பணக்கார பொண்ணுங்க இன்னுமா இப்படிப்பட்ட ஆட்டிடியூடுல இருப்பாங்க... உலகம் தெரியாதா?
சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியல் வேற மாதிரி அக்னியை கக்குது. ஏழைங்களைப் பார்த்தா பணக்கார பொண்ணுங்களுக்கு பிடிக்காதா என்ன?
அப்பாவுக்கும் வீட்டுக்கும் வேலை செய்யும் டிரைவரின் மகள் மீரா, இவள் அப்பாவும் வேலை செய்யும் முதலாளியும் நண்பர்கள்.
இந்த ஒரு காரணத்துனால அகிலாவுக்கும் , அவள் அம்மாவுக்கும் டிரைவர் குடும்பத்தை பிடிக்காமல் போகுதாம்.

மீரா அகிலா
அகிலா, மீரா ரெண்டு பேருமே ஒரே காலேஜில் படிக்கறாங்க. எப்போதும் காலேஜ் நம்பர் ஒன் ஸ்டூடன்ட் மீரா. இந்த முறை இவளை விட அதிகமா மார்க் வாங்கிட்டா, அகிலாவின் அப்பா மீராவை வேறு காலேஜ்ல சேர்த்துடறேன்னு வாக்கு குடுத்து இருக்காராம்.

ஃபீஸ் கட்ட மீராவுக்கு
ஃபீஸ் கட்ட மீராவுக்கு இருக்கற பணத்தை எடுத்து கொடுக்கறாங்க அவங்க அம்மா.காலேஜ்ல வந்து கட்டினா, 100 ரூபாய் நோட்டு ஒன்னு சொல்லலை. அந்த சமயம் பார்த்து அகிலா வர்றா. ஓ... ஃபீஸ் கட்ட பணம் இல்லையா.. இரு உனக்காக ஒரு ஐடியான்னு கர்சீப்பை விரிச்சு போட்டு தோழிகள்கிட்ட இருக்கற சில்லறையை போட சொல்றா.

காசு இருக்கும் கர்ச்சீபை
காசு இருக்கும் கர்சீப் மூட்டையை மீராவிடம் கொடுத்து, இந்தா இதுல பணத்தை கட்டு. நான் சும்மா இதை கலெக்ட் செய்து குடுக்கறேன்னு நினைச்சுக்காத... உன்னைவிட அதிகமா மார்க் வாங்கி உன்னை இந்த காலேஜை விட்டு துரத்தணும்.அதுக்கு நீ எக்ஸாம் எழுதணும் இல்லைன்னு சொல்றா அகிலா.

பார்த்து நிக்கிறாள் மீரா
மீரா அகிலாவையே பார்த்து நிற்க ஹவுஸ் கீப்பிங் லேடி வந்து, இந்தா மீரா நீ அன்னிக்கு எனக்கு ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் குடுத்தியே.. இதை வச்சு பணத்தை கட்டிடுன்னு சொல்றாங்க. எதுக்குக்கா... நான் கொடுத்ததை எனக்கு திருப்பித் தர்றீங்களான்னு கேட்கறா. ஏம்மா எனக்கு உதவி செய்தே..நான் திருப்பி உனக்கு உதவி செய்ய கூடாதான்னு கேட்கறாங்க.

இன்னுமா இந்த பூமியில
அகிலா அந்த காசு மூட்டையை ஹவுஸ் கீப்பிங் பெண்ணிடம் குடுக்க...ஐயையே... இதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லைன்னு சொல்லிட்டு போயிடறாங்க. ஆமாம், இப்படிப்பட்ட பணக்கார பொண்ணுங்க இன்னுமா இந்த பூமியில இருக்காங்க... சரியான உலகம் தெரியாதவங்க போலிருக்கே...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications