மாமியாரை விட்டு போக இந்த அழுகாச்சி அழுவுதே இந்த ரோஜா பொண்ணு...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ரோஜா தோட்டம் மாதிரி பூத்து குலுங்கி, கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு.

எப்போதும் குடும்ப சந்தோசம், ரோஜா அர்ஜுன் ரொமான்ஸுன்னு ரோஜா குடும்பம் களைகட்டி இருக்கும்.

இப்போ ரோஜா அர்ஜுன் கல்யாணம் உண்மையானது இல்லை, ஒரு வருஷ ஒப்பந்த கல்யாணம்னு அத்தைக்கு தெரிஞ்சுருது.

Roja is fond of her mother in law

இனி வீட்டுல எல்லாருக்கும் தெரிஞ்சுரும்னு வீட்டை விட்டு கிளம்ப நினைக்கறா ரோஜா. அர்ஜுன் வா நானும்தானே உன்கூட சேர்ந்து பொய் சொன்னேன். அதுவும் இல்லாம என்னை நம்பித்தானே இந்த வீட்டுக்கு நீ வந்தே..

இப்போ உன்னை மட்டும் தனியா விட்டா நீ எங்க ரோஜா போவே... அதனால நானும் வர்றேன்னு கிளம்பறான் அர்ஜுன். எவ்ளோ சொல்லியும் கேட்காம அர்ஜுன் உடன் கிளம்ப ரோஜா போகலைன்னு சொல்லி படுத்துக்கறா.

Roja is fond of her mother in law

பிரச்சனையை ரெண்டு பேருமே சமாளிக்கலாம் ரோஜான்னு சொல்றான் அர்ஜுன். அவன் தூங்கின பிறகு அத்தைக்கு ரோஜா அழுதுகிட்டே லெட்டர் எழுதறா.

அத்தையுடன் தான் இருந்த நாட்கள்,அர்ஜூனுடன் கழித்த நாட்கள்னு கண்முன் வந்து போகுது. அழுகையை அடக்க முடியாம பெட்டியுடன் கீழே இறங்கி வர்றா.

அத்தை ரூமைத் திறந்தா அவங்க முதுகு பக்கம் காமிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்காங்க. சத்தம் போடாம அழுகையை அடக்கிகிட்டு, லெட்டர், சாவிக்கொத்து ரெண்டையும் வச்சுட்டு, ரூம் கதவை சாத்திட்டு வெளியில போக கதவைத் திறக்கறா.

Roja is fond of her mother in law

முந்தானையை யாரோ இழுப்பது போல இருக்க திரும்பி பார்த்தா, பாட்டியோட இறந்து போன முதல் மகளின் படத்தின் கீழ் செய்து வைத்த அலங்கார சைக்கிள் வீல்.

அவள் அழுதுகிட்டே புகைப்படத்தை பார்த்து, யார்கிட்டயும் சொல்லாம போறோமேன்னு கஷ்டமா இருந்துச்சும்மா.. நீங்க சொல்லிட்டு போன்னு சொல்றமாதிரியே இருக்கு.. போயிட்டு வரேன்மான்னு கிளம்பிட்டா ரோஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+