ரம்யா பாண்டியனைத் தூக்கிய ரியோ.. கோபத்தைக் கக்கிய மனைவி.. செம !
சென்னை: ஆட்டோவில் வந்து இறங்கிய ரியோவை அதிரவைத்துள்ளனர் அவருடைய நண்பர்கள் . இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
அதை விட சரவெடி போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து கலக்கி விட்டனர் அவருடைய நண்பர்கள் .தற்போது இந்த சேட்டைகள் கலந்த வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் நிகழ்ச்சியில் ரியோ கலந்து கொண்டு வெளியே வந்த பிறகு அவருடைய நண்பர்களும் உறவினர்களும் சிறப்பாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர் .

செம வரவேற்பு
அதிலும் தற்போது அவருடைய நண்பர்கள் கொடுத்த வரவேற்பு தான் வைரலாக பரவி வருகிறது .இந்த வீட்டிற்குள் இருக்கும் போது இவருடைய நண்பர்கள் இவருக்காக அதிகமான வாக்குகள் அளித்து இணையதளங்கள் ஆதரவினை அளித்து கொண்டிருந்தனர் வெளியே வந்த பிறகு அவரை அதிர்ச்சி அடைய வைக்கும் விதமாக பல சேட்டைகளையும் செய்திருக்கிறார்கள்.

ரியோவே குழம்பிட்டாரு
இது குடும்பத்தில் குழப்பத்தை கொண்டுவருவதற்காகவா அல்லது என்டர்டைன்மென்ட்டா என்று தெரியாமல் ரியோ குழம்பிப் போயிருக்கிறார். ஆட்டோவிலிருந்து ரியோ இறங்கியதும் சர வெடியை போட்டு தெருவையே அதிர வைத்திருக்கிறார்கள் .அதைப்பார்த்து தெருவில் உள்ளவர்கள் மட்டுமல்ல ரியோவும் பயந்து விட்டார். அந்த அளவிற்கு சரவெடி வெறித்தனமாக வெடித்திருக்கிறது .

நண்பர்களின் ரணகளம்
அதுவும் வீட்டிற்குள் செல்லும் முன்பு நண்பர்கள் ஆட்டம் போட்டு கட்டி பிடித்து அவரை வரவேற்று அவருக்காக பல கட்டவுட்களை வைத்து அதையும் அவரையே திறக்க வைத்திருக்கிறார்கள். திறந்ததும் ஆச்சரியப்பட்டது அவர் மட்டுமல்ல வீடியோவில் அந்த கட் அவுட்டை பார்த்து அவருடைய ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கின்றனர்.

டேக் இட் வள்ளலே
அன்பு டீமில் எதற்கெடுத்தாலும் டேக் இட் என்று முத்தத்தை வாரி வழங்கியதால் அவருக்கு டேட் இட் டேட் இட் என்று வாரி வழங்கி சிவந்த வள்ளலே அந்த வீட்டிற்குள் இருக்கும் போது போட்ட 23ஆம் புலிகேசி கெட்டப்பை வைத்து முதல் கட்டவுட் டை திறக்க வைத்திருக்கிறார். அடுத்து தான் இவரை கழுவி ஊற்றுகிறார்கள். கும்மு கும்முன்னு கும்முன்னு போதும் கம்முனு இருந்த காந்தியடிகளே என்று இவரது காலை வாரி இருக்கிறார்கள்.

கிடா போல ஆயிப் போச்சே
இதைப் பார்த்ததும் அவருக்கு இவங்க படுத்துகிற இம்சை தாங்க முடியவில்லையே என்று என்னை விட்டால் வந்த வழியே அப்படியே திரும்பி போய்ரட்டா என்று கேட்கிறார் .ஆனாலும் நண்பர்கள் விட்டபாடில்லை அவரை இன்னும் இருக்குது என்று கோவிலுக்கு நேர்ந்துவிட்ட கிடாவை கூட்டிட்டு போவது போல இவரை அடுத்த இடத்திற்கு கூட்டிட்டு போகிறார்கள்.

ரம்யாவை வச்சு
அங்கதான் அவரே வெட்கப்பட அளவிற்கு செஞ்சு வச்சுருக்காங்க. ரம்யா பாண்டியனை இவர் அலேக்காக தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிற மாதிரி ஒரு போட்டோவை போட்டு அடிபட்டவர்களுக்கு ஆறுதலாக இருந்த அமிர்தாஞ்சனே என்று வைத்திருக்கிறார்கள் .

மனைவிக்கு வந்ததே கோபம்
இதைப் பார்த்ததும் ரிபோவின் மனைவி ஸ்ருதி ஷாக் ஆகிப் போய் என்ன பண்ணி வச்சு இருக்கீங்க என்று கோபமாக கேட்டிருக்கிறார் .இதற்கு நண்பர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தும் அவரை விடாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 106 நாள்கள் உலாவிய அற்புதமே, ஆரிக்கே அட்வைஸ் பண்ணின அறிவு களஞ்சியமே என பட்டத்துக்கு மேல பட்டம் கொடுத்து கலக்கியுள்ளனர்.

செம ஹேப்பி
அவரைத் திக்குமுக்காட வைத்த நண்பர்களுக்கு மத்தியில் இவருக்கு ஆரத்தி எடுத்து இவரது அம்மா அழைக்க அவர் இவங்க படுத்துற பாட்டுக்கு நீங்க சுத்துற சுத்து போதும் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே பேசியிருக்கிறார் .இந்த வீடியோக்களை பார்த்ததும் ரியோ ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர் அதுமட்டுமல்லாமல் இந்த வீடியோவை வைரலாக்கியும் வருகிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications