சும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் சூர்யாவின் தங்கை ரோஜா காட்டும் அடாவடி ஆட்டம், பார்ப்பவர்களை மிரள வைக்குது.
உடன் வேலை பார்த்த ராஜாவின் மேல் ரோஜாவுக்கு கன்னா பின்னான்னு காதல் ஊற்றெடுக்குது. ஆனா,ரோஜா காதலை நிராகரிக்கறான் ராஜா.
யதேச்சையாக ரோஜாவின் அக்கா சூரியாவை பொண்ணு பார்க்கப் போன ராஜாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சு போகுது. அவளோ கோபியை காதலிக்கறா.

ரோஜாவுக்கு
ராஜா இந்த ரோஜாவுக்குத்தான்னு அப்போ ஆரம்பிக்கறா தன் ஆட்டத்தை. ராஜா தன்னை கெடுத்தான்னு ஆரம்பிச்சு பல நாடகங்கள் போட்டும் பலனில்லை.சாயம் வெளுத்து போகுது.

வெறுப்பு
இதன் விளைவா பெத்த அப்பா கதிரேசன், மத்தவங்க..அக்கா சூர்யா எல்லாருமே இவளை வெறுக்கறாங்க. ராஜா ரொம்ப ரொம்ப வெறுக்கறான். இதனால் ரொம்ப வெறியாட்டம் ஆட ஆரம்பிச்சுடறா ரோஜா.

தேடல்
பொறுக்க முடியாத கட்டத்தில் ராஜா ரோஜா மீது பெரிய காவல் அதிகாரிகள் மூலமா பிரஷர் குடுக்கறான். இதனால் ஓடி ஒளியும் ரோஜா ராஜாவின் வீட்டுக்கே வந்து,அவனை அடிச்சு துவைக்கறா.

என் காதல்
என் காதலை புரிஞ்சுக்க தெரியாத முட்டாள்... போலீஸ்ல கம்பளைண்ட் குடுத்திருக்கியே அதை வாபஸ் வாங்குடான்னு பயங்கரமா அடிச்சுட்டு தன் வீட்டுக்கு போறா.

முரட்டுத்தனம்
அப்பா கதிரேசனிடம் வம்பு இழுத்துகிட்டு மிரட்டறா.. ராஜாவை எனக்கு கல்யாணம்பேசி வைக்கலே.. கத்தியால் குத்திருவேன்னு கத்திய வச்சு மிரட்டறா.. மரியாதை இல்லாம பேசறா. பொருத்துக்க முடியாத சூர்யா, அவளை இழுத்துகிட்டு போயி ரூம்ல தள்ளி பூட்டிடறா.

தகவல்
போலீசுக்கு தகவல் சொல்லி காத்திருக்க, போலீஸ் வந்து ரூம் திறந்து பார்த்தா தப்பிச்சு போயிடறா. போலீஸ் துரத்திக்கிட்டு போறாங்க...நண்பன் ஒருவனின் உதவியோட காட்டில் பதுங்கறா.நம்மை இப்படி ஓட வைக்கறாங்கன்னு இன்னும் எல்லார் மேலயும் வெறி வருது அவளுக்கு.

புலம்பல்
ரோஜாவின் அப்பா கதிரேசன், சும்மாவே ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவா.. இப்போ சலங்கையை வேற கட்டிட்டோம்..இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் ஆட போறாளோன்னு புலம்பறார். சூர்யாவிடம் என்னை போலீஸ்ல காட்டி கொடுத்துட்டே இல்லை..உன்னை வாழ விட மாட்டேண்டின்னு சபதம் வேற போடறா...
இப்படி ஒரு பொண்ணு..எல்லாருக்கும் தண்ணி காட்டறா...நிஜமா பயமாத்தான் இருக்கு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications