என் மேல நம்பிக்கை இல்லையா ரோஜா.. இருக்கு சார்.. ஆனா என் மேலதான் இல்லை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் இரவு ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் நதியா வரவாலும், மதிய நேரத்த்திலிருந்து இரவு நேரத்துக்கு மாற்றியதாலும் டிஆர்பி ரேட்டிங்கில் முந்திட்டு வருது.

இருந்தாலுமே வழக்கம்போல ரோஜா குடும்பமே சீரியலை தொய்வில்லாமல் குடுத்துக்கிட்டுத்தான் இருக்காங்க. நதியா நடிகையாகவே இதிலும் நடித்திருப்பதால், அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு இப்போது இல்லாமல் போனதென்னவோ உண்மைதான்.

இருந்தாலும் நதியாவுக்குன்னு கோடி ரசிகர்கள் இருப்பாங்க, அவங்களை ரோஜா சீரியல் நடிகை நதியா ரொம்பவே மனம் கவர்ந்திருப்பார். அவர்கள் குஷியாக சீரியல் பார்ப்பார்கள். இதனாலும் ரோஜா சீரியல் ரேட்டிங் முன்னுக்கு வர தொடங்கி இருக்கலாம்.

ரவிக்கை

ரவிக்கை

ரோஜாவுக்கு மாமியார் கல்பனா ஆசை ஆசையா எடுத்து குடுத்த புடவைக்கு ரவிக்கை தைக்க டெய்லரிடம் கல்பனா குடுக்க,, அந்த அளவு ரவிக்கையை டெய்லர் தொலைச்சுட்டார். நீங்களே அளவு எடுத்து குடுங்கம்மா நான் தச்சுடறேன்னு அவர் சொல்ல, அர்ஜுனை அளவு எடுக்க சொல்றாங்க கல்பனா அம்மா

ரோஜாவுக்கு ரவிக்கை

ரோஜாவுக்கு ரவிக்கை

அர்ஜுன் ரோஜாவுக்கு அளவு எடுக்கத் தயங்க, ரோஜாவும் தயங்கி நிற்க... பின்னர் மெதுவாக கை அளவு எடுக்கிறான். பின்னர் ஷோல்டர் அளவு.. முதுகு அளவு எடுக்கும்போது அவன் அவளது தலைமுடியை மெதுவாக முன்னால் எடுத்து போட வெட்கப்பட்டு ஓடிவிடுகிறார்கள் கல்பனாவும், சுமதியும்.

சொன்னது நிஜத்துல

சொன்னது நிஜத்துல

ரோஜா.. நதியா மேடத்துக்கிட்ட சொன்னது நிஜத்துல நடந்தா நல்லாருக்கும் இல்ல ரோஜான்னு சொல்றான் அர்ஜுன்.அதெப்படி சார் நடக்கும்னு சொல்லிட்டு கீழே படுக்க போகிறாள். ரோஜா இனிமே நீ கீழ படுக்க கூடாது.நதியா மேடம் இருக்கற வரைக்கும் நம்மை அவங்க வாட்ச் பண்ணிகிட்டே இருப்பாங்கன்னு சொல்றான்.

கதவை சாத்திடறோமே

கதவை சாத்திடறோமே

அவங்களுக்கு எப்படி சார் தெரியும்.. நாமதான் கதவை சாத்திடறோமேன்னு ரோஜா சொல்ல, அதனாலதான் அவங்களுக்கு சந்தேகம் கூடும்னு அர்ஜுன் சொல்றான். ஒரே வீட்ல இருக்கோம்.. ஒரே ரூம்ல கூட இருக்கோம்.. ஒரே கட்டில்ல எப்படி சார்னு ரோஜா கேட்கறா.

நம்பிக்கை

நம்பிக்கை

என்மேல நம்பிக்கை இல்லையா ரோஜா.. நீ தினமும் கீழதானே படுத்துக்கற..கட்டிலுக்கு, இதுக்கும் எவ்ளோ தூரம்.. உன்னை ஏதாவது செய்திருப்பேனான்னு கேட்கறேன் அர்ஜுன். உங்க மேல நம்பிக்கை இருக்கு சார், என் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்லன்னு ரோஜா அதிர வைக்கறா.

உன் மேலயா

உன் மேலயா

ஆமா சார், ஆஷ்ரமத்துல பசங்க கூட படுத்தே பழக்கமாயிருச்சு. அவங்க மேல கை, காலை போடுவேன் சார்.. அதான் பயமாருக்குன்னு சொல்றா. கதவை திறந்து வைக்கறேன்.. நீ அந்த பக்கம், நான் இந்த பக்கம் படுத்துக்கலாம்.. ஓகேன்னு சொல்லிட்டு கதவை திறந்து வைக்கறான் அர்ஜுன். இருவரும் படுத்துகிட்டாங்க..

மன உறுதிக்கு முன்னால பஞ்சாவது... நெருப்பாவுது... பக்கத்திலயாவது...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+