ரோகிணி திரையரங்கு பிரச்சனை... இது அபத்தம், தெளிவின்மை!? பிக் பாஸ் விக்ரமனின் காட்டமான கருத்து
சென்னை: ரோகிணி திரையரங்கத்தில் நரிக்குறவ பெண்கள் நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படத்தை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது, சமூக வலைத்தளத்தில் பேசப்படும் பொருளாக இருக்கிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த விசிக கட்சியின் பிரபலமும் ஆன நடிகர் விக்ரமன் தன்னுடைய கருத்தை கோபமாக வெளியிட்டு இருக்கிறார்.
சம்பந்தப்பட்ட ஊழியர் மற்றும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விக்ரமன் வலியுறுத்தி இருக்கிறார்.

ரோகிணி திரையரங்கு பிரச்சனை
நடிகர் சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். அதிகமான எதிர்பார்ப்போடு வெளியான இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் பத்து தல திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற நரிக்குறவ பெண்களை டிக்கெட்டுகள் இருந்தும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

கிடைத்த அனுமதி
இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையானதால் ரோகிணி தியேட்டருக்கு எதிராக பல பிரபலங்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இந்த பிரச்சனை பூதாகரமாக மாறிய சில நிமிடங்களில் நரிக்குறவர் பெண்கள் படம் பார்ப்பதற்காக அனுமதித்த தியேட்டர் நிர்வாகம் அதை வீடியோவாக தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தனர். அது மட்டும் அல்லாமல் எதற்காக தாங்கள் அனுமதிக்கவில்லை என்று விளக்கமும் கொடுத்திருந்தனர்.

விக்ரமனின் கருத்து
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான நடிகர் விக்ரமன் தன்னுடைய எதிர்ப்பையும் சமூக வலைத்தளத்தில் காட்டமாக பதிவு செய்து இருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்கள் பிரபலங்கள் என பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் விக்ரமனின் கருத்துக்கு அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

விக்ரமனின் வலியுறுத்தல்
விக்ரமன் தன்னுடைய பதிவில், சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்திருப்பது அப்பட்டமான தீண்டாமை. அதற்கு நிர்வாகம் தரும் விளக்கம் அபத்தமாகவும், சென்சார் விதிகள் குறித்த தெளிவின்மையாகவும் காட்டுகிறது. திரையரங்கத்தின் உரிமத்தை ரத்து செய்து உரிமையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications