Roja Serial: கொத்துச் சாவியை குடு ரோஜா.. ஹேங்கரில் மாட்டிடறேன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியல் ஹிட் சீரியல்தான்.ஏனோ சன் டிவி இந்த சீரியலுக்கான நேரத்தை இத்துடன் இரண்டாவது முறையாக மாற்றி அறிவித்து இருக்கிறது.

நல்ல கதை ,நல்ல வசனங்கள், காட்சி அமைப்புகள், நடிகர் நடிகைகள் என்று எல்லாமே கதைக்கு பிளஸ்தான். மதியம் இரவு நேரமாகி, இப்போது மாலை 7 மணிக்கு ரோஜா சீரியல் ஒளிபரப்பாகிட்டு வருது.

ஆஸ்ரமத்தில் அனாதையாக வளரும் பிள்ளைகளின் குறிப்பாக பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி எப்படி எல்லாம் அமையும் என்று யாராலும் சொல்ல முடியாது.

ரோஜா ஆஸ்ரமத்தில்

ரோஜா ஆஸ்ரமத்தில்

ரோஜா ஆஸ்ரமத்தின் வழக்கு ஒன்றுக்காக கிரிமினல் லாயர் அர்ஜுனை சந்திக்கிறாள். அவனுக்கு அத்தை மகள் என்று சொல்லிக் கொண்டு அதே ஆஸ்ரமத்தில் வளர்ந்த அணுவுடன் அர்ஜுனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்குது. அணு, ரோஜாவின் ஆதாரங்களை தன்னுடையது என்று பொய் சொல்லி, அன்னபூரணி அம்மாவின் பேத்தி என்று வீட்டுக்குள் புகுந்து விடுகிறாள். இது பிடிக்காத அர்ஜுன், ரோஜாவை கல்யாணம் செய்துகிட்டு,ஒரு வருஷ கான்ட்ராக்ட் போட்டு பொண்டாட்டியாக நடிக்க வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றான்.

சும்மா ரொமான்ஸ்

சும்மா ரொமான்ஸ்

முதலில் வீட்டில் உள்ளவர்கள் நம்ப வேண்டும் என்று ரோஜாவிடம் அன்யோன்யமாக இருப்பது போல நடிப்பதற்காக , விதம் விதமாக ரொமான்ஸ் செய்து வந்தார்கள். அர்ஜுனின் பாட்டிக்கு மட்டும் ரோஜா அனாதை என்று சுத்தமாகவே பிடிக்கவில்லை. அடிக்கடி அவளை வெறுத்து பேசுவாங்க. ரோஜாவும், அர்ஜுன் கேசில் ஜெயிக்கும் வரை இதை பொறுத்துக்கலாம் என்று இருக்கிறாள்.

உண்மை கல்யாணம்

உண்மை கல்யாணம்

நிஜமாகவே ஒருத்தரை ஒருத்த காதலிக்க ஆரம்பிச்சு, இப்போது அடிக்கடி உண்மையாகவே ரொமான்ஸ் செய்கிறார்கள். அனுவிடம் இருந்து வீட்டு சாவிக் கொத்தை தன் பொண்டாட்டி இடுப்பில் மாட்ட சொல்லி விட்டான் அர்ஜுன். , ரோஜா சாவியை குடு, ஹேங்கரில் மாட்டி விடுகிறேன் என்று கேட்கிறான்

வேற ஹேங்கர்

வேற ஹேங்கர்

பாருங்க சார்... கொத்து சாவியை ஏற்கனவே ஹேங்கரில் மாட்டி வச்சுட்டேன்னு சொல்றா ரோஜா.பார்த்தால் சுவற்றிலிருக்கும் ஹேங்கரில் சாவி தொங்குகிறது. வொய்ஃபி...நான் அந்த ஹேங்கரை சொல்லலை என்று கொத்து சாவியை எடுத்து, நிற்கும் அவளின் இடது கை பக்க இடுப்பைப் பார்த்து மெதுவாக மெதுவாக சாவியை செருக வர...அவள் ஓடி ஆடி விளையாடுகிறாள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+