ஜெனிலியாவை விடுங்க, அந்த பொண்ணை பாருங்க".. சச்சின் ரீ ரிலீஸில் ரூ.10 கோடி வசூல்! விஜய் ஃபேன்ஸ் குஷி
சென்னை: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சச்சின்' படம், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.. இதற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு தந்து வருகிறார்கள்.. இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "சச்சின் படம் இப்போது முதல்நாள் 3 கோடி கலெக்ஷன் என்கிறார்கள், இந்த 4 நாளில் 10 கோடி கலெக்ஷன் வந்துள்ளது.. புது படங்களை எடுத்து கொண்டால், அந்த படம் தியேட்டருக்கு வந்து சரியாக ஓடுவதில்லை" என்று கருத்து கூறியிருக்கிறார்.
சச்சின் படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், பிபாசா பாசு ஆகியோர் நடித்து இருந்தனர். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரித்து இருக்கிறார். படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு 'சச்சின்' படம் மீண்டும் கடந்த 18-ந்தேதி திரைக்கு வந்துள்ளது.. சுமார் 300 தியேட்டர்களில் உலக அளவில் வெளியான 'சச்சின்' படத்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கொண்டாடி வருகின்றனர்.
கலெக்ஷன் அள்ளுது
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, ""சச்சின் ரீ-ரிலீஸ் படம் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.. ஒரு புது படம்கூட இந்த அளவுக்கு கலெக்ஷன் பண்ணாது.. அந்த அளவுக்கு வசூல் குவிந்து வருகிறது.. கலெக்ஷன் கிங் என்றால் அது விஜய் தான்.. கோட் என்பது சுமாரான படம் என்றாலும், கலெக்ஷன் நல்லபடியாகவே வந்தது.. விஜய்யின் எல்லா படமுமே வியாபாரமாகிறது..
சச்சின் படம் இப்போது மீண்டும் வெளியாகி, விஜய்யின் ரசிகர்கள் அதை கொண்டாடி தீர்க்கிறார்கள்.. தியேட்டரில் ஆடிப்பாடி ஜாலியாக இருக்கிறார்கள்.. ஆனால், அந்த காலத்தில் 2005-ல் அந்த அளவுக்கு கொண்டாடப்படவில்லை.. சந்திரமுகியுடன் இந்த படமும் சேர்ந்து வெளியானது.. ஆனால், சந்திரமுகி மட்டும் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
ஹே ராம் - ஆயிரத்தில் ஒருவன்
இத்தனைக்கும் விஜய் சச்சின் படத்தில் சூப்பராக நடித்திருப்பார்.. விஜய் ரசிகர்கள் என்று மட்டுமில்லாமல், சச்சின் படத்தை எல்லாருக்குமே பிடிக்கும்.. 20 வருடம் கழித்து இப்போது கொண்டாடுகிறார்கள்..
இப்படித்தான், அன்பே சிவம் படத்தை இப்போது பார்த்துவிட்டு பலரும், இவ்ளோ அருமையான படமாக இருக்கிறதே, இது ஏன் அப்போது ஓடவில்லை என்று வியந்து கேட்கிறார்கள். ஹே ராம், ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை இதெல்லாம் பார்த்துட்டு இப்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. ஆளவந்தான் படமும் இப்படித்தான் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு நன்றாக ஓடியது..
இப்போதுள்ள 2K கிட்ஸ்களுக்கும் இதெல்லாம் பிடிக்கிறது..
மகிழ்ச்சியில் நன்றி சொன்ன நடிகை
சச்சின் படத்தில் ஜெனிலியா தோழியாக வரும் நடிகையை, ரசிகர்கள் இப்போது திடீரென டிரெண்டாக்கி கொண்டிருக்கிறார்கள்.. ஜெனிலியாவை விடுங்கடா, அந்த பொண்ணு பாருடா என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகிறார்கள்.. அந்த நடிகையின் பெயர் ராஷ்டி.. அவரை மட்டுமே வைத்து ரீல்ஸ்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
ரீல்ஸ் போட்டே இப்போது அந்த நடிகையை ஃபேமஸ் ஆக்கிவிட்டார்கள்.. இதையெல்லாம் ராஷ்மி எதிர்பார்க்கவேயில்லை. 20 வருடம் கழித்து, என்னை அடையாளம் கண்டுபிடித்து கொண்டாடுவது சந்தோஷமாக இருக்கு.. நன்றி என்று ட்வீட் போட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, சச்சின் படத்தை விஜய்யின் ரசிகர்கள் யூடியூப்களில் பார்த்திருப்பார்கள், டிவியில் பார்த்திருப்பார்கள்.. பலமுறை தொடர்ந்து பார்த்திருப்பார்கள்.. அடுத்த சீன் என்ன வரப்போகிறது என்று நன்றாகவே தெரியும்.. அப்படியிருந்தும்கூட தியேட்டருக்கு சென்று கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.
ரீ-ரிலீஸ் டிரெண்டிங் நல்ல விஷயம்
சச்சின் படம் இப்போது முதல்நாள் 3 கோடி கலெக்ஷன் என்கிறார்கள், இந்த 4 நாளில் 10 கோடி கலெக்ஷன் வந்துள்ளது.. புது படங்களை எடுத்து கொண்டால்,அந்த படம் தியேட்டருக்கு வந்து சரியாக ஓடுவதில்லை..
இதிலிருந்து என்ன தெரியவருகிறது என்றால், கன்டென்ட் அதாவது படம் நல்லாயிருந்தால் காலம் முழுக்க கொண்டாடுவார்கள் என்பதறகு இது ஒரு உதாரணம். ரீ-ரிலீஸ் டிரெண்ட் என்பதே நல்ல விஷயம்தான.. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பணம் வருது, தியேட்டர் ஓனர்களுக்கு பணம் வருது, ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications