Roja Serial: ஞாயிறு ஒளி மழையில்...ரோஜா! கண்டு களிக்க வந்தாள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு சன் டிவி ஞாயிற்று கிழமை இரவு 9:30 முதல் 10:30 மணி வரையான நேரத்தை ஒதுக்கித் தந்தது. அப்படி ஒளிபரப்பான ரோஜா சீரியல் ஞாயிறு இரவு நேரத்துக்கு பார்த்து ரசிக்க நன்றாக இருந்தது. ஒரு மணி நேர ஆக்ஷன் படம் போல பொழுது போக்காக இருந்தது.

ஏற்கனவே ரோஜா சீரியல் சினிமா பாணியில் பயணிக்கிறது என்று சொல்லி இருந்தோம். சீரியலில் வரும் காட்சிகள், கேமிரா ஆங்கிள், படப்பிடிப்பு, நடிப்பு, வசனங்கள் என்று ரோஜா ஒரு சினிமா போலத்தான் இருந்து வருகிறது.

ஆக்ஷனுக்குத் தகுந்தாற் போன்று நடிகர் சிபு சூரியன் கல்லூரிப் பெண்கள் விரும்பும் அழகிய கதாநாயகனாக இருக்கிறார். இவருக்கு வார்த்தை வருவதற்கு முன்பே ஆக்ஷன் வந்துவிடுவது.. தமிழ் டயலாக் பேசி நடிப்பதிலும் கியூட்டாக இருக்கிறார்..

 அனு ரோஜா அர்ஜுன்

அனு ரோஜா அர்ஜுன்

அனுவுக்கு அஸ்வினுடன் கல்யாணம், அஸ்வின் பூஜா என்கிற பெண்ணை லவ் பன்றான். அனு இந்த வீட்டுப் பெண் என்று பாட்டியை ஏமாற்றி வருவதை கண்டு பிடித்து, அவள் இந்த வீட்டு பெண் இல்லை, பையா கணேஷ் கொலையில் தொடர்புடைய குற்றவாளி என்று அஸ்வினின் அண்ணன் அர்ஜுன் நிரூபித்து இந்த கல்யாணத்தை நிறுத்த கடந்த ஒரு வருஷமா போராடுகிறான் அர்ஜுன். ஆனால், முடியவில்லை.இதோ பாட்டி அன்னபூரணி அம்மா கல்யாண மண்டபம் வரை அனு, அஸ்வினை அழைச்சுட்டு வந்துட்டாங்க.

 முடியலை இழுவை

முடியலை இழுவை

கல்யாணம் நடக்காது, கல்யாணத்தை நிறுத்தப் போறேன்னு அர்ஜுன் சொல்லி சொல்லி இழுப்பது தாங்க முடியாமல் சன் டிவியே, ராசாத்தி சீரியலில் ஒருத்தி கல்யாணத்தை நடத்தி முடிக்க சிறப்பாக ஞாயிற்றுக் கிழமையில் இரவு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது போல, ரோஜாவுக்கும் ஒதுக்கித்த தந்தது. சரி, எப்படியாவது கல்யாணத்தை அர்ஜுன் தடுத்து நிறுத்திடுவான் இந்த ஒரு மணி நேர சிறப்பு ஸ்லாட்டில் என்று நினைத்தால்....இன்னும் இழுவைதாங்க.

 புள்ளீங்கோ பைக்

புள்ளீங்கோ பைக்

ஞாயிற்று கிழமை என்று எதிர்பார்த்து உட்கார்ந்தவர்களுக்கு ஒரு மணி நேர ஆக்ஷன் பிளஸ் காமெடி திரைப்படம் போல பார்க்க நன்றாக இருந்ததே தவிர, கதை என்னவோ பழைய இழுவையில்தான் முடிந்தது. பூஜா வீட்டுக்கு போயி என்ன நடந்தது என்று கேட்க புறப்படும் அர்ஜுனுக்கு ஒரு சண்டை காட்சி வேறு. இதில் பைக் ரைடில் தேர்ந்த, பைக் சாகசம் செய்யும் புள்ளீங்கோ 6 பேர் நடிச்சு, பைக் சாகசம் செய்யறாங்க. கடைசியில் நாயகன் அர்ஜுனிடம் தோற்று பைக் ஒரு பக்கம் தாங்கள் ஒரு பக்கம்னு விழுந்து கிடக்கறாங்க. எல்லாம் நம்ம ஹீரோ சார் கைவண்ணத்தால்தான்.

 வடிவுக்கரசி லதா

வடிவுக்கரசி லதா

நடிகை லதா நல்ல காமெடி செய்து அந்த எபிசோடில் நடித்து இருந்தாங்க. வடிவுக்கரசி கண்டிப்புடன் இருந்தாலும், நேற்றைய எபிசோடை ஜாலியா கொண்டு போகணும் என்று முடிவு செய்து, கல்பனா, ரோஜாவுக்கான காமெடி டயலாக்...ஹீரோவுக்கான மாஸ் படம் என்கிற நினைவிலேயே எபிசோடை ஒளிபரப்பி இருந்தார்கள். கொஞ்சமும் எமோஷன்ஸ் கூட்டி காட்டக் கூடாது என்கிற முடிவிலேயே கவனமாக ஞாயிறு ஒரு மணி நேரத்தை உபயோகப்படுத்திக்கொண்டு இருக்கிறது ரோஜா டீம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+