Azhagu Serial: ஜோதிகா நல்ல முடிவு எடுக்கறாங்க.... நடிகை ரேவதி
சென்னை: சன் டிவியின் அழகு சீரியல் குடும்பத்தின் சிறப்பு கொண்டாட்டம் நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியை கடந்த இரண்டு வாரமாக மறு ஒளிபரப்பு செய்தது சன் டிவி. அப்போது பேசிய ரேவதி ஜோதிகாவைப் பற்றி பேசினார்.
ஜோதிகா வாழ்க்கையில் நல்ல முடிவுகள் எடுக்கறாங்க... பல பெண்களுக்கு அது உதாரணமாக இருக்கிறது என்றும் புகழ்ந்து கூறினார்.மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்கள் ஜோதிகா, ரேவதி இருவரும் சேர்ந்து நடித்த படங்கள்.
அப்படி ஜோதிகாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததில் ரேவதி, ஜோதிகா குறித்து இவ்வாறு கூறினார். உடன் நடித்த கார்த்திக், மோகன், சுரேஷ், உலகநாயகன் கமல்ஹாசன் குறித்தும் பேசினார் ரேவதி.

கார்த்திக் பலவித காதல்
கார்த்திக்குடன் மவுன ராகம் படத்தின் மூலம்தான் முதன்முதலா ஜோடி சேர்ந்து நடிச்சேன். அதற்குப் பிறகு பல படங்களில் நடிச்சோம். எனக்கும் அவருக்கும் ஒரு தனி நட்புன்னு சொல்லலாம். அவருக்கும் எனக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி நல்லா வொர்கவுட் ஆச்சு. கார்த்திக்கிடம் ஒரே மாதிரி காதல் இருக்காது...பல வித காதல் உண்டு என்று சொன்னார்.

எத்தனை டேக் நடிச்சாலும்
கமல் சார் கூட ஒரு கைதியின் டைரி படத்தில்தான் முதலில் ஜோடி சேர்ந்தேன். நானும் அவரும் பீச் ரோட்டில் ஜீப்பில் போகும் காட்சி படமாக்கப்பட்டது. ஜீப்பில் ரெண்டு பக்கமும் கேமிரா. இந்த காமிராவுக்கும் நடிக்கணும்.. இந்த காமிராவுக்கும் நடிக்கணும். நான் எத்தனை டேக் எடுத்த போதும், அவரது நடிப்பு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்படி சிறப்பாக நடிக்க கூடியவர் அவர் என்று கூறினார்.

அஜீத் பிரபு தேவா
அஜீத்தை அவர் சின்ன பையனா இருந்தப்பவே பார்த்து இருக்கேன். நாங்க புதிய முகம் படம் எடுத்தப்போ அஜீத் சின்ன பையன்...எனக்கு அவர் இன்னும் ரொம்ப ரொம்ப சின்ன பையன்தான்..ஹி ஈஸ் எ பாய் என்று சொன்னார். பிரபு தேவா மவுன ராகம் படத்தில் சுந்தரம் மாஸ்டர் கூட வருவார். அப்போ சின்ன பையன்..அவரை புல்லாங்குழல் வாசிக்க வச்சு பனி விழும் நிலவு ஷாட் சூட் பண்ணினாங்க. குலேபகாவல்லி படத்தில் சேர்ந்து நடிச்சோம்.. நல்லா காமெடி பண்ணுவார் என்று கூறினார்.

ஜோதிகா எடுக்கும் முடிவு
ஜோதிகா எடுக்கும் முடிவுகள் ரொம்ப நல்லா இருக்கும். அவர் நடித்த படங்கள்...காதலித்தவரை திருமணம் செய்துக் கொண்டது.. இப்போது குழந்தைகளை வளர்ப்பது என்று அவர் எடுக்கும் முடிவுகள் நன்றாக இருக்கும். இது பல பெண்களுக்கு உதாரணமாகவும் இருக்கிறது என்று கூறினார் ரேவதி.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications