Roja Serial: பசும்பாலுடன் வரும் ரோஜாவை பார்த்ததும் அர்ஜுனுக்கு பொங்கி வருது கவித..கவித!
சென்னை:சன் டிவியின் ரோஜா சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருது.சன் டிவியில் கொஞ்சம் சினிமா பாணியில் ஒளிபரப்பான முதல் சீரியல் என்று கூட இதை சொல்லலாம்.
கேமிரா, காட்சி அமைப்புக்கள், ஒரே லொக்கேஷனில் 7 அல்லது 8 கேரக்ட்டருக்கு மேல் வைத்து படமாக்குவது என்று சீரியல் ரிச்சாகவே இருக்கிறது.
நாயகன் அர்ஜுன், நாயகி ரோஜா இருவரும் தெலுங்கு என்றாலும், தமிழ் மக்களின் மனதை கொள்ளை கொண்டு இருக்கிறார்கள். இருவரையும் நல்ல காதலர்களாகவும் தம்பதியாகவும் பார்க்க மனதுக்கு இதமாக இருக்கிறது.

பால் சாப்பிடுங்க சார்
ரோஜா அழகிய புடவை உடுத்தி, பால் தம்ளருடன் அர்ஜுன் ரூமுக்கு வருகிறாள்.சார் பால் சாப்பிடுங்க சார்..என்ன சார் யோசனைன்னு கேட்கிறாள் ரோஜா.அதுவரை ரோஜாவை பார்க்காமலே திரும்பி நிற்கும் அர்ஜுன், இந்த விக்டரை யாரோ பிடிச்சு வச்சு இருக்காங்க ரோஜா.அதை பத்திதான் சிந்திச்சுக்கிட்டு இருக்கேன்னு சொல்றான். அப்போதுதான் திரும்பி ரோஜாவைப் பார்த்தவன் அழகில் அசந்து நிற்கிறான்.

சிச்சுவேஷன் சாங்
ரோஜா உன்னை இந்த பால் தம்ளருடன் பார்க்கும் போது, எவ்ளோ அழகா இருக்கே தெரியுமா? இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாட்டுக்கான பல்லவி தோணுது சொல்லட்டுமான்னு கேட்கறான். சொல்லுங்க சார்னு ரோஜா கொஞ்சறா.
பசும்பால் கோப்பையுடன் வரும் தேவதையை மெய் மறந்து பார்க்கின்றேன்...அவளையே என்று அவன் முடிக்கிறான்.ரொம்ப நல்லாருக்கு சார்...இதோட நான் ஒண்ணு சொல்லட்டுமான்னு கேட்க, சொல்லு ரோஜான்னு சொல்றான் இவன்.

பதிலுக்கு ரோஜா
பசும்பால் கோப்பையுடன் வரும் தேவதையை மெய் மறந்து பார்க்கின்றேன்...அவள் போவதை ! இது எப்படி சார் இருக்குன்னு கேட்கறா.நீதான் ரோஜா எனக்கு ஏத்த பொண்டாட்டின்னு சொல்லிட்டு சரி பால் குடுன்னு சொல்றான். அவள் கொடுக்க, வாயில் வச்சு குடிச்சுட்டு, என்ன ரோஜா சர்க்கரை போட மறந்துட்டியா.. எனக்கு ஒண்ணும் சுகர் இல்லையேன்னு சொல்றான்.

ரெண்டு டீஸ்பூன்
சார் உங்களுக்காக ரெண்டு டீஸ்பூன் சர்க்கரை அதிகாம போட்டேன் சார்னு அவள் சொல்ல, நிஜமா ரோஜா சர்க்கரையே இல்லை .நீ குடிச்சு பாருன்னு சொல்றான்.இவளும் குடிச்சு பார்த்துட்டு, என்ன சார் நீங்க எவ்ளோ சர்க்கரை இருக்குன்னு சொல்றா.நிஜமாவா குடுன்னு சொல்லி குடிச்ச பார்த்துட்டு, ஆமாம் ரோஜா...உன் உதட்டில் சர்க்கரை ஃபேக்டரியே வச்சு இருக்கியேன்னு கேட்கறான்.சார் போங்க சார்னு ரோஜா வெட்கப்பட...இன்னும் கொஞ்சம் சர்க்கரை குடு ரோஜான்னு அவகிட்ட பாலைத் தருகிறான்.

ஓவர் சுகர்
சார் ஓவர் சுகர் உடம்புக்கு ஆகாது சார்.சுகர் வந்துரும்னு ரோஜா சொல்ல, ரோஜா முப்பது வயசுல ஃபிகர் பின்னாடியும், அறுபது வயசுல சுகர் பின்னாடியும்தான் போகணும்னு சொல்லி சிரிக்கிறான்.சார் விடுங்க சார்... நேரம் கெட்ட நேரத்துலன்னு வெட்கப்பட்டுக்கிட்டு ஓடிடறா ரோஜா.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications