Azhagu Serial: நடிகை ரேவதிக்கு சும்மாதான் அழகு சீரியல்...டைம் பாஸ்..!
சென்னை: நடிகை ரேவதி அழகு சீரியலில் தொடர்ந்தார் போல வருவது இல்லை...முக்கிய காட்சிகளில் இருப்பதில்லை.
அப்படிப் பார்க்கும்போது ரேவதிக்கு அழகு சீரியல் டைம்பாஸ்தான். நடிகை ரேவதி அழகு சீரியலுக்கு ஸ்டார் காஸ்ட் நடிகை அவ்வளவுதான்.
ரசிகர்கள் ரேவதி எப்போது எந்த எபிசோடில் வருகிறாரோ அப்போது பார்த்துக்க வேண்டியதுதான்.

ரேவதியை காண்பித்து
ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக் காண்பித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.. நடிகை ரேவதி அழகு சீரியலின் முக்கியமான காட்சிகளில் இருப்பதே இல்லை என்றும், தொடர்ந்தார் போல காட்சிகளிலும் இருப்பது இல்லை என்றும். அப்படி நடிக்க முடியாதவர்களை சீரியலில் நடிக்க வைக்க வேண்டும் என்கிற அவசியம்தான் என்ன?

ரேவதி ரசிகர்கள்
என்னதான் வயசானாலும் ரேவதி தனி அழகுடன் மிளிர்பவர். அவர் நடித்தாலும் அழகு... நடிக்காமல் வந்து போனாலும் அழகு. வெறுமனே சிரித்தாலும் அழகு. அழகு சீரியலைப் பொறுத்தவரை ரேவதியை அப்படித்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதற்கே கூட அவரால் தொடர்ந்து எபிசோட்களில் வந்து போக முடியவில்லை.

திருநா கல்யாணம்
கதைப்படி அழகம்மையின் கடைசி மகன் திருநாவின் கல்யாணம் முடிந்து, ஓரிரு எபிசோட்கள் கூட ரேவதி நடிக்கவில்லை. சம்பந்தி அம்மாவே எங்கே சம்பந்தி அம்மா ஓடி ஒளிஞ்சுட்டாங்களான்னு டயலாக் பேசும்படி ரேவதியின் கதாபாத்திரம் அடுத்த எபிசோடிலேயே இல்லை.

டெடிகேஷன் இல்லாமல்
இப்படி டெடிகேஷன் இல்லாமல் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் வந்து போகலாம் என்று சுதந்திரம் கொடுத்து ஒரு சீரியலை எடுக்கும் அளவுக்கு பெரிய மனம் படைத்த தயாரிப்பாளர்கள் எல்லா நடிகைகளுக்கும் கிடைத்து விடுவதில்லை. சீரியலில் வரும்போது வரட்டும்... அப்போது பார்த்து ரசித்துக் கொள்ளலாம் என்று பெரிய மனம் படைத்த ரசிகை, ரசிகர்களும் வேறு யாருக்கும் கிடைத்து விடுவதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications