Roja Serial: நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.. லதாவை பார்க்கையில்...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் நல்ல ரேட்டிங்கில் உள்ளது. அடிக்கடி நிறைய ஸ்டார் காஸ்ட் நடிகர் நடிகைகளை இறக்கி ரேட்டிங்கை தக்க வைத்து வருகிறார்கள்.
இதில் வசன கர்த்தாவின் வசனங்கள் அதிரடியான கவுன்டர் என்று ரசிக்கும்படி இருக்கிறது. நாயகனாக நடிக்கும் அர்ஜுன், ரோஜாவுக்கு நிறைய ரசிகர் ரசிகைகள் இருக்கிறார்கள்.
இப்போது அன்னபூரணியின் அக்கா என்று நடிகை எம்ஜிஆர் லதாவை புதிதாக களம் இறக்கி உள்ளார்கள்.

எம்ஜிஆர் குருநாதர்
நடிகை லதா எம்ஜிஆர் தன்னை வெறும் லதா என்று போடுவதை விட எம்ஜிஆர் லதா என்று பெயர் போடுவதையே விரும்புகிறார். எனவே, பேனர், போஸ்டர் போன்ற விஷயங்களில் தனது குருநாதர் எம்ஜிஆர் பெயரை தனது பெயரின் முன்னால் அல்லது பின்னால் சேர்க்க சொல்கிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும், ரோஜா சீரியலில் புதிதாக களம் இறக்கப்பட்டு உள்ளார்.

நீலக் கலர் புடவை
சன் டிவியின் ரோஜா சீரியலில் வெளிநாட்டில் வசித்து வந்த பெண்மணியாக, அன்னபூரணி அம்மாவின் அக்கா காமாட்சியாக களம் இறக்கப்பட்டு உள்ளார். நீல கலர் புடவையில் கொண்டை போட்டு சைடில் ஒற்றை ரோஜாவை செருகி மிக அருமையாக காட்சி தந்துள்ளார்.இதை பார்க்கையில் இவரின் பழைய படங்களும், அதில் இவர் துறுதுறுப்பாக நடித்து இருப்பதும் நினைவுக்கு வருகிறது.

நீண்ட கனவு
எம்ஜிஆருடன் இவர் ஆடிப்பாடி அசத்தி இருக்கும் பல பாடல்களில் நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது என்கிற பாடல்தான் ரோஜா சீரியலில் லதாவைப் பார்க்கையில் நினைவுக்கு வந்தது. அந்த பாடலில் லதா அணிந்து இருக்கும் உடை படு கவர்ச்சியாக இருக்கும். சுட்டித் தனமாக இந்த பாடலை கண்களை அடித்து, நாக்கை கடித்து என்று பாடி ஆடி நடித்து அசத்தி இருப்பார்.

அக்கா கண்டிப்பு
அன்னபூரணி அம்மாவின் அக்காவாக ரோஜா சீரியலில் நடிகை லதா வருகிறார்.வடிவுக்கரசியை மிரட்டுவது, உருட்டுவது என்று என்ட்ரி காட்சியே பலமாக இருக்கிறது. ரோஜாவுக்கு ஆதரவாக இவர் சீரியலில் நடித்து வருகிறார். பழைய கலாச்சாரங்கள் பற்றியும், அதை மீட்டு எடுப்பது பற்றியும் பேசுவதும் நன்றாக இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications