Roja Serial: மடிக்கு வரவா? மாடிக்கு வரவா? லெட்டர் மாறிப்போச்சே!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ரொம்ப ஜாலியா ஒளிபரப்பாகிட்டு வருது.காரணம், சீரியலில் கதாபாத்திரங்கள் பேசும் வசனம் ஒரு பிளஸ் என்றால்,கதை காட்சிகள் அமைப்பது என்பது கூடுதல் பிளஸ்.
ரோஜா,அர்ஜுன் இளம் ஜோடியாக இருப்பதும், அதே மாதிரி நடுத்தர வயது ஜோடியாக மாமா அத்தை இருப்பதும் என்று, உண்மையான ஒரு குடும்பத்தை பார்ப்பது போல இருக்கிறது.
போதாக் குறைக்கு வீட்டில் மூன்று தலைமுறை கண்ட பாட்டியாக அன்னபூரணி பாட்டி இருப்பதும் கதைக்கு மிகவும் வலு சேர்க்கிறது. மிகவும் கண்டிப்பான பாட்டியாக நடிகை வடிவுக்கரசி நன்றாக நடிச்சு இருக்கார்.

ஜோடி பழசு
என்ன ரோஜா..மாடியில துணி காய வைக்கப் போறேன்னு சொல்றே... புருஷனை காய விடுறியேன்னு கேட்கறான் அர்ஜுன். அப்படியா சார்னு ரோஜா சொல்ல, ரோஜா நான்தான் தப்பு பண்ணிட்டேன். சாந்தமூர்த்தி ஐயா கேஸை முடிச்சுட்டு, நாம முதலிரவை வச்சுக்கலாம்னு. நமக்கு ஹனிமூன் வருவதற்குள்.பழைய ஜோடியா ஆகிருவோம் போல இருக்கு ரோஜான்னு சொல்றான்.

காதல் இருந்தால்
சார் மனசில் காதலும், ஆசையும் எப்போதும் இருந்தால், எல்லாருமே எப்போதும் புது ஜோடிதான் சார்னு அர்ஜுனை கட்டிக்கொள்கிறாள் ரோஜா. சார் மாடியில துணி காயப்போட்டுட்டு வரேன்னு சொல்லிட்டு மாடிக்குப் போகும் போது அவள் கையில் இருந்து ஒரு பேப்பர் விழுது. அதில், அவசரம், முக்கியமாக பேச வேண்டும். என்னை காக்க வைக்க வேண்டாம்.மடிக்கு வரவும் என்று.

கல்பனா சுமதி
சுமதிக்கா நானும் ரோஜாவும் முக்கியமா பேசணும். அவ எங்கே இருக்கான்னே தெரியலையேன்னு சொல்றாங்க. நீங்கதான் அவங்க கூட பேசறது இல்லையேம்மா அப்புறம் எப்படின்னு கேட்கறாங்க சுமதி. இல்லக்கா.. குடும்ப விஷயத்தை பேச நாங்க கூட்டணி சேர்ந்துக்கிட்டோம்.நான் பேசணும்னு நினைச்சாலும், ரோஜா பேசணும்னு நினைச்சாலும் ஒரு துண்டு பேப்பரில் எழுதி போட்டுடுவோம். அப்புறம் மாடிக்கு போயி பேசுவோம்னு சொல்றாங்க.

எழுதறேன் நான்
என்ன கல்பனாம்மா நீங்க.. உங்க கை எழுத்துதான் எல்லாருக்கும் தெரியுமே. நான் எழுதறேன் இருங்கன்னு சொல்லிட்டு மாடிக்கு என்பதை மடிக்குன்னு பிழையா எழுத்திடறாங்க. இதை பார்த்த அர்ஜுன், ரோஜா பின்னல் போயி ரொமான்ஸ் செய்ய, சார் அந்த லெட்டர் அத்தை எனக்கு எழுதினது சார்னு சொல்றா ரோஜா.
கதையும், காட்சியும் இப்படி நகைச்சுவையாக போகுது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications