சின்ன பிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதாம்... உண்மையா போச்சே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் கதை ரொம்ப சீரியஸா போயிகிட்டு இருக்கு.ரோஜாவை நினைச்சா பாவமாயிருக்கோ இல்லையோ.. .அர்ஜுன் தம்பி ரொம்ப பாவம்ங்க.
கல்யாணமே வேண்டாம்னு சொன்ன அர்ஜுன்,ரோஜாவை காப்பாத்த கான்டராக்ட் மேரேஜ் அக்ரிமென்ட் போட்டுக்கறான் அர்ஜுன்.
இந்த ஒரு வருஷத்துக்குள்ள ரோஜா தங்கியிருந்த ஆஸ்ரமத்தின் வழக்கை முடிச்சுட்டு, ரோஜா அப்பா,அம்மா யாருன்னும் கண்டு பிடிச்சு தரேன்னு ரோஜாவுக்கு வாக்குறுதி தர்றான்.

சீல்
ஆஸ்ரமத்துக்கு சீல் வச்சுட்ட நிலையில ரோஜாவுக்கு போக்கிடம் இல்லைன்னு இந்தமுடிவை அர்ஜுன் எடுக்கறான். எல்லாரும் ரோஜா சீரியலில் ராஜாதான் அழகுன்னு சொல்றாங்க.உண்மையா பார்க்கப்போனா அர்ஜுன ரொம்ப நல்லாருக்கான். நல்லஉயரம் ,அதற்கேற்ப உடல்வாகுன்னு சும்மா அசத்தறான்.

தெரிஞ்சு
அர்ஜுன் அம்மாவுக்கு ரோஜாவும், அர்ஜுனும் கான்டிராக்ட் கல்யாணம் செய்துக்கிட்டது தெரிஞ்சு போச்சு.இதனால, ரோஜாவை என் முகத்துல முழிக்காதேன்னு கோவமா சொல்லிடறாங்க.

சின்ன பொண்ணுதானே
ரோஜா சின்ன பொண்ணுதானே..தன் முகத்துல முழிக்காதேன்னு அத்தை சொன்னதும், இனி இவ்ளோ பொய் சொல்லி நாடகமாடிட்டு முகத்துல எப்படி முழிக்க முடியும்னு சொல்லிட்டு,அத்தைக்கு மட்டும் லெட்டர் எழுதி வச்சுட்டு கிளம்பறா.

மவுனம்
வீட்டுல அர் ஜுன் ரோஜா கான்டிராக்ட் மேரேஜ் பத்தி கல்பனா யாருகிட்டயும் சொல்லலை. காலையில் எழுந்து ரோஜாவை காணோம்னு தேடறான்.பாட்டி அவதூறு பேசறாங்க.

ரோஜாவோடதான்
வீட்டுக்கு வந்தா நான் ரோஜாவோடதான் வருவேன்னு சொல்லிட்டு பைத்தியம் பிடிச்சவன் போல தேடி அலையறான்.கடைசியா அவளைக் கண்டுபிடிச்சு ரோஜா ரோஜான்னு கத்த, ரோஜாவுக்கு காதில் விழலை

ஆக்சிடென்ட்
திடீர்னு ஒரு லாரி வருது..அதுல ரோஜா ஆக்சிடென்ட் ஆகி இருக்க வேண்டியது. அவளைத் தள்ளிவிட்டு,தான் மாட்டிக்கறான்.உடனே ஆஸ்பத்திரியில் சேர்த்து,வைத்தியமும் நடந்துகிட்டு இருக்கு.ரோஜா அர்ஜுனின் தம்பிக்கு போன் செய்து சொல்லிட்டு வச்சுடறா. குடும்பமே கதறி அழுதுகிட்டு வர்றாங்க.
பாருங்க சின்னபிள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்ற மாதிரி, கான்டிராக்ட் ஏன் பண்ணுவானேன்.அப்புறம் மாட்டிக்குவானேன்....
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications