லேடி இர்ஃபான்.. ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா வீடியோ! தொடரும் கார்ப்பரேட்களின் சதுரங்க வேட்டை: பிரபலம்
சென்னை: சொந்த வாழ்க்கையை வியாபாரமாக்கினதைகூட மக்கள் சகித்து கொண்டார்கள். ஆனால் இன்னொரு நிறுவனத்துக்கு 6 மாத குழந்தையை பயன்படுத்துவதா? இப்படியெல்லாம் நாம் கேட்டால், தனிமனித உரிமையை பாதிப்பதாகவும், தங்களது தனிமனித சுதந்திரம் என்றும் சொல்வார்கள்.. ஆனால், விழிப்புணர்வு இல்லாத நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்," என்று ரோபோ ஷங்கர் மகள் தந்திருந்த விளம்பரம் ஒன்றிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா
சமீபத்தில் ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா, தனது ஆறு மாத குழந்தையை He Guru என்ற நிறுவனத்துக்கு தூக்கி சென்றுள்ளார். குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சியை தூண்டும் பயிற்சியை, அந்த கம்பெனி வழங்குவதாக தெரிகிறது..

இந்த நிறுவனத்துக்குத்தான் தனது குழந்தையை தூக்கி சென்று சில பயிற்சிகள் கொடுக்கப்படும் வீடீயோவை ஷேர் செய்திருந்தார் இந்திரஜா.. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் 6 மாத குழந்தைக்கு இப்போதே இந்த பயிற்சியா? இதெல்லாம் ஓவர்.. அந்த நிறுவனத்தை இப்படியும் ப்ரோமோட் செய்து வீடியோ போடுவதா? எப்போது பார்த்தாலும், தன்னுடைய குழந்தையை வைத்தே ப்ரோமோஷன் செய்து, குழந்தையை வைத்து சம்பாதிக்கிறாரே? என்று கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ரோபோ சங்கரின் 6 மாத பேரனின் மூளையை டெவலப் செய்ய சிறப்பு பயிற்சி என ப்ளூ சட்டை மாறனும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்..
புளூ சட்டை மாறன்
இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இர்பான் அன்று தொப்புள் கொடி துண்டித்த விவகாரத்துக்கே எதிர்ப்பு கிளம்பியது.. அவரையே ரோபோ ஷங்கர் மகள் மிஞ்சிவிட்டார் என்று சொல்லலாம்.
இந்த விஷயத்தில் ரோபோ ஷங்கரை இணைத்து பேசுவதை நான் விரும்பவில்லை.. ஒரு குடும்பத்தில் எல்லா விஷயமுமே அனைவருமே உடன்பட்டுதான் செய்கிறார்களா என்று சொல்ல முடியாது.. இந்திரஜா மணமான பெண்.. அவருக்கு கணவன் குடும்பம் தனியாக உள்ளது.. அதனால், அவரது புரமோஷன்களுக்கு அவரது அப்பாவை இணைத்து பேச முடியாது.
இந்திரஜா திருமணம்
இந்திரஜா திருமணத்தையே, ஒரு சேனலுக்கு விளம்பரத்துக்கு தந்தாரே? என்று சிலர் கேள்வி எழுப்பவே செய்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கர்ப்பமடைந்தது, நலுங்கு வைப்பது என சீர்கள் செய்வதை பார்க்கும்போதுதான், குடும்ப வாழ்க்கை முறையையே இவர்கள் வியாபாரமாக்குகிறார்களே என்றும் பொதுமக்களே முகம் சுழிக்க துவங்கினார்கள்.
ரோபோ சங்கரை பொறுத்தவரை, அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்.. வடிவேலு, விவேக் போன்று மிகச்சிறந்த காமெடியனாக வந்திருக்க வேண்டியவர்.. ஆனால், பிகில் படத்தில் மகள் நடிக்க வந்த பிறகு ரோபோவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.
குழந்தையின் மூளை
ரோபோ ஷங்கர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.. எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்.. சூரி காலகட்டத்திலேயே இவரும் அதே உயரத்தை தொட்டிருக்கக்கூடியவர்.
ஆனால் இவரது மகளுக்கு குழந்தை பிறந்தது, பெயர் வைத்தது, குழந்தையை வைத்து ஒரு நிறுவனத்துக்கு புரமோட் செய்துள்ளதுதான் பலரையும் வியப்புக்குள்ளாக்கி வருகிறது.. சாப்பாடு, லோஷன், கிரீம்கள் போன்றவற்றுக்கு விளம்பரம் என்பதைதாண்டி, குழந்தையின் மூளையையே செயல்பட வைக்கும் என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்..
இந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் சேர்த்ததால்தான், தன்னுடைய குழந்தையின் மூளை சிறப்பாக இயங்குகிறது என்று வேறு யாராவது இதுவரை விளம்பரம் தந்திருக்கிறார்களா?
பொதுவாக, குடும்பத்தினரின் ஜீன்களை பொறுத்தே குழந்தைகளின் குணாதிசயம் இருக்கும். ஆனால், நாம் செய்யும் காரியம் 100 பேருக்கு போய் சேர வேண்டும், அவர்களை கவனிக்க வைக்க வேண்டும் என்ற சதுரங்க வேட்டை பட பாணிதான் இதில் புகுத்தப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் மூளை
நடிகர் சத்யராஜ் அன்று ஈமு கோழிக்காக விளம்பரம் செய்தார்? ஆனால் அவர் ஈமு கோழியை வளர்த்தாரா? சரத்குமார் TMT கம்பிகளுக்காக விளம்பரம் செய்தார், அதற்காக தன்னுடைய வீட்டையும் டிஎம்டி கம்பிகளை வைத்துதான் கட்டினாரா?
He Guru என்ற கம்பெனியின் ஓனர் யார்? தங்கள் மீது நம்பிக்கையிருந்தால், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி போல தன் கம்பெனிக்கு தானே விளம்பரம் செய்ய வேண்டியதுதானே? அதைவிட்டுவிட்டு ஒரு பிரபலமானவர் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ஏன் நினைக்கிறது?
காரணம், பிரபலமானவர்கள் அந்த பொருளை நடுத்தர மக்கள் நம்பவே செய்வார்கள்.. அந்த வகையில், நடுத்தர மக்களின் மனதை கரைத்து, அவர்களை நம்ப வைப்பதற்காக, ரோபோ ஷங்கர் மகள் போன்று பலரையும் விளம்பரத்துக்காக உபயோகித்து கொள்வது, காப்பரேட் மூளையாகும்.
லேடி இர்பான்
விளம்பரப்படுத்திவிட்டு, அந்த கமெண்ட் ஆப்ஷனையே மூடி வைத்துள்ளார்.. ஒரு உயரத்தில் தூக்கி வைக்கப்படும் மக்கள்தான், மீண்டும் கீழே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள்.. யூடியூபர் இர்பானை போல சிறந்த உதாரணம் சொல்ல முடியாது. அந்தவகையில் லேடி இர்பான் என்றுதான் இவரை சொல்ல முடியும்.
சொந்த வாழ்க்கையை வியாபாரமாக்கினதைகூட மக்கள் சகித்து கொண்டார்கள். ஆனால் இன்னொரு நிறுவனத்துக்கு 6 மாத குழந்தையை பயன்படுத்துவதா? இப்படியெல்லாம் நாம் கேட்டால், தனிமனித உரிமையை பாதிப்பதாகவும், தங்களது தனிமனித சுதந்திரம் என்றும் சொல்வார்கள்..
ஆனால், மக்கள் பார்வை என்று ஒன்று உள்ளது.. விழிப்புணர்வு இல்லாத நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்? மீடியா பிரபலங்களை வைத்து ஏமாற்றும் வித்தையே இது" என்று சாடியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications