1000 கோடி வெள்ளை பணம்? யாரிந்த ஆகாஷ் பாஸ்கரன்.. விஐபி வீட்டில் சலசலப்பு.. விக்கித்த கோடம்பாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விசாரணைக்கு ஆஜராகவில்லை... எனவே, அவரிடம் பணம் பெற்ற நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் சினிமா பிஆர்ஓக்கள் 2 பேரையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து ஆகாஷ் பாஸ்கரன் யார் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்துள்ளர்.

King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "உதவி இயக்குனராக இருந்து 1000 கோடி செலவில் படங்களை தயாரிக்கிறாராம் ஆகாஷ் பாஸ்கரன்.. ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தபோது, சினிமாவின் தொழில்நுட்பங்களையும், நுண்ணறிவாற்றலை பெற்றுக் கொண்டார்.. பிறகு, தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் தயாரிப்பாளரும் இவரே..

திடீர் பணம் எப்படி படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், தனுஷ் திரைக்கதை வசனம் எழுதி விரைவில் வெளிவர உள்ள இட்லி கடை என்ற படத்தின் தயாரிப்பாளரும் ஆகாஷ் பாஸ்கரன்தான். இன்னும் பெரிய பெரிய படங்களை திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆனால், உதவி இயக்குனராக இருந்தவருக்கு இவ்வளவு பணம் எப்படி? பலரும் கேட்கிறார்கள். மனைவி வழியில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு கோடீஸ்வரனாகும் பாக்கியம் கிடைத்தது.. ஏற்கனவே ஆகாஷின் தந்தை பாஸ்கரன், சேலத்தில் சொர்ணமால்யா என்ற மிகப்பெரிய நகைக்கடையை நடத்தி வருகிறார்.

மு.க. முத்துவின் பேத்தி

சமீபத்தில் சேலத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு திருமணமானது.. மனைவியின் பெயர் தாரணி.. இந்த தாரணியின் அப்பா, கவின் கேர் என்ற பால் நிறுவனத்தை நடத்தி வருகிறார் இந்த தாரணி யார் தெரியுமா? இவர்தான் கலைஞர் கருணாநிதியின் கொள்ளுப்பேத்தி.. அதாவது, மு.க. முத்துவின் பேத்திதான் தாரணி..

எனவே மனைவி வழியில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு பணம் வந்துள்ளது.. அதை சினிமாவில் முதலீடு செய்திருக்கிறார். அமலாக்கத்துறைக்கு திடீர் பணக்காரர்களை கண்டாலே பிடிக்காது.. எப்படி பணம் வந்தது? எங்கிருந்து வந்தது? என்று கேட்டு விசாரிப்பார்கள்.. அந்த அடிப்படையில்தான், ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது.. 1000 கோடி பிடிபட்டது என்றார்கள்.. அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை..

வெள்ளை பணம்

2வது நாளாகவும் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ரெய்டு நடக்கிறது. இந்த சம்பவம்தான் கோடம்பாக்கத்தையே உலுக்கி கொண்டிருக்கிறது.. திமுக அரசுக்கு நெருக்கடி தர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே மத்திய அரசு, இதுபோன்ற விஷயங்களை செய்து வருகிறது. ஆனாலும் நெருப்பின்றி புகையாது..

கிடைத்துள்ள பணம் "வெள்ளை" என்றால், இந்த வழக்கிலிருந்து வெளிவந்துவிடலாம்.. ஆனால் எங்கிருந்து பணம் எடுக்கப்பட்டது? என்பது குறித்த விசாரணை நீண்டு செல்லும். அதற்குள் ஆகாஷ் பாஸ்கரனின் பெயர் கெட்ட பெயராகிவிடும்.. அப்போதும் அது பப்ளிசிட்டியாகிவிடும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+