கடைசியில ரோஜாவுக்கு இப்படி ஆகிப்போச்சே...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ராஜாவை காதலிச்சு, ஆனா, அவன் தன்னை காதலிக்கலேன்னு தெரிஞ்சுகிட்ட ரோஜா, இப்போ பரிதாப நிலையில் இருக்கா.

முதலில் அப்பா கதிரேசனுடன் வம்பு, பிறகு அக்கா சூர்யா கூட வம்பு, ராஜாகிட்ட மோதல் பித்தலாட்டம்னு தன் இஷடத்துக்கு காயை நகர்த்தின ரோஜா, இப்போ தோல்வியில் இருக்கா.

பெண்ணோ ஆணோ.. முதலில் பொறாமை இருக்க கூடாது. தலைக்கனமும் இருக்கக் கூடாது. இது அவங்களுக்கே வினையா அமையும்னு இந்த சீரியலில் காமிச்சு இருக்காங்க.

சொன்ன சொல்

சொன்ன சொல்

ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்த ராஜா மீது ரோஜாவுக்கு காதல் வந்துருது. அதை அவன்கிட்ட சொன்னா.. நீ எனக்கு தகுதியானவ இல்லேன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிடறான். ராஜாவின் இந்த சொல்தான் அவளை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திருக்கு.

 அக்காவை மட்டும்

அக்காவை மட்டும்

அக்கா சூர்யாவை பொண்ணு பார்க்க வந்த ராஜாவுக்கு சூரியாவின் மேல காதலே வந்துருது. இப்போதுதான் ரோஜாவுக்கு பொறாமை மனசுக்குள்ள வருது. இந்த பொறாமை சிறு தீ குச்சியாத்தான் முதலில் பத்துது.

 பரபரப்பு காரியங்கள்

பரபரப்பு காரியங்கள்

அப்போ உருவான தீக்குச்சி, ராஜாவை அடைய பல வேலைகளை செய்ய வைக்குது.அத்தனையும் தீ பத்தும்படியான பரபரப்பு காரியங்கள். அத்தனையிலும் தோல்விதான்... எனினும் ரோஜா சோர்வடையலை.

 மாட்டை கடிச்சு

மாட்டை கடிச்சு

ஆட்டைக் கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில மனுஷனையே கடிச்ச கதையா,இவ ரவுடியா உருவாக்கின செல்வம், இவ சொன்ன திட்டத்தை வச்சே, இன்னும் மூணு ரவுடி பசங்களை சேர்த்துக்கிட்டு ரோஜாவையே கேங் ரேப் செய்துடறான்.

 ரோஜா தோட்டத்தையே

ரோஜா தோட்டத்தையே

தீக்குச்சி இப்போ ரோஜா தோட்டத்தையே அழிச்சுருச்சு.. இப்போ அலங்கோலமான நிலையில் ஆஸ்பத்திரியில் இருக்கா. அப்பா கதிரேசன் பொண்ணாச்சே குலுங்கி அழறார். சூர்யா மயக்கம் போட்டு விழறா.

ஓவர் மசாலா உடம்புக்கு ஆகாது... ஓவர் ஆத்திரம் வாழ்க்கைக்கு உதவாது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+