ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு வளைகாப்பு! பிளவுஸில் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்! டெலிவரி எப்போது?
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கருக்கு தடபுடலாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் ஒரு புதிய கருப்பொளை வைத்து இந்திரஜாவும் கணவர் கார்த்திக்கும் வந்திருந்தவர்களை திக்குமுக்காட வைத்திருந்தனர்.
நகைச்சுவை நடிகர், மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்ற பன்முகத்தன்மை கொண்டவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டான்ட் அப் காமெடியை தொடங்கி பிறகு விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார்.

இவரது மனைவி பிரியங்கா. இவர்களுக்கு ஒரே மகள் இந்திரஜா! ரோபோ சங்கர், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடனா மகேஷ், கப்பல், வாயை மூடி பேசவும், மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கணவன் மனைவி இருவரும் இணைந்து நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளனர். பிரியங்காவும் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான கன்னிமாடம் படத்தில் நடித்திருந்தார்.
அது போல் இந்திரஜா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து அவரும் காமெடி செய்திருப்பார். இந்த நிலையில் ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் வளர்ப்பு தம்பியான கார்த்திக்கிற்கும் இந்திரஜாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் இந்திரஜா அணிந்திருந்த ரவிக்கை (பிளவுஸ்) பெரிதும் பேசப்பட்டிருந்தது. அதில் கணவரது முதல் எழுத்தையும் தனது முதல் எழுத்தையும் சேர்த்து எம்ப்ராய்டரி போட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை இந்திரஜா அறிவித்திருந்தார். இதையடுத்து இந்திரஜாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியானது கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்வில் திரைப்பிரபலங்கள், சீரியல் பிரபலங்கள் என கலந்து கொண்டனர்.
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஒரு புதிய கருப்பொருளை இந்திரஜாவும் கார்த்தியும் டிரென்ட்டாக்கியுள்ளனர். அதாவது வளைகாப்புக்கு என்ன செய்யலாம் என யோசித்த நிலையில் தான் அணியும் ரவிக்கையில் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டை போட்டு , 5 டி வித்தைகளை இறக்கலாம் என முடிவு செய்திருந்தனர்.
அதன்படி குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பிரதி எடுத்து ரவிக்கையின் பின்புறம் வைத்துள்ளனர். ஒரு கர்ப்பிணித் தாய் நிற்பது போன்றும் அவரது வயிற்றுக்குள் கருவில் குழந்தை குத்தவைத்து அமர்ந்திருப்பது போன்றும் டிசைன் செய்யப்பட்டிருந்தது. அது போல் அவரது பிளவுஸ் முழுவதும் பால் புட்டிகள், பல்வேறு குழந்தைகள் படுத்திருப்பது போன்றும் டிசைன் செய்யப்பட்டது.
இந்திரஜாவின் தோளில் குழந்தை படுத்திருப்பது போல் 5டி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அது போல் ஜடையிலும் குழந்தை சுவாமிகளின் உருவங்கள் பொதித்திருந்தது. மெஹந்தியிலும் ஒரு கையில் முருகனின் படமும், மறு கையில் பாலாம்பிகாவின் படமும் வரையப்பட்டிருந்தது.
மேலும் முழங்கையில் கார்த்திக் இந்திரஜாவின் உருவமும் வரையப்பட்டிருந்தது. இவர்தான் ஒரு புதிய தீம்மாக இருக்கிறார் என்றால், இவருடைய கணவர் கார்த்திக்கும் புதிய முயற்சியை செய்திருந்தார். அதன்படி அவரது திருமண உடையில் எந்த மாற்றமும் செய்ய விரும்பாத அவர், இதற்காக ஒரு அங்கவஸ்திரத்தை வாங்கி அதில் குழந்தை உருவில் இருக்கும் தமிழ் கடவுள்களான பாலாம்பிகை, முருகர், கிருஷ்ணர், கருப்பண்ணசாமி, காஞ்சி காமாட்சி உள்ளிட்டோரின் படங்களை வரைந்து அதன் மேல் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்திரஜாவின் திருமண பிளவுஸ்ஸுக்கு ரூ 35 ஆயிரம் செலவானதாம். அது போல் இந்த முறையும் ஒரு 40 ஆயிரம் வரை ஆகும் என இந்திரஜா தெரிவித்திருந்தார். இந்திரஜாவுக்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வாக்கில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்களால் due date கொடுக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications