azhagu serial: பரவால்லியே...அழகு சீரியலில் ரேவதியும் நடிக்கறாங்க போல!!
சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் பரவால்லியே ரேவதியும் இந்த சீரியலில் நடிக்கறாங்க போலன்னு நினைக்கும்படி கடந்த ஒரு வாரமாக தினமும் ரேவதி வருகிறார். ஆனால், இருக்க வேண்டிய சில காட்சிகளில் வழக்கம்போல இல்லாமல்தான் இருக்கிறார்.
சன் டிவியின் 6:30 மணி நேர ஸ்லாட்டுக்கு அந்த நேரத்துக்குத் தகுந்த நல்ல ரேட்டிங் வருகிறது என்றால், அதற்கு நடிகை ரேவதி முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், ரேவதிக்கு பேமென்ட் கொடுத்து கட்டுப்படி ஆகவில்லையோ என்னவோ... அடிக்கடி ரேவதியை இந்த சீரியலில் பார்க்க முடியாமல் இருந்தது. அழகு கோயிலுக்கு போயிருக்கா, கடைக்கு போயிருக்கா..மீறிப் போனால் ஊருக்கு போயிருக்கா என்று கணவர் கதாபாத்திரம் சொல்வது போல வசனம் வைத்து விடுவார்கள்.

சுருதி ரேவதி
அழகு சீரியலில் ரேவதியை விட நடிகை சுருதிக்குத்தான் முக்கிய கதாபாத்திரம். அழகம்மையாக நடிக்கும் ரேவதி தனது மருமகளான சுதாவாக நடிக்கும் சுருதியிடம் ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக இருப்பது போலவும் கதையை அமைத்து ரேவதிக்கு பிளஸ் சேர்த்து இருக்கிறார்கள். அதனால், ரேவதி எப்போது வேண்டுமானாலும் கூப்பிடும்போது மட்டும் வந்து நடித்து கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
ரேவதியின் ரசிகர்களுக்குத்தான் பாவம் ஏமாற்றம்.. ரேவதி எப்போது சீரியலில் வருவார் என்று காத்திருந்து பார்க்கும் அளவுக்கு அவர் நீண்ட இடைவெளி விட்டுத்தான் சீரியலில் வருவார். வயதானாலும் கூட ரேவதிக்கு என்று குடும்ப பெண்கள், ஆண்கள் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் வந்து நின்று ஒரு டயலாக் பேசினாலே அத்தனை வசீகரமாக இருக்கிறது என்றும் சிலாய்க்கிறார்கள்.

மிக முக்கிய கட்டத்தில்
அழகு சீரியல் இப்போது மிக முக்கியமான கட்டத்தில் சென்று கொண்டு இருக்கிறது. பூர்ணா திருந்தி விட்டது போல காட்சிகள் இருந்தாலும், பூர்ணா நடிக்கிறாளா, ஜெயிலில் இருந்துக்கொண்டு இதைச் செய் சுவாதி என்று சொன்ன பூர்ணா, அடுத்து உடனடியாக ஜெயில் கைதி ரவுடி பெண்ணால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பது போல காண்பிக்கிறார்கள். இந்த முக்கியமான கட்டத்தில் ரேவதி கடந்த ஒரு வரமாக தினமும் சீரியலில் வருகிறார்.

பார்க்க பிடிக்கிறது
அழகு சீரியலில் இப்படி தினமும் ரேவதி வருவதால், சீரியலை பார்க்கப் பிடிக்கிறது என்று சீரியல் ஆர்வலர்கள் பலரும் சொல்கிறார்கள்.ஆனால், முக்கிய இடங்களில் ரேவதி இன்னும் ஆஜராகவில்லை என்பதும், வாங்கிய கால்ஷீட்டில் ரேவதியை நடிக்க வைத்துக்கொண்டு அனுப்பி விடுகிறார்கள் என்பதும் தெரிகிறது. என்றாலும் ரேவதி தினம் ஒரு காட்சியில் வருவது சீரியல் பார்ப்பவர்களுக்கு மகிழ்ச்சிதான்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications