ஒரு நாளைக்கு 75 முட்டை சாப்பிட்டவன்.. ரோபோ சங்கர் அண்ணன் உருக்கம்..அப்போ உண்மை இது தானா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருந்து தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து அவருடைய அண்ணன் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றில் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
அதில் ஆரம்பத்தில் தன்னுடைய தம்பி எப்படி இருந்தான்? ஆனால் இப்போ இருப்பதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது என்றும் மேலும் பல ரகசியங்களையும் உடைத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ரோபோ சங்கர் பலருக்கும் இந்த நிகழ்ச்சியில் பல நடிகர்களின் குரலில் மிமிக்கிரி செய்து பலரையும் கவர்ந்து இருந்தார். அத்தோடு இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மதுரையில் வசித்து கொண்டிருக்கும் போது ரோபோ சங்கர் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு ஆணழகன் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ரோபோ சங்கர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஜிம்மில் சேர்ந்துவிட்டாராம். அந்த ஜிம் இப்போது இருக்கிற மாதிரி அதி நவீனமானதாக இருக்காதாம். அங்கே உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றால் அவருக்கு மண்வெட்டி கொடுத்து அதை மண்ணை வெட்டி தன்னுடைய உடம்பை வலுவாக்கி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். பாரம்பரிய முறைப்படி பல கடினமான பயிற்சிகளை ரோபோ சங்கர் எடுத்திருக்கிறார்.
அந்த அளவிற்கு தன்னுடைய உடம்பினை கவனித்து ஆரோக்கியமாக வைத்திருந்த ரோபோ சங்கர் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு நேரத்தில் 25 முட்டை சாப்பிடுவாராம். அதுவும் மஞ்சள் கரு இல்லாமல் வெள்ளை கரு மட்டும் சாப்பிடுவாராம். ஒரு நாளைக்கு குறைந்தது 75 முட்டை சாப்பிடுவாராம்.
ஆனால் அப்படியெல்லாம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரோபோ சங்கர் இப்போது உடல்நிலை சரியில்லாமல் ஆன நிலையில் இருந்து உப்பு போடாத கஞ்சி தான் குடித்து கொண்டிருக்கிறார் என்று அவருடைய அண்ணன் உருக்கமாக பேசி இருக்கிறார். அது குறித்து அவருடைய அண்ணன் பேசுகையில் என்னுடைய தம்பியை பல வருடங்கள் கழித்து நான் பார்க்கும் போது அழுகையே வந்துடுச்சி.
எல்லோருக்கும் உடம்பு சரியில்லாமல் வருவது என்பது இயல்பானது தான். அந்த மாதிரி தான் ரோபோ சங்கருக்கும் வந்துச்சு. ஆனா அது குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமான தவறான கருத்துக்களும், தப்பு தப்பான கமண்டுகளும் பரவி வந்தது. இது பார்ப்பதற்கு கஷ்டமாக இருந்தது. அவன் வேறு யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. தவறான உணவு பழக்கங்கள், சில கெட்ட பழக்கங்கள் இருந்தது அதை இப்போ விட்டு விட்டான்.
இப்போது மீண்டும் ரோபோ சங்கர் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இனி யாரும் உங்களுடைய உடல்நலத்தில் அக்கறை இல்லாமல் இருக்காதீர்கள். அதுபோல தவறான வழிகளிலும் உடம்பை கெடுத்துக்காதீங்க என்று ரோபோ சங்கர் போலவே அவருடைய அண்ணனும் அனைவரிடமும் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications