Roja Serial: ஒரு விஷயம்... பரபரக்கும் வீடு...செம சீன்!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருது. இந்த சீரியலின் படப்பிடிப்பே ரொம்ப வித்தியாசமாக அதே சமயம் பார்க்கவும் நன்றாக இருக்கிறது.
ஒரு எபிசோட் முழுக்க ஒரே இடத்தில் ஒரே லொக்கேஷனில் என்று காட்சிகள் இருந்தாலும், அதை சுவைபட ஷூட் செய்து, நல்ல வசனங்களில் காட்சியை மெருகேற்றி எபிசோடை முடிப்பது இயக்குநரின் சாமர்த்தியம் என்று சொல்லலாம்.
அந்த விதத்தில் ரோஜா சீரியல் மக்களின் மனதை மிகவும் கவர்ந்துள்ளது.இதில் அன்னபூரணி அம்மாவாக நடிக்கும் வடிவுக்கரசி சூப்பர் நடிப்பு.

வைர அட்டிகையை காணோம்
அன்னபூரணி அம்மா குல தெய்வத்துக்கு சாத்த வச்சிருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர அட்டிகையை காணோம்னு சொல்லி தேடிகிட்டு இருக்காங்க. அறையில் பீரோ லாக்கரில் வச்சிருந்த வைர அட்டிகையை சாவி போட்டு திறந்து எடுத்தது யார் என்பது கேள்வி.ஆனால்,ரோஜா மீதுதான் பாட்டிக்கு சந்தேகம்.

ரோஜா மட்டும்
எல்லாரும் இந்த வீட்டு மனுஷங்க..யாரும் வைர அட்டிகையை எடுத்து இருக்க மாட்டாங்க. ரோஜாதான் வெளியில் இருந்து வந்தவ. நகைக்கு ஆசைப்பட்டு அவதான் எடுத்து இருப்பான்னு பாட்டி உறுதியா சொல்லிடறாங்க. பொண்டாட்டியை குறை சொல்வதற்கு ஆதாரம் இருக்கான்னு அர்ஜுன் கேட்கிறான்.

போலீஸ் வரட்டும்
ஆதாரம் எதுக்கு... போலீஸ் வரட்டும்.அவங்க வந்து விசாரிக்க வேண்டியவங்களை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிச்சா உண்மை தானா தெரியப் போகுதுன்னு சொல்லி.போலீசுக்கு போன் பண்றாங்க அன்னபூரணி அம்மா. வீட்டில் அன்னபூரணி அம்மாவின் இரண்டு பிள்ளைகள். மருமகள், மகள், மாப்பிள்ளை, ரோஜா,அர்ஜுன், பேத்தி அணு எல்லாரும் கூடி இருக்கிறார்கள்.

வந்தாச்சு போலீஸ்
சீரியல் நடிகை ராணிதான் போலீஸ் இன்ஸ்பெக்டரா நடிச்சு இருக்காங்க.ஒரு எபிசோட் முழுக்க வைர அட்டிகையை காணோம்..ரோஜா மீது சந்தேகம்..போலீஸ் குரூப்பா வந்து விசாரிக்கறாங்க. இதுதான் கதை..இதை காட்சி படுத்தி, வசனங்களை பேச வைத்து சுவையாக ஷூட் செய்து காட்சியை பரபரப்பாக காண்பித்து எபிசோடை தொடர வைத்து இருப்பது அருமை!

அர்ஜுன் லாயர்
ரோஜாவை இப்படி போலீஸ் விசாரிக்கிறாங்க.. ஆசை கணவன் அர்ஜுன் சும்மா இருக்கானே என்று பார்த்தால், போலீஸ் எப்படி விசாரிக்க கூடாதோ, அப்படி விசாரிக்கறாங்கன்னு ஆதாரம் கேமிராவில் பதியட்டும் என்று காத்திருந்து பின்னர் எச்சரித்தும், மனைவி ரோஜாவை அனைத்து அவளது பயத்தை போக்குவதும் நல்ல காட்சிகள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications