Azhagu Serial: ரேவதி ரெகுலரா வந்தும் எடுபடலையே... என்னங்க இப்படி பண்றீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் இப்படியுமா அழகம்மை கேரக்டர் இருப்பாங்கன்னு கேட்கற மாதிரி கதையை கொண்டு போறாங்க. பாவம்ங்க ரேவதி.. என்ன கெத்தா சினிமாவில் வலம் வந்தவங்க..

மல்லிகான்னு ஒரு புது கேரக்டரை இறக்கி.. அந்த பொண்ணுக்கு என்னவோ மாதிரி புடவையை கட்டிவிட்டு... இதெல்லாம் ரசிகர்களை ஈர்க்கும்னு நினைச்சு பண்றாங்க. மல்லிகா நல்லா தமிழ் பேசறாங்க.. டீசண்டா நடந்துக்கறாங்க. டிரஸ் மட்டும் இடிக்குது.

கிராமத்தில் என்னவோ நடந்து இருக்குன்னு பிள்ளைகள் சந்தேகப்படும் படி மல்லிகா கதாபாத்திரம், பழனிச்சாமி வாத்தியாருக்கு ரெண்டாவது பொண்டாட்டி என்று என்ட்ரி ஆகுது.

 பேரழகி காயத்ரி

பேரழகி காயத்ரி

கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான பேரழகி சீரியல் கயலாக மக்கள் மனதில் நின்ற நடிகை காயத்ரிதான் அழகு சீரியலில் மல்லிகாவா நடிச்சு இருக்கார். சின்ன பெண்ணாக இருந்தாலும், தி லெஜண்ட் ரேவதி முன் மல்லிகாவாக நடித்து அசர வச்சு இருக்கார். கதையை திசை திருப்ப இதுப் போன்ற கதாபாத்திரங்கள் தேவைப்படுகிறது.

ரெகுலர் ரேவதி

ரெகுலர் ரேவதி

நடிகை ரேவதி அழகு சீரியலின் முக்கிய கதாபாத்திரம்.. அழகம்மை டைட்டில் கதாபாத்திரம் என்றாலும், ரேவதி அடிக்கடி எல்லாம் சீரியலில் வர மாட்டார். சீரியல் ரசிகர்களும் இதற்கு பழகி இருந்தனர். தயாரிப்பு நிறுவனத்துக்கு செலவு கட்டுப்படியாக வில்லை போலும் என்று விட்டுவிட்டார்கள். ஒரு வாரம் ரெகுலரா வந்தார் என்றாலே அடுத்த ஒரு மாசத்துக்கு அழகு செட் பக்கம் தலை வச்சு படுக்க மாட்டார் என்று தெரிஞ்சுக்கலாம்.

தாலி மடிப்பிச்சை

தாலி மடிப்பிச்சை

சுதா புருஷன் இன்கம்டாக்ஸ் துறையில் வேலை பார்ப்பவன். இவன் மீது என்னவோ குற்றம் என்று போலீஸ் விசாரிக்க, அதுக்குள்ளே சுதா மடிப்பிச்சை எடுத்து, அந்தப் பணத்தில் தாலி வாங்கி உண்டியலில் போட்டால் புருஷன் இருக்கும் இடம் தெரியும்னு அதையும் செய்ய வச்சாங்க. அதே மாதிரி புருஷன் இருக்கும் இடம் தெரிஞ்சு போச்சு. அடுத்து இந்த பிட்டை அப்படியே கிடப்பில் விட்டுட்டாங்க.

வில்லி பூர்ணா

வில்லி பூர்ணா

வில்லியாக பூர்ணாவை மாத்தி, அவளை என்னென்னவோ கெடுதல் எல்லாம் செய்ய வச்சாங்க. இவதான் எல்லாத்தையும் செய்தவள்.. நடக்க முடியலைன்னு நடிச்சு இருக்கான்னு தெரியறதுக்குள்ள இதை ஒரு சின்ன கதையாக்கி இந்த பிட்டை இத்தோட நிறுத்தி வச்சு.. புதுசா மல்லிகான்னு ஒருத்தரை இறக்கி விட்டு குடும்பத்தையே அவள் ஆட்டுவிக்கும்படி கதை நகருது. ஆனால், இந்த ஆட்டம் பார்க்க நல்லாருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+