Roja Serial: இதெல்லாம் சூரிய வம்சத்துலயே பார்த்தாச்சுங்க!
Recommended Video
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலின் ஒரு காட்சி அப்படியே சூரிய வம்சம் படத்தின் காட்சியை நினைவு படுத்துது. அப்புறம் இதெல்லாம் நாங்க சூரிய வம்சம் படத்துலயே பார்த்தாச்சுங்கன்னு சொல்லாம என்ன பண்றதாம்?
ரோஜா சீரியலில் நடிக்கும் ரோஜா, அர்ஜுன் பொருத்தமான ஜோடி. ரோஜாவாக நடிக்கும் பிரியங்கா ஆந்திராவில் இருந்து வந்தவர் என்றாலும் நடிப்பு அபாரம்.
அர்ஜுன் லாயர் என்பதால் டயலாக் அதற்கேற்ப அதிரடியாக எழுதி இருக்கிறார்கள். ஆனால், இப்போது வர வர ரோஜா போரடிக்குதுங்க.

ரோஜா நதியா
ரோஜா சீரியல் முதலில் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. அடுத்து இதை இரவு 9 மணிக்கு என்று மாற்றி, சிறப்பு நடிகையாக நதியாவை சில எபிசோட்களில் நதியாவாகவே நடிக்க வைத்தார்கள். அதே சூட்டோடு கண்மணி சீரியலுக்கு 9 மணி நேரத்தை ஒதுக்கித்த தந்து ரோஜா சீரியல் இரவு 7 மணிக்கு என்று மாற்றினார்கள்.

இப்போது ஏனோ
ரோஜா சீரியலின் ஷூட்டிங் ஸ்டைல்ஸ், டயலாக்ஸ் டெலிவரி, நடிகர் நடிகைகளின் நடிப்பு என்று எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.இப்போது ஏனோ ரொம்ப லாஜிக் இல்லாமல் கதை நகர்ந்துகொண்டு இருக்கிறது.ஒரு லாயர் வீட்டு பூஜை அறையில் பாம் வெடிச்சு இருக்கு.

கண் போச்சு ரோஜாவுக்கு
பாம் வெடிச்சதில் ரோஜாவுக்கு கண் போச்சு. வீட்டுக்குள்ளே பாம் எப்படி வெடிச்சதுன்னு ஒரு போலீஸ் என்கொய்ரி வைக்க மாட்டாங்க? கண்ணு தெரியாத ரோஜாவை வச்சு எதிரிங்க கேம் விளையாட கன்டென்ட் வேணும்னு கதையை இப்படி நகர்த்தினா.. இதுவரை இருந்த சீரியலுக்கான கிளாஸ் தரம் தாழ்ந்து போச்சு.

கண்ணாடித் துகள்கள்
அணு, யசோதா, பாலு மூவரும் மாடிப்படியில் கண்ணாடித் துகள்களைத் தூவி வச்சுடறாங்க. கண் தெரியாத ரோஜா அதில் கால் வச்சு கால் செஃப்டிக் ஆகி ரோஜா சாகட்டும்னு நினைக்கறாங்க. அதே மாதிரி ரோஜா காதில் ஹெட்செட்டை மாட்டிகிட்டு பாட்டு கேட்டுகிட்டே மாடிப்படியில் இறங்கி வர்றா.

ரோசாப்பூ சின்ன
உடனே புருஷன் அர்ஜுன் வந்து பார்த்து ரோஜா ரோஜான்னு கத்தி கால் வைக்காதேன்னு சொல்றான். அவள்தான் காதில் ஹெட்செட்டை மாட்டிகிட்டு வர்றாளே.. உடனே இவர் ஓடிப்போய் அவள் பாதம் படும் இடத்தில் தனது உள்ளங்கையால் அவள் பாதத்தை தாங்குகிறான். இவன் பின்னங் கையில் கண்ணாடி குத்திருது.
எத்தனை தடவைங்க பார்க்கறது... சூரிய வம்சத்துக்கு முன்னாலேயே பல படங்களில் பார்த்தும்...இப்படியா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications