தங்கச்சி கூட சுத்திட்டு அக்காவோட கல்யாணமா.... ஐயே ஆசை தோசை அப்பளம்.. வட போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் தன் மகன் சஞ்சய்க்கு நிலாவை கல்யாணம் செய்தே ஆகணும்னு துடிக்கறாங்க நீலாம்பரி.

அதுக்காக எந்த எல்லைக்கும் போலாம்னு போறவங்க, நிலா கார்த்திக்கை காதலிப்பது தெரிஞ்சும், உன் காதலுக்குத்தான் நான் உதவி செய்யறேன்னு சொல்லி, சஞ்சய்க்கு கல்யாணம் செய்ய காய்கள் நகர்த்துறாங்க.

Roaming with younger and want to marry elder?

நீலாம்பரியின் மகன் சஞ்சய் இருக்கானே அவன் என்னடான்னா நிலாவின் தங்கச்சிதான் ஸ்வேதான்னு தெரிஞ்சும் அவ கூட ஊர் சுத்தறான். கல்யாணத்தை எப்படிடா நிறுத்த போறேன்னு ஸ்வேதா கேட்க, அதுக்குத்தான் ஸ்வேதா முயற்சி செய்துகிட்டு இருக்கேன்னு சொல்றான் சஞ்சய்.

அதுக்குள்ளே கல்யாணம் நடந்துருச்சுன்னான்னு ஸ்வேதா கேட்க, நடக்கணும்னுதானே என் ஆசைன்னு சொல்றான்.விளையாட்டுக்கு சொன்னேன்னு சஞ்சய் சொல்ல, நம்பாத ஸ்வேதா கோவமாகிடறா.

Roaming with younger and want to marry elder?

அவ கோவத்தைத் தணிக்க சஞ்சய் பீச்சில் ஐஸ்க்ரீம் வாங்கிக்குடுத்து ஐஸ் வைக்கறான். ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிவிடறாங்க. இதை சஞ்சயின் மாமா பார்த்துடறான். என்ன சஞ்சய், கல்யாணம் நெருங்குது.. நீ என்னடான்னா யார் கூடவோ பீச்சுல சுத்திகிட்டு இருக்கேன்னு கேட்கறார் மாமா.

Roaming with younger and want to marry elder?

கல்யாணம் ஆனா, என்ன மாமா, கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்க கூடாதா... கல்யாணம் ஆனாலும் நான் இப்பிடித்தான் மாமா இருப்பேன்னு சொல்றான் சஞ்சய்.நிலா நல்ல பொண்ணாச்சே அவ வாழ்க்கையை இவன் கெடுத்துருவானேன்னு கவலைப் படறார் மாமா.

அது சரி, தங்கச்சி கூட சுத்திட்டு, அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாருக்குமா.. எப்படி முகம் பார்க்கறது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+