ரூ.1000 கோடி அடிக்குதா தக் லைஃப்? கமல்ஹாசனின் டெல்லி டார்கெட்.. பட்ட பாடு இருக்கே? சபாஷ் சக்திவேல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசன் நடித்து, மணிரத்னம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு சேர்ந்து 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்த, 'தக் லைஃப்' (Thug life) திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டால், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது எப்படி ஏற்படும், தவிர்க்க முடியுமா என்பதை பார்க்கலாம் வாங்க.

கர்நாடகாவின் தக் லைப், விநியோக உரிமையை வெங்கடேஷ் கமலாகர் என்பவர் ₹8 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த திரைப்படம் கன்னடம் உள்பட பல மொழிகளில் வெளியிடப்படுவதால், பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் இந்த முதலீடு செய்யப்பட்டது. ஒருவேளை படம் நல்ல வெற்றி பெற்றால் 50 கோடி வரை வசூலித்திருக்கும்.

Television Kamal Haasan Thug Life

கமல்ஹாசன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, "தமிழிலிருந்து பிறந்தது கன்னடம்" என்றார்.. அவரது இந்த கருத்துக்கு பெரும் சலசலப்பு கர்நாடகாவில் எழுந்துள்ளது... மொழி உணர்வை புண்படுத்திவிட்டதாக சொல்லி கன்னடக அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன..

கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் (KFCC) கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தக் லைஃப் தடை செய்வதாகவும் அறிவித்துள்ளது.. சினிமாவையும் தாண்டி அரசியலிலும் இந்த பிரச்சனை எதிரொலித்துள்ளதால், கமலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

ஆனால், கமல்ஹாசனோ தன்னுடைய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை.. வரலாற்று ஆசிரியர்கள் சொன்ன கருத்தையே தான் சொன்னதால், மன்னிப்பும் கேட்க போவதில்லை என்று அறிவித்துவிட்டார்..

"நீங்களும், நாங்களும் வேறு வேறு கிடையாது, நாம அனைவருமே அண்ணன் - தம்பிதான்.. நமக்கு ஒரே தாய் தமிழ்த்தாய்தான்" என்ற ஒற்றுமை நோக்கத்தில் பேசியிருப்பதாகவும் விளக்கம் தந்திருந்தார். இதனால் கர்நாடகாவில் தக்ஃலைப் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், நம்முடைய ஒன்இந்தியா சேனலுக்கு, கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்னமும் சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளனர்.. அந்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. அதன் சுருக்கம்தான் இது:

கேள்வி: டெல்லியை மையப்படுத்தின படமாக தக் லைஃப் இருக்கிறதே? இதற்கு ஏதாவது காரணம் உள்ளதா? டெல்லி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கமல்ஹாசன்: டெல்லி ஏராளமான வரலாற்று சம்பவங்களை நிகழ்த்திய முக்கிய இடமாகும்.. டெல்லி மீதான சார்பு தன்மை அதிகம்.. வரலாற்றில் பல அடுக்கடுக்கான நிகழ்வுகள் டெல்லியில்தான் நடந்துள்ளது.. நாட்டுக்காக உயிர்தியாகம் செய்தோர் சாம்பல்கள் இன்னமும் டெல்லியின் தெருக்களில் படிந்துள்ளது.. அதன்மீது நாம் இன்னமும் நடமாடிக் கொண்டிருக்கிறோம்.. அந்தவகையில் டெல்லியை பார்க்கும்போது, பெருமையாக உள்ளது.

கேள்வி: 38 வருடங்கள் கழித்து நீங்கள் இருவரும் சேர்ந்திருக்கிறீர்கள்.. இதை எப்படி பார்க்கிறீர்கள்? ஏன் இதுவரை இணைந்து பணிபுரியவில்லை?

கமல்ஹாசன்: 38 வருடங்கள் கழித்து இணைந்துள்ளது, பழைய மாணவர்களை மீண்டும் சந்திப்பது போல மகிழ்ச்சியாக உள்ளது.. ரீ-யூனியன் போல இருக்கிறது.. 38 வருடங்கள் ஏன் இணையவில்லை என்றால், அதற்கென எந்த காரணமும் இல்லை... ஒன்றாக பணிபுரிவதற்கான கருத்து வேறுபாடுகளும் எதுவும் இல்லை.. எங்களுக்கு அதற்கான வாய்ப்பு அமையவில்லை.. அதுவும் இல்லாமல், 2 பேரும் சேர்ந்து பணிபுரிவது எளிதானதும் இல்லை.. திடீரென ஒருநாள் இப்படியொரு படம் எடுக்க இருவருமே முடிவு செய்தோம்.. உடனே அதற்கான படவேலையில் மளமளவென இறங்கிவிட்டோம்.

கேள்வி: நாயகன், தக் லைஃப் படங்களுக்கான வித்தியாசம் என்ன?

கமல்ஹாசன்: நாயகன் படத்தில் நாங்கள் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டோம்.. எங்களது கஷ்டங்கள் அப்போது யாருக்குமே வெளியே தெரியாது.. ஆனால், இன்டர்நேஷனல் தரத்துக்கு எடுத்தோம்... அப்போது எங்களிடம் போதுமான பட்ஜெட் இல்லை.. குறிப்பாக அன்றிருந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான பட்ஜெட் இல்லை.. ஒரு மேக்கப்மேனை கூட வெளிநாட்டிலிருந்து தருவித்து கொள்ள முடியாத நிலைமை இருந்தது.. அதனால், நானே நாயகன் படத்தில் நடித்தவர்களுக்கு அசிஸ்டென்ட் மேக்கப் மேனாகவும் பணியாற்றினேன்.. ஆனாலும் நாயகன் படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தோம். இப்போது தக்லைஃப் படத்துக்கு மேக்கப் மேன் அமெரிக்காவிலிருந்து வருகிறார். எனக்கு ஜப்பானிலிருந்து மேக்கப் மேன் வந்தார்.

கேள்வி: தக் லைஃப் படத்திலும், நாயகன் படத்திலுள்ள சக்திவேல் என்ற கேரக்டர் வந்துள்ளதே? அப்படியானால் நாயகனும் தக் லைஃப்பும் ஒன்றா?

கமல்ஹாசன்: கிடையாது.. சக்திவேல் என்ற பெயரில் நான் பல படங்களில் நடித்துள்ளேன்.. நாயகன் மட்டுமல்ல, சதிலீலாவதி, தேவர் மகன் படத்திலும் என்னுடைய கேரக்டர் பெயர் சக்திவேல் என்றே பயன்படுத்தியிருக்கிறேன். அமிதாப் பச்சன் நிறைய படத்தில் விஜய் என்ற கேரக்டரில்தான் நடிப்பார்.. அதற்காக எல்லா படங்களும் ஒன்று என்று கூற முடியுமா? அதுபோலதான் நான் சக்திவேல் என்ற பெயரில் பல படங்களில் நடித்துள்ளேன்.. நாயகனுக்கும், தக்லைஃப் படத்துக்கும் சம்பந்தமில்லை..
மறைந்த இயக்குனர் ஆர்.சி சக்தியின் பெயர்தான் அது.. ஆர்.சி.சக்தி எனக்கு ஒரு சகோதரர்.. எனக்கு நண்பர்.. என்னை எழுதவைத்து அழகு பார்த்தவர்.. எனவே, அவரது பெயரை பயன்படுத்தி வருகிறேன்.

கேள்வி: இந்த 38 வருஷத்தில் என்ன மாற்றங்கள் உங்கள் இருவரிடமும்?

மணிரத்னம்: கமலிடம் ஒரு மாற்றமுமில்லை.. எப்போது வந்தாலும். மொத்த படத்தையும் தன்னுடைய தோளில் தூக்கி சுமந்து கொள்வார் கமல்.. இந்த படத்தில்கூட, ஒவ்வொரு காட்சியிலும் கமலின் டச் இருக்கும்.. மதியம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்காமல்கூட கமல் இந்த படத்தில் பணிபுரிந்துள்ளார்.

அதுமட்டுமல்ல கமல் இருந்தாலே அத்தனை நடிகர்களும் பெஸ்ட்டாக நடித்தாக வேண்டும்.. அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் பெஸ்ட்டாக பணிபுரிந்திட வேண்டும்.. ஏனென்றால், அவர்கள் அத்தனை பேரின் பணிகளும், அவர்களைவிட கமலுக்கு நன்றாகவே தெரியும்.. அதனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும், சின்ஸியராகவும், கடின உழைப்புடனும் இதில் பணிபுரிந்துள்ளனர்.

கேள்வி: ரூ.1000 கோடி கிளப்பில் தக் லைஃப் சேருமா?

மணிரத்னம்: நான் எந்த கிளப்பிலும் மெம்பர் கிடையாது.. 1000 கோடி என்னுடைய நோக்கமில்லை.. நல்ல படமாக, கமர்ஷியலாக, யதார்த்தமாக படங்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் படங்களை எடுக்கிறோமே தவிர, 1000 கோடியை மையப்படுத்தி கிடையாது.

கமல்ஹாசன்: நான் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகன்.. அவரது படம் வெறும் பொழுதுபோக்கு படம் கிடையாது.. அவர் சிரிக்க மட்டுமே வைக்கவில்லை, சிந்திக்கவும், ஆழமான கருத்துக்களை மக்களிடமும் கொண்டுபோய் சேர்த்தவர்.. அதுபோலதான் என்னுடைய படமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். தக் லைஃப் படம், விமர்சனங்களையும் தாண்டி மக்களிடம் போய் சேரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+