Roja Serial: அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே!
சென்னை: நவராத்திரி நாட்களில் நமது வீட்டு பெண்கள் காலை முதல் மாலை வரை என்று இன்னிக்கு என்ன இன்னிக்கு என்ன என்று யோசித்து யோசித்து செயல்பட்டு கொண்டு இருப்பார்கள்.
அதாவது கொலு வைத்து இருக்கும் வீட்டு பெண்கள். இன்று மாலை என்ன பிரசாதம் செய்யலாம், வரும் சுமங்கலி பெண்களுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுப்பார்கள்.
மாலை நேரமாகிவிட்டால் போதும், அதே பெண்கள் பட்டுப்புடவை, நகை, தலை நிறைய பூ என்று பூஜை நேரத்தில் அவர்களும் ஒரு அம்மன் மாதிரி வளைய வருவார்கள். கொலுவில் பாட்டு என்ன, பரத நாட்டியம் என்ன என்று அமர்க்களப்படும். அலைபாயுதே பாடல் நிச்சயம் இடம் பெறும்.

ரோஜா சுமங்கலி
சன் டிவியின் ரோஜா சீரியலில் வீட்டின் ஹாலில் பெரிய அம்மனை வைத்து சுமங்கலி பூஜை செய்துகொண்டு இருக்கிறார்கள். அப்போது அன்னபூரணி பாட்டி, வீட்டு சுமங்கலியாக இருக்கும் ரோஜாவை வெறுப்பது இந்த நவராத்திரி காலத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது.

இல்லை ரோஜா
ஏழு சுமங்கலிகள் இல்லை என்று ரோஜாவை சேர்த்து ஏழு பேராக இருக்கட்டும் என்று கல்பனா அத்தை ரோஜா நீயும் சாப்பிட உட்காருன்னு சொல்றாங்க. இல்லை அத்தை பாட்டி திட்டுவாங்கன்னு ரோஜா சொல்ல, இல்லை ரோஜா பாட்டிக்கு சாஸ்திர சம்பிரதாயம்னா உயிர். ஆறு சுமங்கலிகள் சாப்பிட்டா ஆகாதுன்னு, நீ உட்கார்ந்து சாப்பிட்டா ஒண்ணும் சொல்ல மாட்டாங்கன்னு சொல்றாங்க.

பந்தியில் ரோஜா
பந்தியில் ரோஜாவும் உட்கார்ந்து சாப்பாடும் பரிமாறிய நிலையில், வீட்டுக்கு போயிருந்த இன்னொரு சுமங்கலி வந்துடறாங்க. பாட்டி வந்து பார்த்துட்டு, உடனே மருமகளே என்ன இவ இலையில் உட்கார்ந்து இருக்கா. அவளை எழுந்திரிக்க சொல்லுன்னு கத்தறாங்க. அத்தே 6 சுமங்கலிதான் இருந்தாங்க. அதனாலதான் நம்ம வீட்டு சுமங்கலின்னு ரோஜாவை உட்கார வச்சேன்னு கல்பனா சொல்றாங்க.

வந்தாச்சே இப்போதான்
இப்போதான் அவ வந்துட்டாளே.. இவளை எழுந்திருக்க சொல்லிட்டு, அவளை உட்கார சொல்லுன்னு சொல்றாங்க.எழுந்திரிக்க சொல்லு மருமகளேன்னு மறுபடியும் கத்தறாங்க.ரோஜா அழுதுகொண்டே எழுந்திருக்கிறாள். வழக்கம் போல புருஷன் அர்ஜுன் வந்து, அவளை உட்கார வைத்து இலை போட்டு சோறு பரிமாறுகிறான்.

சாப்பிட உட்கார்ந்த
சாப்பிட உட்கார்ந்த பின்னர் எழச் செய்யவது எந்த ஊர் நாகரீகம்ங்க?.பாட்டி என்பவர் இப்படி இருக்க மாட்டார்களே என்று பல கேள்விகள் வருது. ஆனால், அந்த இடத்தில் புருஷன் அர்ஜுனை உசத்தி காண்பித்து காட்சியை மாஸாக்கி காண்பித்தது நன்றாக இருந்தது.
நவராத்திரியில் பெண்களை ஆராதிப்போம்!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications