ரூ.100 கோடி சொத்து பிரியங்காவுக்கு? ஸ்ரீவித்யா பட்ட பாடு.. அமீர் பாவனிக்கு நல்லதே நடக்கும்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடிக்கணக்கான சொத்து பாவனிக்கு இருப்பதாகவும், அதை ஆக்கிரமிக்கவே அமீர் பாவனியை திருமணம் செய்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காசுக்காக இந்த திருமணம் நடந்திருக்காது.. அவ்வளவு சொத்து இருக்கும் பாவனி, பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லையே" என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், அமீர் - பாவனி இருவருமே தனிமையில் மனம் விட்டு பேசியிருக்கிறார்கள்.. அதனால், இருவருக்குள்ளும் புரிதல் வந்துள்ளது.. எனவே, பிக்பாஸூடன் இந்த காதலை முடித்து கொள்ளாமல், வெளியே வந்தும் தொடர்ந்துள்ளனர்..
அமீர் வீட்டில் யாரும் திருமணத்துக்கு வரவில்லை என்றாலும், நாளடைவில் எல்லாம் சரியாகிவிடும்.. கொஞ்ச நாள் கழித்து, இது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை என்று யோசிக்கவும் செய்வார்கள். எனவே மனம் மாற வாய்ப்புண்டு.

Television Priyanka Srividhya

மதம் மாறிய நாகேஷ்

ஏனென்றால், குண்டுராவ் நாகேஸ்வரன் என்பதுதான் நாகேஷ் பெயர்.. ஒய்ஜி மகேந்திரன், ரஜினி சார் குடும்பம் இவர்களெல்லாம கர்நாடக பிராமின்.. அதேபோல பாலச்சந்தர் சாரும் கர்நாடக பிராமின் என்று சொல்வார்கள். அந்தவகையில், கர்நாடக பிராமினான நாகேஷூம் சென்னையில் ரயில்வேயில் வேலை பார்த்து கொண்டிருந்தார். பிறகு சினிமாவுக்குள் நடிக்க வந்தார்..

ஒரு கிறிஸ்தவ பெண்ணை காதலித்தார் நாகேஷ்.. கிறிஸ்தவராக மாறினால்தான் அப்பெண்ணை திருமணம் செய்ய முடியும் என்றதுமே, அதற்கு உடனே சம்மதித்தார் நாகேஷ்.. மிகப்பெரிய நடிகரான நாகேஷ் மதம் மாற முடியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் மனைவி மீதுள்ள காதலால் மதம் மாறினார்.. அவரது பெயரை டேவிட் நாகேஷ் என்றும் மாற்றினார்கள்.

நாகேஷ் குடும்பத்தின் ஒற்றுமை

திருமணம் முடிந்து 3 பிள்ளைகள் பிறந்தன.. அந்த 3 பிள்ளைகளும் 3 மதங்களை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்.. ஆனந்த் பாபு கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தார். அவரது அண்ணன் முஸ்லிம் பெண்ணையும், இன்னொருவர் இந்து பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். இவர்கள் 3 பேருமே ஒரு குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்களுக்குள் எந்த தகராறும் ஏற்பட்டதில்லை.

உன்னுடைய மதம் உனக்கு, என்னுடைய மதம் எனக்கு, அடுத்தவர் மதத்தை தாழ்வாக சொல்லாதே என்று குரானில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து பெண்ணை ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்று 3 மகன்களையுமே நாகேஷ் கேட்கவில்லை. அதுபோலவே அமீர் குடும்பத்தில் இதுவரை யாரும் வராவிட்டாலும், ஒருகட்டத்தில் நிச்சயம் வருவார்கள்.. சாதாரண நபராக இருந்த அமீர் இன்று எல்லாரும பேசக்கூடியவராக மாறிவிட்டார்.

கோடிக்கணக்கில் சொத்துக்கள்

கோடிக்கணக்கான சொத்து பாவனிக்கு இருப்பதாகவும், அதை ஆக்கிரமிக்கவே அமீர் பாவனியை திருமணம் செய்துள்ளதாகவும் சிலர் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காசுக்காக இந்த திருமணம் நடந்திருக்காது.. அவ்வளவு சொத்து இருக்கும் பாவனி, பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லையே.

அப்படியே சொத்துக்காக நடந்த திருமணமாக இருந்தாலும், கணவன் - மனைவியாக வாழ்ந்ததுமே, சொத்து கைமாறிவிட முடியாது. அதில் நிறைய சிக்கல் உள்ளது. நடிகை ஸ்ரீவித்யா மலையாளத்தில் ஜோசப் என்ற ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டரை காதலித்து திருமணம் செய்தார்.. அந்த கணவர், ஸ்ரீவித்யா மீது அன்பாக இருப்பது போல 2 வருடம் வாழ்ந்து, ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார்.

100 கோடி சொத்து

சம்பாதித்த சொத்து எல்லாமே கணவரிடம் சென்றபிறகும் அவைகளை வாங்க முடியல. விவாகரத்து செய்யலாம் என்றால், வேறொரு பெண்ணுடன் கணவர் வாழ்வதற்கான ஆதாரத்தையும் ஸ்ரீவித்யாவால் காட்ட முடியல. கிறிஸ்தவ மதத்தில் எளிதாக விவாகரத்து செய்யவும் முடியாது. அதுபோல, பாவனி விவகாரத்தில், அப்படி எதுவும் நடக்காது. நல்ல கணவன் - மனைவியாக இவர்கள் இருந்தாலே போதும்.

100 கோடிக்கு மேல் பிரியங்காவுக்கு சொத்து இருக்கு.. அவரது கணவருக்கும் சொத்து இருக்கு. இரு மதம் முறைப்படி திருமணம் நடக்காமல், பிரியங்கா தாலி எடுத்து தந்து திருமணம் நடந்துள்ளது.. அமீர் - பாவனி காதலுக்கு பிரியங்கா ஆரம்பத்திலிருந்தே உதவியாக இருந்திருக்கிறார்.. சிவாஜி கல்யாணத்தில் எம்ஜிஆர்தான் அனைவருக்கும் விருந்து பரிமாறினாராம்.. அதுபோல பாவனி - பிரியங்கா நட்பும் இருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+