருக்மணியுடம் கோபித்துக் கொண்டு வேறொரு மாநிலம் செல்கிறார். சிறையில் இருக்கும் பாரியின் சண்டையிடும் திறனை கண்டு அவரை தங்களுடன் சேர்த்து கொள்ள ஒரு கும்பல் விரும்புகிறது. ஆனால் அவர்களை அடித்துவிட்டு சிறையிலிருந்து பாரி தப்பிவிடுகிறார்.

ஆத்திரம்

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பாரியை தேடுகிறது. இன்னொரு புறம் தந்தையின் ஆட்கள் தேடுகிறார்கள். பாரியோ தனது காதலியை தேடி புறப்படுகிறார். காதலியை அவர் தேடி கண்டுபிடித்து கரம் பிடித்தாரா என்பதுதான் மீதி கதை!

கனிமா பாடல்

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நன்றாக உள்ளன. இதில் எந்த செயற்கைத்தனமும் இல்லாமல் இருக்கிறது. இந்த படத்தில் வரும் கனிமா பாடலுக்கு ஒட்டுமொத்த படக்குழுவும் உழைத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

டஸ்கி மேக்கப்

பூஜா ஹெக்டேவுக்கு இந்த படத்தில் டஸ்கி மேக்கப். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், கருணாகரன், ஜெயராம், நாசர் உள்ளிட்டோருக்கு என்ன இருக்கிறது என புரியவில்லை. கனிமா பாடலுக்கு ரசிகர்கள் எழுந்து ஆடத் தொடங்கிவிட்டார்கள். இந்த படத்தில் கடைசி 20 நிமிடங்கள்தான் ட்விஸ்ட். ஆனாலும் ஆழம் அதிகமில்லை. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாவது பாதியிலும் இருந்திருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+