நடிகர் ரியாஸ் கான் மகனுக்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி திருமணமா? ஷாரிக் யாரை மணக்கிறார்?
சென்னை: நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான ஷாரிக்கிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் ரியாஸ் கான்- உமா ரியாஸ் கான் தம்பதியின் மகன். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.
ரியாஸ்கான் பாடி பில்டர் போல் இருப்பார். இவர் சில படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகை கமலா காமேஷின் மகள் உமாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன்தான் ஷாரிக்.

உமா ரியாஸ் குக் வித் கோமாளி சீசன் 1 இல் வந்திருந்தார். அவர்தான் அந்த சீசனின் ரன்னர் அப்! இவர்களது மகன் ஷாரிக் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நேற்று இந்த நேரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அது போல் ரிசார்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் 49 நாட்கள் வரையே இருந்தார். அவரால் வீட்டை விட்டு தனியே இருக்க முடியவில்லை. இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.
அது போல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அவர் 21 நாட்களில் வெளியேற்றப்பட்டார். பிறகு பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் நடனமாடினார். இந்த நிகழ்ச்சியில் ஷாரிக் அனிதா சம்பத் ஜோடி டைட்டில் வின்னரானது. தற்போது 29 வயதாகும் ஷாரிக்கிற்கு வரும் 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.
ஷாரிக்கை திருமணம் செய்து கொள்ள போகும் மணப்பெண் குறித்து எந்த விவரங்களும் தெரியவில்லை. முதலில் ஷாரிக்கின் திருமணமே உண்மையா இல்லை வதந்தியா என தெரியவில்லை. உமா ரியாஸ் எப்போது சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். அவரும் திருமணம் குறித்து எதையும் சொல்லவில்லை.
ரியாஸ் கான் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். இவர் தினமும் உடற்பயிற்சி, யோகா என தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார். இவருடைய மகன் ஷாரிக்கும் உடற்பயிற்சிகளை செய்வார். அது போல் உமா ரியாஸ், சமையல் செய்வதில் ரொம்ப டாப்! இவர் தனியாக ஒரு யூடியூப் சேனலையும் வைத்துள்ளார். அது போல் அழகுக் குறிப்புகளையும் அவர் கூறி வருகிறார்.இசையமைப்பாளர் காமேஷின் மகள்தான் உமா. இவரும் ரியாஸும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஷாரீக் இல்லாமல் சமர்த்ஹாசன் என்ற மகனும் உள்ளார். உமாவை காதலித்த ரியாஸ், மூன்றே மாதங்களில் திருமணம் செய்து கொண்டார். ரியாஸுக்கு திருமணமான போது அவருக்கு வயது 21, உமாவுக்கு 19. இரு வீட்டாரிடமும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
உமாவை திருமணம் செய்து கொண்டதற்காக ரியாஸின் தாய், அவரை ஏற்கவில்லையாம். ஆனால் ரியாஸின் அப்பா ஏற்றுக் கொண்டாராம். ரியாஸின் அப்பா தயாரிப்பாளர் ரஷீத். தாய் ரஷீதா பானு. அக்கா பெயர் ரோஷினி. ரியாஸ் கானின் குடும்பம் சிறு வயதிலேயே சென்னைக்கு குடிபெயர்ந்தது. உமா ரியாஸ் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications