Roja Serial: 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ்... போட்டி ஆரம்பம்!
சென்னை: தங்க நெக்லஸ் பரிசு என்றாலே பம்பரமாய் சுத்துவோம். வைர நெக்லஸ் என்றால்...? அப்படித்தான் ஆகி இருக்கிறது இங்கு ஒரு டிவி சீரியலில்.
சன் டிவியின் ரோஜா சீரியலில் கனடாவில் இருந்து வந்த பெரிய பாட்டி லதா, ரோஜா அணு இரண்டு பேருக்கும் போட்டி என்று சொல்கிறார்கள்.
யார் சிறந்த மருமகள் என்று பல டாஸ்க் வைத்து.வெற்றி பெற்றவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் பரிசுன்னு சொல்றாங்க.

பாலில் ஆரம்பிக்குது
ஒரு டம்ளர் பாலில் ஆரம்பிக்குது இந்த டாஸ்க். சுவையா 10 நிமிஷத்தில் யார் பால் காய்ச்சி சுட சுட எடுத்து வாரங்களோ அவங்க இந்த போட்டியில வின் என்று சொல்றாங்க. கையோடு இரண்டு டம்ளர்களை இருவரிடமும் தர்றாங்க இருவரும் அந்த டம்பளரில்தான் பால்கொண்டு வர வேண்டுமென்று கண்டிஷன் வேறு.

சர்க்கரை இல்லை
பாலை காய்ச்சிவிட்டு பார்க்க ரோஜாவின் சர்க்கரை பாட்டில் காலியாக இருக்குது. அங்கு அணு பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டு, மிக்சியில் அடிச்சு பாலில் கலந்து ரெடியாகிட்டா. ரோஜா அவசரமாக வெளியில் போக, எங்கே போறே ரோஜா..டைம் ஓடிக்கிட்டு இருக்குன்னு பெரிய பாட்டி கேட்க, சர்க்கரை தீர்ந்து போச்சு பெரிய பாட்டி..அதான் வாங்கிட்டு வரப்போறேன்னு சொல்றா.

பால் தருவே
கடைக்கு போயி சர்க்கரை எப்போ வாங்கறது.. எப்போ எனக்கு பால் தர்றதுன்னு கேட்கறாங்க. அவ எங்கே கடைக்குப் போகப் போறா... பக்கத்து வீட்டுக்கு போயி, சர்க்கரை தீர்ந்து போச்சு..கடனா கொஞ்சம் சர்க்கரை குடுன்னு கேட்டு, எங்க குடும்ப மானத்தை வாங்குவான்னு சந்தடி சாக்கில் பாட்டி கலாய்க்கறாங்க.

கருப்பட்டி காப்பி
அப்போதுதான் நினைவுக்கு வர ரோஜா கருப்பட்டி பாட்டிலை எடுத்து அத்தையிடம் காண்பித்து சிரிக்கிறாள். ம்ம்ம் என்று அத்தை கண்ணை காண்பிக்க கருப்பட்டி காப்பி தயார். இங்கு சுவையான பாதாம் பிஸ்தா பால் தயார். இரு பாலையும் தான் வைத்திருந்த கண்ணாடி கிளாசில் ஊற்ற சொல்ல, இருவரும் ஊற்றுகிறார்கள்.

பாட்டி டிவிஸ்ட்
ஸ்பூனில் கலக்கி பார்க்கிறார் பெரிய பாட்டி. அணு கொண்டு வந்த பாலில் முடி கிடக்கிறது. எல்லாரும் முகம் சுளிக்க ரோஜா கொண்டு வந்த பால் சுவையாக இருக்குது.. கருப்பட்டி உடம்புக்கு நல்லதுன்னு சொல்லிட்டு ரோஜாவை வின் என்று அறிவிக்கறாங்க. கடைசியில் டம்ளர்களில் நான்தான் என்னோட தலை முடியை போட்டு குடுத்தேன்.ரோஜா கிளாஸை கழுவி இருக்கா. அணு கழுவலை..அதான்னு டிவிஸ்டை சொல்றாங்க.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications