Roja Serial: ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில்... சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ,முதலில் பகல் மூன்று மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் இந்த சீரியலை இரவு 9 மணிக்கு சன் டிவி ஒளிபரப்பி வந்தது.

இப்போது ரோஜா சீரியல் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலின் காட்சி அமைப்புக்கள், வசனங்கள் என்று சீரியல் நன்றாகவே போகிறது.

அர்ஜுன் லாயர் என்பதால், இவனுக்கான வசனங்கள் மிக நன்றாக இருப்பதோடு, சுவாரஸ்யமாகவும் சீரியலை பார்க்க தூண்டும் படியும் இருக்கிறது.

காட்சிகள் பெரும்பாலும்

காட்சிகள் பெரும்பாலும்

ரோஜா சீரியலின் காட்சிகள் அடிக்கடி ஒரே லொக்கேஷனில் ஒரே இடத்தில் என்று ஷூட் செய்யப்பட்டு இருந்தாலும் போரடிக்காமல் வசனங்கள், காட்சி அமைப்புக்கள் என்று கொண்டு போகிறார்கள். குடும்ப சண்டையாகட்டும், இல்லை சாப்பிடுகையில் விவாதமாகட்டும் என்று இப்படி ஒரே இடத்தில் ஒரு எபிசோடையும் நகர்த்தினாலும் நன்றாகவே இருக்கிறது.

கல்யாணத்துக்கு புடவை

கல்யாணத்துக்கு புடவை

அணு அஸ்வின் கல்யாணத்துக்கு புடவை எடுக்க பாட்டி புடவைக்காரரை வீட்டுக்கே வரவழைக்கறாங்க. தன் பேத்தி அணுவிடம் பாட்டி, அணு நமக்கு பரம்பரை பரம்பரையா இவங்கதான் கல்யாணத்துக்கு புடவை குடுத்து வர்றவங்க. இந்த பாரம்பரியம் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு உரித்தான கவுரவம். இது ஒண்ட வந்தவங்களுக்கு தெரியாது. நீ தெரிஞ்சுக்கோ அணு என்று, ரோஜா ஒரு அனாதை என்பதை சுட்டிக் காட்டி பேசறாங்க.

பேத்தி கல்யாணம்

பேத்தி கல்யாணம்

பேத்திக்கு கல்யாணம் நடக்க போகுது.. மருமகளே.. எல்லாரும் அவங்கவங்களுக்கு வேணும்ங்கற புடவையயை எடுத்துக்கலாம்னு சொல்றாங்க பாட்டி. கல்பனா, சுமதிக்கா எல்லாரும் எடுத்துக்கலாம்னு அத்தையே சொல்லிட்டாங்க.. ம்ம்..ம்ம்..னு கண்ணை காண்பித்து ரோஜாவை புடவை எடுத்துக்கும்படி சொல்ல, ரோஜா ஆசையா புடவை எடுக்க வர்றா.

அழகிய புடவை

அழகிய புடவை

அழகிய புடவை ஒன்றை ரோஜா எடுத்து ஆசையாய் தோளில் போட்டுப் பார்த்து, இதை நான் எடுத்துக்கறேன்னு சொல்ல பாட்டி வெடுக்கென்று பிடுங்கிப் போட்டு, எல்லாரையும்னா நான் நம்ம குடும்பத்தை சேர்ந்தவங்களை சொன்னேன்.குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வச்சவங்களை சொல்லலைன்னு சொல்றாங்க.

 வாடிய ரோஜா

வாடிய ரோஜா

கல்பனா தனக்கு புடவை எடுப்பது போல, ரோஜாவுக்கு அவள் எடுத்த புடவையை எடுக்க, இதை பார்த்த அணு, பாட்டி எனக்கு அத்தை எடுத்து இருக்கற அந்த புடவை ரொம்ப பிடிச்சு இருக்குன்னு சொல்லி அதை வாங்கிக்கறா .ரோஜா முகம் வாடிப் போகிறது. மாடியில் இருந்து அர்ஜுன் இறங்கி வர்றான். இப்படி ஒரே இடத்தில் மொத்த எபிசோடையும் சுவாரஸ்யமாக எடுத்து இருக்கிறார் இயக்குநர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+