மா விளக்கு கையில்...சல்லடையில் பார்த்தா கட்டிக்கப் போறவன் முகம்...! ஆஹா...!
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் கடந்த திங்கள் முதல் வரும் சனிக்கிழமை வரை சங்கம ஒளிபரப்புத்தான்.
குடும்பத்துல அன்னபூரணி அம்மாவும்,மகாலிங்கம் ஐயாவும்தான் பகையா இருக்காங்க. அந்த வீட்டு சிறுசுங்க...இந்த வீட்டு சிறுசுங்க நட்பாகிடறாங்க.
அதே போல இரு வீட்டு மருமகள்களும் நட்பாகிடறாங்க. அதே போல அணுவும்,உமாவும் நட்பாகி அவங்கவங்களுக்கு உண்டான பகையாளிகளை பகை தீர்த்துக்கறாங்க.

ரோஜாவும், பாக்கியலட்சுமியும்
ரோஜாவும்,பாக்கியலட்சுமியும் மாவிளக்கு பிசைய,யாருக்கும் தெரியாம தண்ணிய நிறைய கொட்டிட்டு வர்றா உமா. இதை பார்த்து உமாவுடன் நட்பான அணு,ரோஜாவின் புடவையில் தீப்பிடிக்க ஏற்பாடு செய்யறா.

ஒருத்தொருக்கு ஒருத்தர்
பாக்கிய லட்சுமிக்கு மாவு கொடுத்து உதவறா ரோஜா. ரோஜா புடவையில் பிடிக்க இருந்த தீயிலிருந்து காப்பாத்தறா பாக்கியலட்சுமி. இப்படி ரெண்டு பேரும் நட்பாகிடறாங்க.

மா விளக்கு
ரோஜாவும், பாக்கியலட்சுமியும் இங்கே வெற்றிகரமா மா விளக்கு போட்டு அம்மனுக்கு படையலும் செய்துடறாங்க. ரோஜாவுக்கு பிடிச்ச மாம்பழம் பறிக்கப் போன அர்ஜுனும், பாக்யலட்சுமிக்கு பிடிச்ச தேன் எடுக்கப் போன ரவியும் தோப்புக்காரன் துரத்த ஓடிவர்றாங்க.

விளக்குபிடிச்சு
மா விளக்கை கையில் வச்சுக்கிட்டு சல்லடையின் மூலம் கன்னிப் பொண்ணுங்க முதலில் வானத்தில் இருக்கும் நிலாவைப் பார்க்கணுமாம். அப்புறம் சல்லடையில் பார்த்தால் கட்டிக்க போறவன் கண்ணில் படுவானாம். இந்த ஐதீகத்தை அந்த ஊர் பெரிய அம்மா ஒருத்தங்க சொல்றாங்க.

அர்ஜுனை பார்க்கறா
ரோஜா யாரும் சொல்லாமலே முதலில் சல்லடையில் நிலாவைப் பார்த்துட்டு,அடுத்து சல்லடையில் நேராக பார்க்கறா... என்ன ஆச்சரியம் கையில் ஹரிக்கேன் விளக்கோடு அர்ஜுன் வரது தெரியுது.

பாக்கியலட்சுமியை
ஏய்... நீயும் பாரேண்டி... நான் சொன்னா இல்லேன்னு சொல்றே இல்லே..உன்மனசுல ரவி இருக்கானா இல்லையான்னு இப்போ தெரிஞ்சுக்கடி.. என்னையா முட்டாள் ஆக்கறீங்கன்னு திட்டறா. பாக்யலட்சுமியும் பார்க்க..அடடே..ரவி கையில் ஹரிக்கேன் விளக்கோடு தெரியறான்.
பூனைக் குட்டி போட்டாலும் வெளியிலதான் வரணும்... கத்திரிக்கா முத்தினாலும் கடைத் தெருவுக்குத்தான் வரணும்...
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications