Roja Serial: என்ன குலமோ... என்ன கோத்திரமோ.. அர்ஜுன் இருக்கும்போது சொல்லலாமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி எல்லாரையும் திரும்பிப் பார்க்க வைத்து இருக்கிறது. பெரும்பாலும் ஏழு மணிக்கு டிவி முன் பெண்கள் அமர்வதில்லை.

ஆனால், அதையும் செய்து சாதித்து காட்டி இருக்கிறது சன் டிவி. எல்லாமே மக்களின் நாடி பிடிப்பதுதாங்க. அது பிடிச்சுட்டா ஜெயிச்சுடலாம். இதை ரோஜா டீமும் சன் டிவியோடு சேர்ந்து நல்லாவே செய்து கலக்கி வருகிறார்கள்.

அழகான நாயகன் அர்ஜுனை எல்லா காலேஜ் பொண்ணுங்களுக்கும் இவரை பிடிக்கிறது. நிஜமா காலேஜ் பொண்ணுங்களின் கனவுக்கு கண்ணனாக இருக்கிறார் நாயகன் அர்ஜுன்.

பொண்டாட்டி பொண்டாட்டி

பொண்டாட்டி பொண்டாட்டி

எப்போதும் அர்ஜுன் தன்னை நம்பி வந்த பொண்ணுன்னு ரோஜாவை நினைச்சு சப்போர்ட் பண்றது நிஜமா ரொம்ப நியாயமா இருக்குது. ஆஸ்மத்தில் அம்மா, அப்பா இல்லாமல் வளர்ந்த ஒரு பொண்ணு. ரோஜா. ஆஸ்ரமத்தில் சாந்த மூர்த்தி அப்பாவை யாரோ கொலை செய்துட, ஆளுக்கு ஒரு பக்கமாக சிதைந்து போகிறார்கள்., அந்த கொலையை யார் செய்தது, அதை கண்டுபிடித்து தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டு, மீண்டும் ஆஸ்ரமத்தை திறந்து அனாதை குழந்தைகளுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதுதான் ரோஜாவின் நல்ல நோக்கம்.

நல்ல குணம்

நல்ல குணம்

ரோஜா அனாதை பெண் என்றாலும், .அவளது நல்ல குணத்தில் அவளை ரொம்ப அவனுக்குப் பிடித்துப் போகிறது.இதுவரை பெண்களை பிடிக்காமல் இருந்த அவனுக்கு, அதாவது கமிட்மென்டில் மாட்டிக்க விரும்பாத அர்ஜுனுக்கு ரோஜாவை நம்பி பொண்டாட்டியா நடிக்க கூப்பிடலாம் என்கிற நம்பிக்கை வருது. ஆனால், ஒரு வருஷத்துக்குள் காதலாக மாறி, இப்போது இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள்.

ரோஜாவுக்கு நான்தான்

ரோஜாவுக்கு நான்தான்

எப்போதும் அர்ஜுனின் பாட்டி ரோஜா ஒரு அனாதை என்று சுட்டிக் காட்டுவதிலேயே குறியாக இருக்க, அவ்வப்போது ரோஜாவுக்கு நான்தான் எல்லாமே என்று சொல்லி சொல்லி வார்த்தையால் அடிக்கும் வக்கீல் அர்ஜுன். அவனிடம் போயி இப்படி பேசலாமா பாட்டி?

பொங்கல் வைக்கிறாள்?

பொங்கல் வைக்கிறாள்?

குல தெய்வம் கோயிலில் ரோஜாவும் தனியாக அர்ஜுனிடம் சேர்ந்து பொங்கல் வைக்க தயாராக, என்ன குலமோ, கோத்திரமோ நம்ம குல தெய்வத்துக்கு பொங்கல் வைக்க வந்துட்டான்னு ரோஜாவை பாட்டி சொல்ல, பாட்டி..உங்க பேத்தி அணுவும் அப்பா யாருன்னு தெரியாம அவளும் யாரும் இல்லாத அநாதை மாதிரி ஆஸ்ரமத்தில் ரோஜா கூட வளர்ந்தவதான். அவ வளர்ப்பு நல்லாருந்தா, ரோஜா வளர்ப்பும் நல்லாத்தான் இருக்கும்.

ரோஜாவுக்கு யாரும் இல்லைன்னு நீங்க சொன்னா எப்படி , அவளுக்கு அம்மா, அப்பா, அத்தை, பாட்டி, மாமா எல்லாரும் இருக்காங்க. அது எல்லாமே அவளுக்கு நான்தான்னு சொல்லும் போது நமக்கே கண்கள் கலங்கிறது. வெல்டன் இயக்குநர் சார்.. சரியான பாதையில் பயணிச்சுக்கிட்டு இருக்கீங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+