Roja Serial: யாரோ போல அர்ஜுன் வந்து ரொம்ப கலகல!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலின் நேரத்தை மாலை ஏழு மணிக்கு என்று மாற்றி நான்கு நாட்கள் ஆகிறது. நிறைய பேருக்கு அது பார்க்க முடியாத நேரமாகவும் இருக்கிறது.
அர்ஜுன் செய்யும் கலாட்டா, அவனது கலாட்டாவால் வீடே அதிர்ந்து, எப்போது என்ன செய்வானோ என்று பயத்தில் இருப்பது என்று,அர்ஜுன் வந்தாலே சீரியல் கல கலன்னு இருக்குது.
இதில் தம்பி அஸ்வினின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கே அர்ஜுனையும், அவனது மனைவி ரோஜாவையும் தவிர்த்துட்டு குடும்பமா போறாங்க. காரணம் தம்பி அஸ்வின் அணுவை கல்யாணம் செய்துக்கறது அர்ஜுனுக்கு பிடிக்கலை

ரோஜா கைகோர்த்து
அஸ்வின் பிறந்த நாளில்தான் அன்னபூரணி பேத்தி என்று பொய் சொல்லி, அணு அர்ஜுன் வீட்டுக்கும் ரோஜாவின் ஆதாரத்தை வச்சுக்கிட்டு ஆள் மாறாட்டம் செய்து புகுந்துக்கறா. எல்லாரும் அணுதான் உண்மையான பேத்தி என்று நினைத்து இருக்க, அவள் பையா கொலை கேசில் இன்வால்வ் ஆகி இருக்கான்னு சொல்லி, அவளை அஸ்வினுக்கு கல்யாணம் செய்து வைக்க கூடாதுன்னு அர்ஜுன் சொல்லை வீட்டில் யாரும் கேட்கலை. அதைத் தடுத்து நிறுத்தவே இப்போது சர்பிரைஸாக தம்பி பிறந்த நாளுக்கு ராஜாவுடன் கை கோர்த்து வந்திருக்கான் அர்ஜுன்.

பார்ட்டிக்கு விருந்தாளி
தம்பியின் பார்த் டே பார்ட்டியில்தான் அணுவை அஸ்வினுக்கு மனைவியாகப் போகிறவள் என்று அறிவிக்க போகிறார்கள். எனவே ,இதைத் தவிர்க்க வேண்டும் என்றே அழையா அண்ணனாக மனைவி ரோஜாவை அழைத்துக்கொண்டு கிளம்பி வந்து இருக்கான் அர்ஜுன். நீங்கதான் அஸ்வின் பாட்டியா ஆசிர்வாதம் பண்ணுங்கன்னு தன் பாட்டியிடமே அலப்பறை பண்றதும், நீங்க அஸ்வின் அப்பா பிரதாப்தானே.. உங்களை நான் பார்த்து இருக்கேன்னு சொல்லி பாராட்டறதும் என்று ஒரே கலாட்டா.

வீட்டு மாப்பிள்ளை
அத்தை யசோதாவின் புருஷன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க, அவரை பார்த்து கிண்டல் அடித்து, நக்கல் அடித்து இப்படி இருக்கீங்களே.. உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையான்னு அவமானப் படுத்துவது என்று எல்லாம் செய்துவிட்டு ,கடைசியாக அனுவிடம் போகிறான்.

சொல்லிட்டேங்களே மாமா
அணு நீ உனக்கும், அஸ்வினுக்கு கல்யாணம்னு அறிவிக்கும் போது எனக்கு அஸ்வின் மாமாவை கல்யாணம் செய்துக்க விருப்பம் இல்லைன்னு சொல்லிடணும்.இல்லேன்னா விக்டர் நான் என்ன சொல்றேனோ அதைத்தான் சொல்வான்னு சொல்றான்.அதுதான் என்ன சொல்லணும்னு சொல்லி அனுப்பி வச்சி இருக்கீங்களே மாமா..போதும், இனிமேல் சொல்ல வேண்மானு சொல்றா அணு.
இப்படி அர்ஜுன் ஜாலி மூடில் எல்லாத்தையும் செய்துகிட்டு இருக்க, பூஜாவை கல்யாணம் செய்து வைக்கலேன்னா நான் சாகப்போறேன்னு அஸ்வின் கடற்கரைக்கு போயிகிட்டு இருக்கான் உயிரை விடுவதற்கு.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications