கண்ணம்மா நீயாம்மா இப்படி போஸ் கொடுக்கறே.. ஜூம் போட்டு ரசிக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனா இது என்று வாயடைத்துப் போய் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
அந்த அளவிற்கு வேற லெவலில் இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சீரியலில் சேலையில் கலக்கி கொண்டிருக்கும் இவர் இணையதளத்தில் மாடல் உடையில் ஆம்பளை சட்டை போட்டு படு க்யூட்டாக, வெரி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்.

இவர் சென்னையில் பிறந்து சென்னையிலேயே பள்ளி கல்லூரியை முடித்திருக்கிறார். காலேஜ் முடிந்ததும் பேங்கிங் செக்டரில் இரண்டு வருடம் தொடர்ந்து வேலை பார்த்திருக்கிறார். ஆனால் ஐடி வேலை அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். மிஷின் போல ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது இவருக்கு பிடிக்காததால் அதை ரிசைன் பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

2 வருடத்தில் விலகல்

2 வருடத்தில் விலகல்

ஆபீஸில் அனைவருமே சின்ன சின்ன பிரச்சனைக்கும் கூட கிண்டலாக நான் நாளைக்கு லெட்டர் போட்டு விடுவேன் என்று சொல்லிவிட்டு இருப்பார்களாம். அது போல தான் இவரும் ஆபீஸில் சேர்ந்த நாளில் இருந்தே நான் லெட்டர் போட்டு விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இப்படி சொல்லி சொல்லி இரண்டு வருடம் ஆகிவிட்டதாம். அதற்கு மேலும் அவரால் அங்கு தாக்கு பிடிக்க முடியவில்லை.

மாடலிங்கில்

மாடலிங்கில்

மானிட்டரை பார்த்துக் கொண்டே இருப்பது இவருக்கு பிடிக்காததால் ரிசைன் பண்ணி விட்டு வெளியே வந்துவிட்டார். நிரந்தர ஊதியம் வந்து கொண்டிருந்த ஐடி வேலையை விட்டு நின்றதும் இவர் பினான்சியல் ஆக ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். அதன் பிறகுதான் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைக்க விரும்பி இருக்கிறார். ஆனால் வீட்டில் இவருக்கு முதலில் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லி இருக்கிறார்கள்.

கலரைக் காட்டி நிராகரிப்பு

கலரைக் காட்டி நிராகரிப்பு

ஆனாலும் இவர் சின்ன சின்ன விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அதுவும் மாதத்தில் 2 வரும் அதுவும் அந்த அளவிற்கு ஊழியம் இல்லையாம். இருந்தாலும் பரவாயில்லை என்று நடித்திருக்கிறார். அப்படி தான் இவர் வெளியுலகத்திற்கு தெரிய ஆரம்பித்திருக்கிறார். பள்ளி கல்லூரி படிக்கும்போது இவர் தமிழ்நாட்டின் தேசிய நிறமான கருப்பு நிறத்தில் இருப்பதால் இவரும் ரொம்பவே அவமானங்களையும் பல வாய்ப்புகளையும் இழந்திருக்கிறார்.

மாற்றம் தந்த கண்ணம்மா

மாற்றம் தந்த கண்ணம்மா

இதனால் சில நேரங்களில் இவர் மனதிற்குள் தாழ்வுமனப்பான்மையும் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மாடலிங்கிலும் பல வாய்ப்புகள் கலரை வைத்து தள்ளி போயிருக்கின்றன. அதனால் ரொம்ப பீல் பண்ணி நல்ல கலராக இருந்தால் இந்த வாய்ப்பு கிடைக்குமே என்று மனதில் கவலைப்பட்டிருக்கிறார். அதனால் அந்த டைமில் அதிகமான மேக்கப் போட்டு கலராகவும் காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கிறாராம். ஆனால் அதே கருப்பான கலரை வைத்து தான் இவருக்கு லைஃபில் இப்படி ஒரு சேஞ்ச் கிடைக்கும் என்று அவர் நினைக்கவில்லை.

வித்தியாசமான சீரியல்

வித்தியாசமான சீரியல்

பாரதிகண்ணம்மா சீரியல் முதல் முறையாக அவருக்கு அழைப்பு வரும்போது அவர் ரொம்பவே சந்தோஷம் அடைந்து இருக்கிறார். விஜய் டிவியில் நடிப்பது மிகவும் பெரியது அதுவும் ஹீரோயினாக நடிப்பது சொல்லவா வேண்டும் என்று சந்தோஷமாக ஒத்துக் கொண்டாராம். இந்த சீரியலில் முதல் நாள் இவருடைய அறிமுக காட்சியே வேற லெவலில் வைத்திருக்கிறார்கள். அதை பார்க்கும்போது மனதிற்கு இரண்டு மடங்கு சந்தோஷமாக இருந்ததாம்.

தேவதை

தேவதை

குளக்கரையில் விளக்கு வைத்து அந்த விளக்கு ஒளியில் இவரை கருப்பு தேவதையாக காட்டியிருப்பார்கள். இந்த சீரியலை இவர் வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் போது வீட்டில் இருந்தவர்களும் அவ்வளவு சந்தோஷப்பட்டார்களாம். அதன் பிறகு பல இடங்களிலும் ரசிகர்கள் இவரை பார்த்து இவரிடம் பாச மழையைப் பொழிந்துள்ளனர். இது ரோஷ்னிக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாம்.

ரோல் மாடல்

ரோல் மாடல்

இன்ஸ்டாகிராமில் கூட சில ரசிகர்கள் இவரை இவரிடம் நாங்கள் கருப்பாக இருக்கிறோம் என்று ரொம்பவே பீல் பண்ணி இருக்கிறோம். ஆனால் எங்களை மாதிரி இருந்த ஒருவர் இவ்வளவு திறமையை வெளிக்காட்டி முன்னேறி வருகிறார் என்று நினைக்கும்போது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உங்களை எங்களுடைய ரோல் மாடலாக பார்க்கிறோம் என்று கமெண்ட் பண்ணி இருக்கிறார்கள். இதை பார்த்ததும் அவருக்கு அவ்வளவு சந்தோசமாம்.

கண்ணம்மா மாதிரியே

கண்ணம்மா மாதிரியே

அதுபோக பல இடங்களில் இவர் வெளியே செல்லும்போதும் சிலர் இந்த பெண்ணைப் பார்க்கும்போது பாரதி கன்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா மாதிரியே இருக்கிறது என்று சொல்லி போவார்களாம். அப்போ அவருக்கு சிரிப்புதான் வரும். ஆனால் இப்ப எல்லாம் பலரும் இவரை கண்டுபிடித்து விடுகிறார்கள். உனக்கு சீக்கிரமா பாரதி மாதிரி ஒரு கணவன் கிடைப்பார் அப்படி என்று ஆசிர்வதித்தும் வருகிறார்களாம்.

குவிந்த அன்பு

குவிந்த அன்பு

இந்த அளவு அன்பு கிடைக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்ரோஷ்னி . இருந்தாலும் இந்த சீரியலில் தன்னுடைய திறமையை நன்றாக வெளிகாட்ட வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறாராம். தற்போது இந்த சீரியல் முக்கியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பப்படும் என்று பிரமோ வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் ரோஷ்னி இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் .

சூப்பர் போஸ்கள்

சூப்பர் போஸ்கள்

அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ரோஷ்னியா இது என்று வாயில் விரல் வைக்கிறார்கள். அந்த அளவிற்கு செம மாடர்னாக, டிரென்டியாக, வெரி ஹாட்டான போட்டோக்கள் ஆக இருக்கிறது. மேல் சட்டையை கழற்றி விட்டு படு ஹாயாக போஸ் கொடுத்திருக்கிறார். அதிலும் அவரது கழுத்துக்குக் கீழே இருக்கும் சின்ன மச்சத்தை சில ரசிகர்கள் சூம் செய்து பார்த்து அதையும் ரசித்து கமெண்ட் போட்டு ரோஷ்னியைக் கலாய்த்து வருகிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+