Roja Serial: வேர் ஈஸ் தெ பார்ட்டி...அட நம்ம வூட்ல பார்ட்டி!
சென்னை: தொலைக்காட்சி சீரியல்களில் பார்ட்டி கல்ச்சர் அதிகமாயிருச்சு. முதலில் இந்த பார்ட்டி கல்ச்சரை சீரியலில் ஆரம்பிச்சு வச்சது விஜய் டிவின்னு கூட சொல்லலாம்.
விஜய் டிவியில் பார்ட்டி என்று ஒரு எபிசோட் வச்சு பெண்களை விதம்விதமான அலங்காரத்திலும், ஆண்களை விதம் விதமான உடைகளிலும் காட்சிப் படுத்தி பார்ட்டி சீன்களை எடுப்பார்கள்.
இப்போது எல்லா தொலைக்காட்சி சீரியல்களிலும் இது அதி முக்கியமான காட்சி போல ஆகிவிட்டது. சன் டிவியின் ரன் சீரியலில் பார்ட்டி காட்சிகள் வைத்தார்கள்.

பார்ட்டி எபிசோட்
சன் டிவியில் இன்று இரவு ஒளிபரப்பாக இருக்கும் ரோஜா சீரியலில் ஒரு கெட்டுகெதர் பார்ட்டி நடக்கிறது.இந்த பார்ட்டிக்கு என்று அதில் நடிக்கும் நடிகைகள் விதம் விதமான உடைகள், முடி அலங்கரம் என்று அசத்துகிறார்கள்.பார்ட்டி என்றால் அது இல்லாமலா?

என்னது அது?
அது என்றால் என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.. பார்ட்டி என்றால் இப்போது சின்ன பசங்க கூட மது போதை பார்ட்டி என்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட பார்ட்டிக்கு மது அருந்தாதவர்கள் போயி ஜூஸ் குடித்தால் கூட மது அருந்துவதாக பேசும் காலம் இது.

ரோஜா சீரியல்
சன் டிவியின் ரோஜா சீரியல் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. இதற்கு காரணம் என்று பார்த்தால், பல விஷயங்கள்... அதில் ஒன்று சீரியலின் படப்பிடிப்பு சினிமா பாணியில் மிக ரிச்சாக இருப்பது. தொய்வடையும் நேரத்தில் பிரபலங்களை சீரியலுக்குள் இழுத்து விடுவது என்பது ஒரு பக்கம் இப்படி சீரியலை நிலை நிறுத்தி விடுகிறார்கள்.

ரோஜா அர்ஜுன்
சீரியலின் நாயகி நாயகன் ரோஜா, அர்ஜுன் ஜோடிப் பொருத்தம்.. இப்போது வடிவுக்கரசியுடன் நடிகை லதா கை கோர்த்து இருப்பது. என்று எல்லாமே சீரியலுக்கு பிளஸாக இருக்கிறது. இத்துடன் இப்போது ரோஜா சீரியலில் நடிக்கும் இளம் பெண்களை விதம் விதமான உடையில் அலங்கரித்து பார்ட்டி எபிசோடை இன்று ஒளிபரப்ப இருக்கிறார்கள்.
இது என்ன மாதிரியான பார்ட்டி என்று ப்ரோமோவில் அறிய முடிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications