பாரதியுடன் செம ஜாலியாக கண்ணம்மா.. என்னம்மா இதெல்லாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் வாய்க்கா வரப்பு பிரச்சனை நடந்தாலும் பாரதிகண்ணம்மா சீரியல் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒரே நாளில் பிறந்து பிறந்தநாள் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாக பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் திடீரென்று வைரலாக தான் முன்னேறி வந்துவிட்டது. அதுபோல இப்போது அந்த சீரியலில் நடிக்கும் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி இருக்கிறார்கள்.

 புருஷனும் பொண்டாட்டியும்

புருஷனும் பொண்டாட்டியும்

அதுவும் வில்லி வெண்பா கேமரா எடுக்க, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஜோடியா கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விடும் அழகைப்பார்த்து ஊரே கண்ணு வச்சு வருகிறதாம். வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள் கூட இந்த மாதிரி மீண்டும் சீரியலில் எப்போது சேர்வீர்கள் என்று தான் கேட்டு வருகிறார்கள்.

நடந்தே படுத்திய கண்ணம்மா

நடந்தே படுத்திய கண்ணம்மா

பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சந்தோசமாக இருந்த போது கூட இந்த சீரியலுக்கு இந்த அளவிற்கு டிஆர்பி ஏறவில்லை அவர்கள் இருவரும் சண்டையிட்டு பிரிந்து கண்ணம்மா புரட்சிப் பெண்ணாக மாறிய பிறகுதான் சீரியலே சூடுபிடித்து இந்த அளவிற்கு இப்படி ஒரு சீரியல் இருக்கிறது என்பதையே பலருக்கும் காட்டி இருக்கிறது.

ஜோடி போட்டு

ஜோடி போட்டு

ஆனால் மீண்டும் இவர்கள் இருவரும் ஒன்றாக உண்மையான பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள் .அதுவும் ஒரே கலரில் டிரெஸ் வேற போட்டு விட்டு இனி இந்த சீரியல் என்ன ஆகப் போகிறது என்று தெரியவில்லை. இந்த சீரியலை வைத்தே நன்றாக கணிக்க முடிகிறது யாருக்கும் புருஷன் பொண்டாட்டி ஒன்றாக இருக்கும் போது அவர்களை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று விட்டுவிடுகிறார்கள்.

 செம பாப்புலர்

செம பாப்புலர்

அதுவே அவர்களுக்குள் ஒரு பிரச்சனை வந்தால் தான் பலரும் அங்கு எட்டிப்பார்த்து பிரச்சனையை பெருசு பண்ணி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது இந்த சீரியலின் கதையும் இருக்கிறது இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் முதல் சீரியலில் இந்த அளவிற்கு பாப்புலர் ஆவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

2 குட்டீஸுக்கு அம்மா

2 குட்டீஸுக்கு அம்மா

தற்போது இவர் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து கொண்டிருந்தாலும் அவர் இன்னமும் திருமணம் ஆகாத கன்னிப் பெண் தான் என்பதை பலரும் மறந்து விட்டனர் .அந்த அளவிற்கு அவரை கண்ணம்மா கேரக்டரில் தான் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். உண்மையிலேயே இவர் சீரியலில் காட்டும் கண்ணம்மாவை கேரக்டரை போல தானாம்.

செம தில்லு

செம தில்லு

மிகவும் தைரியமாக பெண்ணாகத்தான் இந்த அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறாராம் .இவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு அவருக்கு வேலை பிடிக்காததால் உடனே அவற்றை தூக்கிப் போட்டு விட்டு வெளியே வந்து விட்டாராம் .வெளியே வந்து சொந்தமாக பிசினஸ் செய்து கொண்டிருந்தபோதுதான் இவருக்கு இவரை அழகழகாக போட்டோ எடுப்பது மற்றும் அதை இன்ஸ்டாகிராமில் அழகாக எடிட் பண்ணி பதிவிடுவது பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

புரட்சி செய்த பெண்

புரட்சி செய்த பெண்

இவருடைய போட்டோவை இன்ஸ்டாகிராமில் பார்த்து தான் இவருக்கு இந்த சீரியலுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீரியலில் எப்படி புருஷன் தன்னை தான் செய்யாத தவறை கூறியதும் வேண்டாம் என்று தூக்கி போட்டுவிட்டு வந்தது மாதிரி தான் இவரது வேலையும் தூக்கிப்போட்டு வந்து இருக்கிறார். ஆனாலும் அதற்கு பிறகு தற்போதுதான் அவர் நினைத்த இடத்தை வந்து அடைந்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஜாலி வேலை

ஜாலி வேலை

அதனால்தானோ என்னவோ அன்னைக்கு அந்த வேலையை அவர் விடாமல் இருந்திருந்தால் இன்னும் வரைக்கும் அதே ஐடி நிறுவனத்தில் தான் இவர் வேலை செய்து கொண்டு எனது கனவுகள் எல்லாம் கம்ப்யூட்டர் முன்பே முடித்து இருப்பேன் .ஆனால் எனக்கு சரி இல்லை என்று தெரிந்ததும் அதனை தூக்கி வீசிவிட்டு வந்ததால் தான் இன்று எனக்கான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று பெருமையாகவும் கூறியிருக்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+