Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Roja Serial: வொய்ஃபி ரோஜா புடவை கட்டுவதை கண்ணாடி வழியாக...அடடா அர்ஜூன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் நாயகன் அர்ஜுன் நல்ல பெர்சனாலிட்டி. நல்ல உயரம்,அழகு என்று காலேஜ் பொண்ணுங்களுக்கு பிடிச்ச பையன். இவரை பார்ப்பதற்காக நிறைய பெண்கள் ரோஜா சீரியலை பார்ப்பதுண்டு.

அதே போல கதையின் நாயகி ரோஜா...நல்ல அழகு.வெள்ளை நதி என்று வர்ணிக்கும் அளவுக்கு நிறத்தில் வெள்ளை. பார்க்கும் அத்தனை குடும்ப பெண்களுக்கும் பிடிக்கும் மாதிரியான ஒரு கதாபாத்திரம்.

அர்ஜூனுக்கும், ராஜாவுக்கும் நல்ல பொருத்தமான கதாபாத்திரம். ஹைதராபாத்தில் இருந்து வந்திருக்கும் இருவருக்குமே தமிழ் மொழி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்றாலும், பாத்திரம் புரிந்து மிகமிக நன்றாக நடித்து இருக்கிறார்கள்.

காட்சிகள் வீட்டுக்குள்

காட்சிகள் வீட்டுக்குள்

வீட்டுக்குள் வசிக்கும் அத்தனை கதா பாத்திரங்களையும் ஒரு காட்சியில் இணைத்து அதை மிக அழகாக, சலிப்பு தட்டாமல் அதிரடி வசனங்கள் சேர்த்து காட்சிகளை எடுத்து மக்களை ரசிக்க வைப்பதில் இயக்குனர் வல்லவர் என்று நாம் முன்பே சொல்லி இருந்தோம். முதல்நாள் புடவைக்காரர் காட்சி நடு ஹாலில் நடந்து அடுத்த எபிசோடில் கூட முடியவில்லை என்றாலும், காட்சியில் அத்தனை சுவாரஸ்யம் என்றால் பாருங்களேன்..

மாடியிலிருந்து அர்ஜுன்

மாடியிலிருந்து அர்ஜுன்

வீட்டு ஹாலில் எல்லாரும் பட்டுப் புடவைகள் எடுத்துக்கொண்டு இருக்க, .சுமதிம்மா நம்ம வீட்டில்புதுசா புடவை பிசினெஸ் ஆரம்பிச்சு இருக்காங்களா...இருக்கற பணம் போதலையான்னு கேட்டுகிட்டே வர்றான்.இல்லை அர்ஜுன் தம்பி நம்ம அஸ்வின்,அனுவுக்கு கல்யாணம் நடக்குது இல்லை...இவங்க காஞ்சிபுரத்திலிருந்து புடவை கொண்டு வந்து இருக்காங்க.பரம்பரை பரம்பரையா இவங்க குடும்பம்தான் நம்மைவிட்டு கல்யாணத்துக்கு புடவை தருவாங்களாம்னு சொல்றாங்க வேலைக்காரி சுமதி.

புடவை ரோஜா

புடவை ரோஜா

ரோஜா நீ ஏன் தள்ளி நிக்கறே..உனக்கு புடவை எடுத்துக்கலைன்னு கேட்கிறான் அர்ஜுன்.எனக்கு வேணாம் சார்னு ரோஜா சொல்ல, அவளின் தோளில் கை போட்டுகொண்டு, ஒரு பொண்ணு புடவை வேணாம்னு சொன்னா ரெண்டு காரணம்தான் இருக்க முடியும். ஒன்னு அவன் புருஷனுக்கு புடவை எடுத்து குடுக்க வக்கு இல்லாமல் இருக்கணும். நான் எத்தனை புடவை வேணும்னாலும் எடுத்து குடுப்பேன்.ரெண்டாவது ஆசையா புடவை எடுக்க வந்த என் பொண்டாட்டியை யாராவது அசிங்கப்படுத்தி இருக்கணும்.என்ன நடந்துச்சு சுமதிம்மான்னு அர்ஜுன் கேட்கறான்.

தம்பி வம்பு

தம்பி வம்பு

எனக்கு எதுக்கு தம்பி வம்பு... ரோஜா அதோ அந்த புடவையை ஆசையா எடுத்துச்சு..பெரிய அம்மா புடுங்கிப் போட்டுட்டாங்க..இதெல்லாம் நான் சொல்லி வம்புல மாட்டிக்கறதான்னு சொல்ல, உடனே அந்த புடவையை எடுத்து ரோஜாவின் தோளில் வச்சு பார்க்கறான்.மருமகளே.. அது கல்யாணப் பொண்ணு அணு ஆசையா எடுத்து வச்ச புடவைன்னு பாட்டி கத்தறாங்க.. புடவைகாரரே..இந்த புடவையை என் பொண்டாட்டி ஆசையா எடுத்துட்டா.அவங்க கேட்டதுக்கு டபுளா பணம் ட்ரென்ஸ்ஃபர் பண்றேன். அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்கன்னு கேட்டு உடனடியா பணத்தை அனுப்பிடறான்.

ஆசையா வொய்ஃபி

ஆசையா வொய்ஃபி

ரோஜாவை நீ வா வொய்ஃபின்னு ஆசையா கூப்பிட்டு, புடவையை கட்டிப் பார்த்து நாம் டூயட் பாடலாம்னு மேலே அணைச்சபடி அழைச்சுக்கிட்டு போறான்.அங்கே புடவையை கட்டி காமி ரோஜான்னு சொல்ல, சார் நீங்க வெளியில போங்கன்னு இவள் சொல்ல, எப்படியும் கொசுவத்தை மடிக்க என்னைத்தான் கூப்பிடுவே...நான் கண்ணை மூடிக்கிட்டு திரும்பி உட்கார்ந்துக்கறேன் ரோஜா.நீ கட்டிட்டு கூப்பிடுன்னு சொல்றான்.


திரும்பினால் கண்ணாடியில் அவள் புடவை மாற்றுவது தெரிகிறது ரசித்து பார்த்துக் கொண்டு இருக்க, திரும்பிய ரோஜா இதை பார்த்துட்டு,சார்னு சொல்லி வெட்கப்படறா... இது ஒரு சுவையான காட்சிதான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+