பிக்பாஸ்2: வைஷ்ணவிக்கு செம பல்பு கொடுத்த ரித்விகா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவிக்கு ரித்விகா செம பல்பு கொடுப்பதை போன்ற புரமோ வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைஷ்ணவிக்கு ரித்விகா செம பல்பு கொடுப்பதை போன்ற புரமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சண்டைக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை. கொடுக்கப்படும் டாஸ்க்கை கூட கவுரவ பிரச்சனையாக எடுத்துக்கொள்கின்றனர் போட்டியாளர்கள்.

பிக்பாஸ் ஒன்றை கழுவி ஊற்றிய மக்கள் அதுவே பரவாயில்லை போலவே என்று கூறும் அளவுக்கு உள்ளது பிக்பாஸ் 2.

தனி ரகம்

தனி ரகம்

பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் பாலாஜியும், வைஷ்ணவியும் தனி ரகம்.

பீப் சவுண்ட் இல்லாமல்

பீப் சவுண்ட் இல்லாமல்

பாலாஜி எப்போதும் கெட்டவார்த்தை பேசுவதையும் அடுத்தவர் குறித்து புறம்பேசுதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அவர் பேசுவதை ஒரு நாள்கூட முழுவதுமாக பீப் சவுண்ட் இல்லாமல் கேட்க முடியவில்லை.

போட்டுகொடுக்கும் வைஷ்ணவி

போட்டுகொடுக்கும் வைஷ்ணவி

இதேபோல் வைஷ்ணவியும் அடுத்தவர் குறித்து புறம் பேசுவதையும் போட்டுக்கொடுப்பதையும் விடுவதாய் இல்லை. ஆனால் தான் அதுபோன்று செய்யவே மாட்டேன் என அவர் அவ்வப்போது கூறுவதை பார்வையாளர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ரித்விகா கொடுத்த பல்பு

ரித்விகா கொடுத்த பல்பு

இந்நிலையில் தேவையில்லாமல் அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் வைஷ்ணவிக்கு ரித்விகா செம பல்பு ஒன்றை கொடுத்துள்ளார். இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வெளியாகியுள்ளது.

போடாமலே இருக்கலாம்

போடாமலே இருக்கலாம்

அதில் சென்ட்ராயன், ரித்விகா, வைஷ்ணவி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது வைஷ்ணவி ரித்விகாவிடம் நீ மேக்அப் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்கிறார்.

அழகாதான் இருக்கிறாய்

அழகாதான் இருக்கிறாய்

அதற்கு ரித்விகா நான் பேஸ் மட்டும்தான் போடுவேன் என்கிறார். உடனே நீ அழகாதான் இருக்கிறாய் மேக் அப் போடாதே என கூறுகிறார் வைஷ்ணவி.

நீங்கள் ஊட்ட வேண்டாம்

நீங்கள் ஊட்ட வேண்டாம்

அதற்கு ரித்விகா நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதை சொல்ல வேண்டாம். என்னுடைய தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது. நீங்கள் கொடுக்க வேண்டாம், ஊட்ட வேண்டாம் என உலுக்கி விடுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+