Roja Serial: தெரியாததை தெரிஞ்சுக்க இருக்கவே இருக்கு தொலைக்காட்சி சீரியல்ஸ்!
சென்னை: பெண்களுக்கு குடும்பத்தில் உள்ளவங்களை அல்லது வெளியாட்களை எப்படி பழி வாங்கறதுன்னு தெரியலையா? என்னங்க நீங்க இருக்கவே இருக்கு தொலைக்காட்சி சீரியல்கள்.
புதுப் புதுவிதமான பழிவாங்கல்கள் எல்லா தொலைக்காட்சி சீரியல்களிலும் சொல்லித் தர்றாங்க. அதனால், ஒரு சானலில் பார்க்காமல் விட்டுடோமேன்னு கவலைப்பட்டா இருக்கவே இருக்கு இன்னொரு சானல் சீரியல்.
இப்படி எதாவது ஒரு விஷயத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தப் படாதீங்க.. கவலைப்படாதீங்க. வரிசையா டிவி சானல்களில் சீரியல்களில் இப்படி பெண்கள் வித்தியாசம் வித்தியாசமாக தங்களது எதிரிகளைப் பழி வாங்குவதை கண்டிப்பா பார்க்கலாம்.

ரோஜா சீரியல்
சன் டிவியின் ரோஜா சீரியலில், ரோஜாவை பழிவாங்க அதாவது அவளை சாகடிக்க நினைக்கிறாள் அணு. இதற்காக பாம் செட் செய்து பூஜை அறையில் வச்சுடறா. வழக்கம் போல ரோஜா பூஜை செய்யப் போயி, பூஜைக்கான மியூசிக் டிரம்ஸ் வாசிக்க ஸ்விட்ச் போடுகிறாள்.

தூக்கி வீசப்பட்டு
அந்த ஸ்விட்சை போடுகையில் சரியாக ரிமோட்டை இயக்க பாம் வெடிச்சு, தூக்கி வீசப்படுகிறாள் ரோஜா. வீட்டின் பூஜை அறையில் இந்த கொடுமை நடக்குது. அத்தோடு விட்டாளா அணு.. காரில் ரோஜாவை உடனே தூக்கிச் செல்ல முடியாதபடி காரின் அத்தனை டயர்களையும் பஞ்சர் செய்து விடுகிறாள்.

ரத்தம் வழிய
பாம் வெடிப்பில் ரத்தம் வழிய மயங்கிக் கிடக்கும் ரோஜாவை தூக்கிக் கொண்டு ஆட்டோ பிடிக்க ஓடுகிறார்கள். ரொம்ப தூரம் ஓடிய பின்னர் ஒரு ஆட்டோ கிடைக்கிறது. அதில் ரோஜாவைத் தூக்கிப் போட்டுக்கொண்டு புருஷன் அர்ஜுன், மாமனார், மாமியார் கல்பனா எல்லாரும் போறாங்க.

கொடுமை ஒன்று
இதில் கொடுமை என்னன்னா பாம் வச்ச அணுவும், கூட இருந்த யசோதா அவளின் புருஷனும் ஒண்ணும் தெரியாத மாதிரி கூடவே போயி, நடிக்கறாங்க பாருங்க. ஐயோ அம்மா.. முடியலைங்க.. வாழ்க்கையில் பிடிக்காதவர்களை பழிவாங்குவது எப்படி என்று சீரியல்களைப் பார்த்து ஒரு புத்தகமே எழுதலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications