அலுமினிய பெயிண்ட்? ரோபோ சங்கரை காலி செய்த கல்லீரல்! லிவர் பாதிப்புக்கான காரணங்களை சொல்கிறார் Dr.ராதா
சென்னை: கல்லீரல் பாதிப்பு என்பது குடிப்பவர்களுக்கு மட்டுமே வராது, சர்க்கரை நோயாளிக்கும் வரலாம். வைரஸ் நோயாளிகளுக்கும் வரலாம்.. எனவே இதுபோன்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. குடியினால் கூடுதலாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை என்று இரைப்பை குடல் மருத்துவர் டாக்டர் ராதா தெரிவித்துள்ளார்.. அத்துடன் கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் விளக்கமாக நம்முடைய ஒன் இந்தியா தமிழுக்கு தந்துள்ள பிரத்யேக பேட்டியில் விரிவாக கூறியிருக்கிறார்.
ரோபோ சங்கரின் மரண அதிர்ச்சி இன்னும் தமிழக மக்களை விட்டு செல்லவில்லை.. மதுவை தொட்டுவிட்டு, அது இல்லாமல் இருக்க முடியாத நிலைக்கு வந்ததாக முன்பு பேட்டி ஒன்றில் ரோபோ சங்கர் கூறியிருந்தார்..
அதேபோல, சமீபத்தில் தந்திருந்த ஒரு பேட்டியில், மதுப்பழக்கத்திலிருந்து தான் மீண்டு வந்து ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக ரோபோ சங்கர் கூறியிருந்தார்.. எனினும் 46 வயதிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ரோபோ சங்கருக்கு மஞ்சள் காமாலை
ரோபோ சங்கரின் இந்த திடீர் மரணத்திற்கு காரணம் மெட்டாலிக் பெயிண்ட் பூசியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.. மேலும் சிலர், சேலம் பச்சிலை வைத்தியத்தை ரோபோ சங்கர் சாப்பிட்டு வந்ததாக சொல்கிறார்கள்.. மேலும் சிலர், மஞ்சள் காமாலையிலிருந்து மீண்டு வந்த நிலையில், மீண்டும் மதுப்பழக்கத்துக்கு ரோபோ சங்கர் ஆளானதால்தான் உயிரிழந்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.. இப்படி ரோபோவின் மரணம் பலவிதமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது..
இந்நிலையில், குடிப்பழக்கம் கல்லீரலை எவ்வாறு அழிக்கிறது? என்பது குறித்து டாக்டர் ராதா, நம்முடைய ஒன் இந்தியாவின் தமிழுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அதில், குடியினால் ஏற்படக்கூடிய பாதிப்பு ஈரலுக்கு அதிகமா? பாதிக்கப்பட்ட ஈரலை சரிசெய்யவே முடியாதா? அது கடினமான ஒன்றா? என்று ஒன் இந்தியா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது..
நாள்பட்ட சர்க்கரை நோய்
அதற்கு டாக்டர் ராதா பதிலளிக்கும்போது, ஈரல் பாதிப்புக்கு முக்கிய காரணம், நாள்பட்ட சர்க்கரை வியாதி, குடிப்பழக்கம் எந்த அளவுக்கு ஈரலை பாதிக்குமோ, அதே அளவுக்கு சர்க்கரை நோயும் ஈரலை பாதிக்கும்.. அதேபோல வைரஸ் காரணங்களாலும் ஈரல் பாதிக்கப்படலாம்..இந்தியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர்.. இதன்காரணமாகவும் ஃபேட்டி லிவர் போன்றவை ரிஸ்க் காரணங்களாக உள்ளன.. அதேபோல ஏற்கனவே ஈரல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், ஆல்கஹாலை சாப்பிடும்போது, அது மற்றொரு ரிஸ்க்காகிவிடுகிறது..
நாட்டு மருத்துவம்
அதுமட்டுமல்ல, இப்படி ஈரல் பாதிப்பு உள்ளவர்கள் சித்த மருந்தை நாடுகிறார்கள்.. நாட்டு மருந்து, சித்த மருந்து, கைவைத்தியம் என எதுவாக இருந்தாலும், அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மருந்துகள் கிடையாது. நிறைய பேர் சர்க்கரை நோய் இருக்கும்போது, ஈரல் பாதிப்பும் ஏற்பட்டு, ஆல்கஹாலையும் சாப்பிட்டு, நாட்டு மருந்துகளையும் சாப்பிடுகிறார்கள்.. இவர்களுக்கு ஏற்கனவே வைரஸ் தாக்குதல் இருக்கிறதா? இல்லையா? என்பதுகூட தெரியாது.
அதாவது ஒரு சின்ன அம்பு மட்டுமே துளையிடக்கூடிய இடத்தில் நான்கைந்து அம்புகள் சேர்ந்து துளைத்தால் என்னாகும்? இப்பத்தான் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.. 10 நாளில் கல்லீரல் நோயை குணப்படுத்துவதாக சொல்வதே டுபாக்கூர் வேலைதான்.
ஈரல் மாற்று அறுவை சிகிச்சை
ஈரல் பாதிப்பு என்றால், முதலில் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கணும்.. பிறகு அந்த ஈரல் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.. பிறகு நோய் எந்த ஸ்டேஜில் உள்ளது? வேறு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் உள்ளனவா? ஈரல் நோய்க்கு சிகிச்சை தருவதாக இருந்தால், மற்ற நோய்களை எப்படி மேனேஜ்செய்ய வேண்டும்? ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தால், அதற்கு அந்நபரின் உடல்நிலை ஒத்துழைக்குமா? போன்றவை எல்லாம் ஆராய வேண்டும்.
F1, F2, F3, F4 என்றெல்லாம் கல்லீரல் பிரச்சனையில் பல ஸ்டேஜ்கள் உள்ளன.. இதில், 1 மற்றும் 2ம் நிலையில் நோய் இருந்தால் அதை குணப்படுத்தலாம்.. ஆனால், 3, 4 ஸ்டேஜ்களுக்கு சென்றுவிட்டால் குணப்படுத்த முடியாது. இதற்கு பிறகுதான் சிகிச்சையே துவங்க வேண்டியிருக்கும்.
ஆனால், இவை எதுவுமே இல்லாமல் ஒரே மாத்திரையில் நோய் குணமாகிவிடும் என்று சொல்வதை அதிகாரப்பூர்வமாக எப்படி ஏற்பது? அதேபோல கல்லீரலை டீடாக்ஸ் செய்ய இந்த தண்ணீரை குடியுங்க என்று சொல்வதும்கூட டுபாக்கூர் செயல்தான்.
அறிகுறிகள் - ஆபத்துகள்
ஈரல் நோயின் முதல் பாதிப்பாக உள்ளது, கால் மற்றும் வயிறு வீக்கம்தான்..இப்படியிருந்து சிகிச்சையும் மேற்கொள்ளாமல் இருந்தால் 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 5 வருடங்கள் வரை அவர்களது ஆயுள் இருக்கக்கூடும்.. இந்த வயிறு, கால் வீக்கத்துடன், மலம் கருப்பாகவும், ரத்த வாந்தியும் எடுத்தால், மேற்கண்ட ஆயுளிலிருந்து 6 மாதத்திலிருந்து ஒரு வருடத்தை கழித்து கொள்ளலாம். பிறகு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு, 15, 20 பாயிண்ட்கள் என்றால், மேலும் 6 மாதத்தை ஆயுளிலிருந்து கழித்து கொள்ளலாம்.
ஆனால், நிதானம் தப்பி, பேச்சும் குழறி பேசுவதாக இருந்தால், அதிகபட்சம் 6 மாதம்தான் ஆயுள்.. இதுபோன்ற நோய் பாதிப்புகள் ஏற்பட்டு, சிகிச்சை தராமல் வைத்திருந்தால் இதுதான் அவர்களது ஆயுள் கால நாட்கள்.
தமிழக அரசு ஏற்படுத்தும் விழிப்புணர்வு
இதுபோன்றவர்கள் ஈரல் மாற்று சிகிச்சையை நாடுகிறார்கள்.. கல்லீரல் பாதிக்கப்பட்டு, மற்ற உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே, கல்லீரல் மாற்று செய்யப்படும்.. கிட்னி டிரான்ஸ்பிளேன்டேஷன் போலவே, லிவர் டிரான்ஸ்பிளேன்டேஷனும் நம்முடைய ஊரில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.. இந்த ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது.யாரெல்லாம் உறுப்பு தருகிறீர்களோ, அவர்களுக்கு அரசு மரியாதை தரப்படும் என்று தெரிவித்துள்ளது..
எனவே, இறந்தவரின் உடலுறுப்புகளை தானம் தருவதாக அரசு மருத்துவமனைக்கு அறிவித்தால் போதும்.. அவர்களே நேரடியாக வந்து, தேவையான உறுப்புகளை இறந்தவரிடமிருந்து எடுத்துகொள்வார்கள்.. பிறகுஇறந்த நபரை அரசு மரியாதையுடன் அடக்கமும் செய்வார்கள்.. அத்துடன் ஒரு சான்றிதழும் தருவார்கள்..
லிவர் டிரான்ஸ்பிளேன்டேஷன்
இவ்வாறு இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட உறுப்புகளை அந்தந்த மாவட்டத்தில் உறுப்புகளை தேவைப்படுவோருக்கு அரசே வழங்குகிறது.. மேற்கண்ட நடைமுறைகள் எல்லாமே ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது.. கல்லீரல் தேவைப்படுவோர் இதில் பதிவு செய்யும்போது, உரிய நேரத்தில் அரசே கொண்டுவந்து தந்துவிடும்.. இதுபோன்ற செயல்பாடுகளில் யாருமே தலையிட முடியாது, குறுக்கே நுழைந்து லாபி செய்யவும் முடியாது, முடியாது.. அந்தளவுக்கு உடலுறுப்பு தானம் சிகிச்சையில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருகிறது.
இப்படியிருக்கும்போது, கல்லீரல் நோயை குணப்படுத்தக்கூடிய நிலையை தள்ளிப்போட்டு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான நேரத்தையும் தள்ளிப்போட்டு, வேறு ஏதேதோ சிகிச்சை முறைகளை செய்துவிட்டு, அது பலனளிக்கவில்லை என்று தெரிந்ததுமே, கடைசி நேரத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு வந்தால் எப்படி? அந்த மாற்று அறுவை சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்.. உடனே மஞ்சள் காமாலை வந்ததும் அதை குணப்படுத்த முடியாது என்ற முடிவுக்கு பலரும் வந்துவிடுகிறார்கள்.
ஈரல் பாதிப்பு நோயாளிகள்
எனவே கல்லீரல் பாதிப்பு வந்தால், அது எந்த நிலைமையில் உள்ளது? குணப்படுத்தக்கூடிய நிலைமையில் உள்ளதா? என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்..எங்களை நாடி நோயாளிகள் வரும்போது, கல்லீரல் பாதிப்பு எப்படி உள்ளது? குணப்படுத்த முடியுமா? சிகிச்சை எடுத்தால் ஆயுட்காலம் எவ்வளவு? சிகிச்சை எடுக்காவிட்டால் ஆயுட்காலம் எவ்வளவு என்பதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும்.. இதற்குபிறகு சம்பந்தப்பட்டவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பேசி முடிவெடுப்பார்கள்..
ஆனால், கல்லீரல் பிரச்சனை என்றாலே குடியினால் வந்திருக்கும் என்று முடிவுக்குபலரும் வந்துவிடுகிறார்கள்.. அதனால்தான், பலரும் கல்லீரல் பாதிப்பை வெளியே சொல்ல தயங்குகிறார்கள்..
சாப்பிடும் முன்பு "ஆம்" பதில் கிடைத்ததா
கல்லீரல் பாதிப்பு சர்க்கரை நோயாளிக்கும் வரலாம்., வைரஸ் நோயாளிகளுக்கும் வரலாம்.. என்பது போன்ற விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. குடியினால் கூடுதலாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்..கல்லீரலை பொறுத்தவரை, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளக்கூடிய உறுப்பாகும்..
எனவே யாராக இருந்தாலும் நாம் சாப்பிடும் சாப்பாட்டை தவிர்த்து, புதிய விஷயங்களை நாம் உட்கொள்ளும்போது, அந்த உணவு நம்முடைய உடம்புக்கு தேவைதானா? சரியான அளவில்தான் எடுக்கிறோமோ? என்பதை யோசித்து பார்க்க வேண்டும்..
அப்படி புதிதாக நாம் சாப்பிடக்கூடிய உணவு, அல்லது மாத்திரை அல்லது உடல்நலத்துக்காக என்ன சாப்பிட்டாலும்சரி, அவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையா? என்ற கேள்விகளை கேட்டு, அதற்கு ஆம் என்ற பதில் உங்களுக்கு கிடைத்தால் மட்டுமே உட்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications